புதுமணத் தம்பதி தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.
கணவன் மனைவியிடம் சொன்னான், "உனக்கு ஏதேனும் விருப்பம் இருந்தா சொல்லு, நிறைவேத்த முடியுதான்னு பார்க்கிறேன்"னு.
மனைவி சொன்னாள், "மொதல்ல நா(ன்) வேலைக்குப் போகக் கூடாது".
கணவனோ, " நீ வேலைக்குப் போவது உனக்காகத்தானே, எதுக்கும் மறு பரிசீலனை செய்" என்றான்.
"படிக்கும் காலத்திலிருந்து இப்போ வரைக்கும் காலையிலேயேக் கிளம்பி ..... பஸ்ஸைப் பிடித்து ..... போரடிச்சாச்சு, அதனால அட்லீஸ்ட் கொஞ்ச நாளைக்காவது நான் வீட்டில் இருக்கிறேனே" என்றாள்.
"சரி, உனக்கு அதுதான் விருப்பம் என்றால் எனக்கும் ஓகே, வேறு ஏதேனும்" என்றான்.
"துணி துவைக்கக் கூடாது" என்றாள்.
"சரி, நான் இனிமே துணியே துவைக்கமாட்டேன்" என்றான் சிரித்துக்கொண்டே.
"அய்ய்யோ, என்னைச் சொன்னேன்" என்றாள்.
"சரி அடுத்து" என்றான்.
"பாத்திரம் கழுவக் கூடாது, வீடு பெருக்கக் கூடாது" என அடுக்கினாள்.
"இதையெல்லாம் ஈஸியாக்க ஒவ்வொன்னா வந்திட்டிருக்கு, பார்க்கலாம்" என்றான்.
"முக்கியமா சமைக்கவேக் கூடாது" என்றாள்.
நல்லவேளை, 'சமைத்தே தீருவேன்'னு அடம் பிடிக்காமல் போனதில் அவனுக்கு மகிழ்ச்சியே.
ஒருசில வருடங்கள் கழித்து கணவனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்து குடும்பத்துடன் அங்கே போய் குடியேறினார்கள்.
ஒரு வழியா செட்டில் ஆனபின், " வேலைக்குப் போகாமல் இருப்பது தொடங்கி நீ கேட்டது எல்லாமும் நிறைவேத்திட்டேனா ?" என்றான் சந்தோஷமாக. தற்போதைக்கு அவளே விரும்பினாலும் வேலைக்குப் போக முடியாது என்பது வேறுவிஷயம்.
"ம்ம்ம்ம்ம் .... ஆனால் வீட்லதான் ஜனங்களே(சுற்றம்) இல்ல" என்றாள் சோகமாக.
" அப்போ, நீ இத கேக்கவே இல்லயே" என்றான் கணவன்.

கதாநாயகி யார் என்று 'கெஸ்' செய்து விட்டேன் . பின் வரும் கமெண்டுகளில் யாராவது 'கெஸ்'செய்து விடுவார்கள் என்று நினைக்கிறேன்.
ReplyDeleteநெஜம்ம்ம்மா நீங்க நெனக்கிற ஆள் இல்லீங்கோ :)))
ReplyDelete:) துணி துவைக்க, பாத்திரம் கழுவ, வீடு கூட்ட தேவையில்ல...சரி!! சமைக்கவே கூடாது என்று சொன்ன கதாநாயகி இப்போ சமைக்காம இருக்கிறாங்களோ?? ;)
ReplyDeleteகற்பனை நாயகி கண்ணில் பட்டதும் கேட்டு சொல்கிறேன் மகி :)
Deleteசுற்றத்தைத் தக்கவைக்கும் யுத்தி தெரியாத பெண்.. உணர்வதற்குரிய காலம் இப்போதுதான் வந்திருக்கிறது போலும்.
ReplyDeleteபுதிதாக வரும்போது சுற்றங்களுடன் வர முடியாதே கீதா !
Deleteஹஹஹா......யாரோட அனுபவம்...? ம்......
ReplyDeleteநிறைய பேரின் நிலைதான் உமையாள் !
Deleteயாரோ இவள்யாரோ என்னபேரோ அறியேனே!
ReplyDeleteசுற்றம் இல்லை. அதனால் குற்றமுமில்லை என்று சொல்லியிருக்கலாம் அல்லவா
பின்னூட்டத்தைப் படிக்காமல் பாடத்தான் தோன்றியது:)
Deleteஉங்களின் அனுபவ வார்த்தைகள் உண்மைதானம்மா ! அன்புடன் சித்ரா !
பரவாயில்லையே அப்பெண்ணின் விருப்பங்களுக்கு இசையும் கணவன்!!! அதுவும் சமைக்கவே மாட்டேன் என்பதையும்!! அப்போ அந்தப் பொண்ணு என்னதான் செய்யும்? போரடிக்காது?
ReplyDeleteசுற்றம் இல்லை என்றால் போரடிக்கும்தான்...அது சரி அந்தச் சுற்றம் அதுவரை கமென்ட் அடிக்காமலா இருந்தது!!!!!!
//வீட்லதான் ஜனங்களே(சுற்றம்) இல்ல// இதுக்குத் தானே நாங்க இங்க ஃப்ரெண்ட் பிடிச்சு வைக்கிறது. :-)
ReplyDeleteஇமா,
Deleteகூட்டத்திலேயே, அதிலும் நடுவிலேயே இருந்துட்டு திடீர்னு வெளியே வந்ததும் வந்த பிரச்சினை !
ஃப்ரெண்ட்ஷிப் எல்லாம் மூன்று அல்லது ஆறு மாதங்கள் இப்படித்தானே இருந்தோம். திடீர்னு ஒருத்தர் வருவாங்க, அடுத்த இரண்டுமூன்று மாதங்களிலேயே பை பை சொல்லிட்டு போய்டுவாங்க. இது பழகவே ரொம்ப நாள் ஆச்சு.