Friday, October 14, 2016

Half Moon Bay Beach !



எங்க ஊருக்குக்(?) கொஞ்சம் பக்கத்தில் இருக்கும் ஒரு ஊர் Half Moon Bay. ஜூன் மாதத்தில் ஒருநாள் அங்குள்ள பீச்சுக்குப் போனபோது எடுத்த கடல் அலைகளின் படங்கள் !

கடல் அலைகளில் எவ்வளவு நேரம் காலை நனைத்துக்கொண்டு இருந்தாலும் அலுப்பு வராதுதானே. அப்படி நினைத்துத்தான் போனேன். ஆனால் இரண்டொருமுறை காலை நனைத்ததுமே குளிர் ஜுரமே வந்திடும்போல இருந்தது. அந்தளவுக்குத் தண்ணீர் ஜில்ல்ல்லுன்னு இருந்துச்சு. வெயிலும் அதிகம், அதற்கு இணையாக‌ குளிரும் போட்டிபோட்டது !

கோடையிலேயே இந்த போடு போட்டால் ? குளிர்காலத்தில் எப்படி இருக்குமோ !!

இதற்குமேல் நின்றால் urgent care குத்தான் போகணும்னு வெறும் மணலிலேயே நீண்ட தூறம் காலாற நடந்துவிட்டுத் திரும்பினோம்.

                               போகும் வழியில் ஓரிடத்தில் கிறிஸ்துமஸுக்காகத் தயாராகும் மரங்கள் !

எங்க ஊரு பீச்சிலும் குதிரை சவாரி உண்டுங்கோ ! என்ன ஒன்னு, இதுக்குனு தனி பாதை இருக்கு.
கடலின் அழகில் மயங்கி, வர்ணிக்க வார்த்தைகள் வராததால் (ஹி ஹி தெரியாது என்பதுதான் உண்மை) படங்களை அப்படியே பார்த்துக்கொண்டே செல்வோமே ! !
நாங்கள் போனபோது ஆள் அரவமே இல்லாமல் இருந்தது. நேரம் ஆகஆக சேர், குடை, பந்து என இவை சகிதமாக மக்கள் கூட்டம் வரத் தொடங்கியது. ஒரு பக்கம் மக்கள் கூட்டம் தாங்கள் கொண்டு வந்திருந்த கட்டுசோத்தைப் பிரிச்சு ஒரு வெட்டு வெட்டிக்கொண்டிருந்தனர். பார்க்கும் நமக்கும் பசி வரத்தானே செய்யும் !
மதியம் வீட்டுக்குக் கிளம்பும்போது நல்ல பசி. சரி அங்குள்ள நம்ம ஊர் ரெஸ்டாரண்ட் எப்படி இருக்கும்னு போனோம். ஒரு மணி ஆச்சே, எவ்வளவு கூட்டம் இருக்குமோன்னு கொஞ்சம் பயம்தான். ஏன்னா, எங்க ஊர்ல சாதாரணமாவே கூட்டம் வழியும், அதிலும் சனிஞாயிறு என்றால் அவ்வளவுதான். கடைக்கு வெளியிலயே ஒரு பெரிய க்யூ தென்படும். ஆனால் இங்கே கடையில் ஒரு காக்காகுருவியைக் கூடக் காணோம் ! நாங்க மட்டுமே :) நாங்க பாதி சாப்பிட்ட நிலையில் ஓர் அமெரிக்கர் வந்து சூப் வாங்கி டேஸ்ட் பார்த்துவிட்டு, ஆல்இன்ஆல் ஆன அங்கிருந்த அம்மாவிடம் 'அருமை' எனக் கூறினார். எங்களுக்கும் 'இல்லாத ஊரில் இது பரவாயில்லை' எனும்படியே இருந்தது.

போய்வரும் வழியெங்கும் காடும், மலைகளும் இருப்பதால் கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருந்தது. வழியில் ஆங்காங்கே நிலத்தில் காய்கறிகள், பழங்கள் விற்பனை நடந்தது. இறங்கி வாங்கும் பொறுமையெல்லாம் இல்லை, அடுத்த தடவை வந்தால் வாங்கலாம் என பேசிக்கொண்டோம் !

22 comments:

  1. சீறி வரும் அலையும் , அலையை அணைத்துக் கொள்ளும் கரையும் அழகு. படங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் தோழி.

    ReplyDelete
    Replies
    1. கவிதை வடிவிலான பின்னூட்டம் கவர்ந்தது முகில் !

