இங்கு வானம் எப்போதும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். மேலே படத்திலுள்ளதுபோல் ஒரே நீல நிறம்,
அல்லது கீழேயுள்ளதுபோல் மங்கலான வெள்ளை நிறம், இவையிரண்டும்தான் மாறிமாறி வரும்.
அப்படியே மேகங்கள் உருவானாலும் வானவூர்திகள் அவற்றினிடையே இங்குமங்குமாகப் புகுந்து நேர்நேர்(தேமா இல்லீங்கோ !) கோடுகளாக்கிவிடும்.
சில நாட்களில்தான் மேகக் கூட்டங்களை யாரும் கலைத்து விடாமல் வெள்ளியைக் கொட்டிவிட்டதுபோல் அல்லது பஞ்சை பொதிந்து வைத்ததுபோல் அழகாகக் காட்சியளிக்கும்.
அப்படியான ஒரு வெள்ளிக்கிழமை(போன வெள்ளிதான்) காலை நான் பூங்காவில் 'வாக்' போனபோது, வானத்தின் காட்சிகள் மாறியதை இங்கே பாருங்கோ ......... !!
அழகான வானம்! பிரம்மாண்டமா அசத்துது உங்க படங்கள்! :)))) உங்க ஊர்ல வானம் நிறம் மாறுமா மாலையில்?
ReplyDeleteஎங்க ஊர்ல எப்பவுமே வானம் மேகக்கூட்டங்களுடந்தான் இருக்கு. க்ளியர் ஸ்கை பார்ப்பது அரிது. மாலை நேரத்தில் பொன்வானமாக மாறும் காட்சியும் இங்கே தினமும் நடக்கும். சால்ட் லேக் சிட்டி, பாஸ்டன் பக்கம் இருந்தபோதெல்லாம் ஆரஞ்ச் கவுன்ட்டி வானம் போன்ற அழகான வானத்தை நான் பார்த்ததில்லை! :)
முதல் படம் மட்டும் இன்று காலை எடுத்தது. இங்கு பெரும்பாலும் இப்படித்தான் இருக்கும் மகி. இப்பவும் இப்படித்தான் இருக்கிறது. மாலையானால் சூரியன் மறையும்போது நிறம் மாறுவது கொஞ்சம்தான் தெரியும், எதிர்வீடு மறைத்துவிடும்.
Deleteமற்றவை வெள்ளி காலை 9:30 டூ 10:30 க்குள். வாக் போனபோது எடுத்தது. அன்று காலையில கிளம்பியபோது வெயில். வாக் முடிச்சுட்டு திரும்புவதற்குள் இருட்டு + தூறல்.
படங்கள் அனைத்தும் அருமை... ரசிக்க வைக்கும் அழகிய ரசனை... வாழ்த்துக்கள்...
ReplyDeleteபடங்களை ரசித்துக் கருத்திட்டமைக்கு நன்றிங்க தனபாலன்.
Deleteஅழகான வானம். புகைப்படங்களை பகிர்ந்தமைக்கு நன்றிகள் தோழி.
ReplyDeleteவருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் நன்றிங்க தமிழ்முகில்.
Deleteஅருமையான catch indeed :)) அதை வெச்சி ஒரு வலைபபதிவே பின்னிட்டீங்க பேஷ் பேஷ் ரொம்ப நன்னாருக்கு :))
ReplyDeleteசுந்தர்,
Deleteஉங்கள் முதல் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றிங்க.
ReplyDeleteவணக்கம்!
நீலநிற வானழகு நெஞ்சுள் நிறைந்தொளிரக்
கோலமுறச் தந்தீா் குளிா்ந்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
கவிஞா் கி. பாரதிதாசன் ஐயா,
Deleteஇனிய வணக்கம். பதிவைப் பார்வையிட்டதோடு தங்களின் கவித்துவமான கருத்துக்கும் நன்றி ஐயா.
வானம் தான் எவ்வளவு அழகு [ஆருங்கள். நின்று நிதானித்துப் பார்க்கிறோமா? இல்லையே!
ReplyDeleteரசனியுடன் படம் பிடித்துப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சித்ரா.
வானம் ரசிக்கும்படி இருந்ததில் மகிழ்ச்சிங்க.
Deleteநமக்கு வேலை பளுவினால் ரசிக்க முடிவதில்லை. அப்படியே ரசிக்க விரும்பினாலும் கட்டிடங்களின் ஆக்கிரமிப்பினால் பார்க்க முடியாமல் போய்விடுகிறது.
வருகைக்கும் நன்றிங்க ராஜலக்ஷ்மி.
அருமையான படங்கள்.....
ReplyDeleteஇயற்கை எழில் கொஞ்சுகிறது. தூறலில் நனைவதில் நிச்சயம் சுகம் இருக்கிறது!
ஒரு சமயம் நெய்வேலிக்கு டூர் வந்து மரங்கள் நிறைந்த வீடுகளைப் பார்த்து அதிசயித்தது இன்றும் நினைவில் உள்ளது. பசுமை நிறைந்த இடம் என்றாலே கொள்ளை அழகாகத்தான் இருக்கிறது.
Deleteவருகைக்கு நன்றிங்க வெங்கட்.