Sunday, April 6, 2014

சென்ற வாரம் பெய்த மழையில், இன்று பூத்த புகைப்படங்கள் !!

இங்குள்ள‌ நீர் ஆதாரங்களில் போதிய நீர் இல்லாததால் தண்ணீர் சிக்கனம் கருதி செடிகளுக்கு வாரத்தில் இரண்டு தடவை தாண்ணீர் பாய்ச்சலாமா அல்லது ஒரு தடவையே போதுமா, தண்ணீர் பாய்ச்ச‌ குழாய்களைப் பயன்படுத்தாமல் ஸ்ப்ரிங்லர் பயன்படுத்தவும், நீர் அதிகம் தேவைப்படும் செடிகளை அகற்றிவிட்டு நீர் குறைவாகத் தேவைப்படும் செடிகளை வைக்கவும், அப்படி வைத்தவர்களின் பேட்டிகளையும் ஒளிபரப்பினார்கள்.


இதற்கிடையில் கடந்த இரண்டு வாரங்களாக‌ மழை வந்து இலவசமாகவே 'போதும் போதும்' எனுமளவுக்கு செடிகளை நனைத்துவிட்டது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நல்ல மழை நேரத்தில், இரண்டு வாரங்களுக்கு முந்தைய ஞாயிறன்று, எங்க பாப்பாவுடன் ஷாப்பிங் முடிச்சுட்டு, In_N _ Out _ ல் பர்கர் & ஃப்ரென்ச் ஃப்ரைஸ் வாங்கிக்கொண்டு, பக்கத்திலுள்ள பூங்காவில் காரில் இருந்தவாறே ஜாலியாக ஊர் கதைகளை பேசிக்கொண்டே சாப்பிட்டபோது எடுத்தவைதான் கீழேயுள்ள படங்கள் ..............(ஹும்)


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


கடந்த‌ வெள்ளிக் கிழமை(04/04/14) காலை நான் 'வாக்' போனபோது
பூங்காவிலுள்ள‌ ஈரம் மிகுந்த நடைபாதையில் காலை சூரியனின் கதிர்கள் பட்டு சிறிது மேடான பகுதி மெல்ல மெல்ல‌ ஈரம் காய்வதால் கட்டம் கட்டமாக இருப்பதுபோல் தெரிகிறது. இதைப் பார்த்தபோது சின்ன வயசுல ஈர மண்ணில் கட்டங்கட்டமாக கோடு போட்டு சில்லு(அ)நொண்டி விளையாடியது நினைவுக்கு வந்தது.


ஹைய்யோ, படத்துல(தாங்க‌)  நான் விழுந்திருக்கிறேன் !  எங்கள் ஊரில் மழை பெய்ததையும் ........................... அடாது மழையிலும் விடாது நான் 'வாக்' போகிறேன் என்பதையும் ............................................ இப்பவாச்சும் நம்புறீங்களா !!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

12 comments:

  1. ///அடாது மழையிலும் விடாது நான் 'வாக்' போகிறேன் என்பதையும் ............................................ இப்பவாச்சும் நம்புறீங்களா !! ////
    நோ :) நாங்க காலை பார்த்தா தான் நம்புவோம் சித்ரா :)

    எல்லாமே அழகான குளிர்ச்சியான படங்கள் :) அதுவும் அந்த முதல் படம் மழை துளி அப்படியே தீபாவளி மத்தாப்பு சுறு சுருவத்தி போலவே இருக்கு வாவ் !!

    Angelin .

    ReplyDelete
  2. வாங்க ஏஞ்சலின்,

    "நோ :) நாங்க காலை பார்த்தா தான் நம்புவோம் சித்ரா :)" _______ இதோ இப்பவே போய் யாரையாவது(காலுடன்) பிடிச்சிட்டு வந்து போட்டுட‌றேன்.

    எனக்கொன்றும் பிரச்சினையில்லை போட்டுடலாம், ஆனால் பயப்படமாட்டேன்'னு நீங்க உறுதியா சொல்லணும் !! மற்ற படங்களைவிட எங்களின் நிழல் படங்கள்தான் என் அலைபேசியில் நிறைய உள்ளன.

    வருகைக்கும், படங்களை ரசித்து கருத்திட்டமைக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  3. படங்கள் அருமை... அப்புறம் நாங்களும் நம்பிட்டோம்... (!)

    ReplyDelete
    Replies
    1. பயமுறுத்தினாத்தான் நம்புவீங்கபோல !

      Delete
  4. மழை புகைப்படங்கள் அருமை. பகிர்வுக்கு நன்றி தோழி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் நன்றிங்க தமிழ்முகில்.

      Delete
  5. அசத்துகிறீர்கள் சித்ரா,கவித்துவமான தலைப்பு கொடுத்து.
    அடாது மழை பெய்தாலும், விடாது வாக் போகிறீர்கள் என்று சொல்கிறீர்கள். நம்பிட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. "கவித்துவமான தலைப்பு கொடுத்து" ________ ஹா ஹா நம்ம பழமொழியைத்தான் கொஞ்சம் மாற்றிப் போட்டுள்ளேன்.

      'நம்பிட்டேன்' __________ நீங்களுமா !! யாருமே நம்ப மாட்டிங்கிறாங்க. அடுத்த பதிவுல படத்துடன் போட்டுட்டாப் போச்சு. வருகைக்கு நன்றிங்க.

      Delete
  6. அருமையான புகைப்படங்கள்......

    அதிலும் சாலை படம் - “ரைட்டா.... ரைட்டா...” என்று ஒரு குரல் உள்ளுக்குள் கேட்டது! :)

    ReplyDelete
    Replies
    1. ஒரு இரண்டு வாரமாக இந்த நடைபாதை இப்படித்தான் ஈரமாவதும், பிறகு காய்வதுமாக இருந்தது. ஒவ்வொரு நாளும் உடன் விளையாடிய தோழிகளும், இப்போ அவர்கள் எங்கெங்கே இருக்கிறார்கள் என்ற நினைவுடனும்தான் 'வாக்' போனேன்.

      வருகைக்கு நன்றிங்க வெங்கட்.

      Delete
  7. நடங்க,,,,,,நடங்க..... நடந்துகிட்டே இருங்க.....
    உங்கள் முகதரிசனம் கிடைக்கும் அந்த நந்நாள் என்றோ?

    ReplyDelete
  8. 'பாக்காமலேயே இருந்திருக்கலாமோ'ன்னு தோணப் போவுது ! ஹா ஹா ஹா !

    ReplyDelete