      Delete
  2. கடலை எத்தனை மணி நேரம் பார்த்துக் கொண்டிருந்தாலும் அலுப்பு தட்டாது. எவ்வளவுப் பொக்கிஷங்கள் உள்ளடக்கி வைத்திருக்கிறது கடல்.
    'முடிந்தால் எடுத்துக் கொள்' என்று கரை வரை வந்து விட்டு செல்கிறதோ அலைகள்.
    அழகானப் படங்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க, கடலைப் பார்த்துக்கொண்டு மணிக்கணக்கில் இருந்தாலும் நேர‌ம் போவது தெரியாது. உங்கள் வரிகளும் கவிதை மாதிரியே இருக்கு :)

      Delete
  3. அழகான படங்கள்..... கடல் எத்தனை நேரம் பார்த்தாலும் அலுக்காத விஷயம்....... ஓய்வே இல்லாமல் உழைத்துக் கொண்டிருக்க, நாம் ஓய்வெடுக்க கடல் இருக்கும் இடத்திற்குச் செல்வது எத்தனை முரண்! :)

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், நீங்க சொல்வதும் உண்மைதான் !

      Delete
  4. பஸிஃபிக் தண்ணி எப்பவுமே கூல் தானே..அதும் உங்க ஊர்ல கேக்க வேணுமா?? !! அழகா இருக்கு ஃபோட்டோஸ் எல்லாமே!!

    ReplyDelete
    Replies
    1. மற்ற இடங்களைவிட இங்கு இன்னும் கொஞ்சம் அதிகமா சில்'லுன்னுதான் இருக்கு மகி.

      Delete
  5. கடல் எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காத ஒன்று. அருமை அழகான படங்கள்!!!

    கீதா: ஆம் சித்ரா! அப்போது போயிருக்கோம். கேமரா கிடையாது அப்போது எனவே படங்கள் எதுவும் இல்லை. இப்போது மீண்டும் உங்கள் உதவியால் இடத்தைப் பார்த்தாயிற்று. தண்ணீர் செம சில்லுனு இருக்கும். நாங்கள் விண்டரில் வேறு சென்றோம் இதற்கும் மற்றும் 19 மைல் ட்ரைவ். ஐயோ பசிஃபிக் தண்ணிய தொடக் கூட முடியலை!! ஆனாலும் விடுவோமா...கொஞ்சம் ரகளை செய்துவிட்டுத்தான் வந்தோம். விண்டரில் கூட வெயில் கொஞ்சம் சுளீர் என்றுதான் இருந்தது.

    எங்கள் தளத்தில் கடல் படம் சில ஃப்ளாஷ் போட்டுதான் எடுத்தேன் சித்ரா. சில ஃப்ளாஷ் போடாமல் இயற்கை அழகு வேண்டும் என்று. அந்த பசபசப்புப் படங்கள் ஹாண்ட் ஷேக் இல்லையாம் ஃபோட்டோ கடைக்காரன் கிட்டயே போய் கேட்டேன். நம்ம கண்ணுக்கு மட்டும்தான் பவர் எரர் வரும்னு நினைச்சா என் கேமராலயும் லென்ஸ் எரராம். அதான் சாஃப்ட் மோடில் போட்டு எடுத்தவை அவை அப்படி வந்துள்ளது என்று சொன்னார். எனக்கு அவையும் ஏதோ கான்வாசில் வரைந்தது போன்று இருந்ததால் ரசித்தேன். பகிர்ந்தேன்!!!!!!!

    புகைப்பட வல்லுனர்கள் நீங்கள்!!!! அருமையாக உள்ளன படங்கள் அனைத்தும்!!

    எஃபெக்ட்ஸ் ஆப்ஷனில் சாஃப்ட் மோட் இருப்பதை முயற்சி செய்தேன் அது மிக மிக நன்றாக வருகிறது. இப்போது அது லென்ஸ் எரர்....ம்ம்ம் கொடுத்திருக்கிறேன் பார்க்கலாம்..மூன்றாவது விழி இல்லை என்றால் கஷ்டமாகத்தான் இருக்கிறது...

    ReplyDelete
    Replies
    1. சகோ துளசி & கீதா,

      விண்டர்ல போனீங்களா !! அப்போ கேட்கவே வேண்டாம். இந்த இடங்களை நினைவுக்குக் கொண்டுவந்ததில் ஒரு சந்தோஷம் :) உங்க மெரினாவைப் பார்த்ததும்தான் நானும் தூசி தட்டி இப்படங்களை எடுத்தேன்.

      17 மைல்ஸ் ட்ரைவ்'னு நினைக்கிறேன், கேள்விப்பட்டதோடு சரி, போனதில்லை கீதா.

      புலி எல்லாம் கிடையாது கீதா, உண்மைய சொல்லட்டுமா, கேமராவோட மல்லுகட்டிப் பார்த்துட்டு,(சில நேரம் வரும், பல நேரம் காலைவாரி விடும்) என்னோட கைபேசியிலதான் எடுக்கிறேன். வசதியாவும் இருக்கு.

      ஆமாம், கேமிரா இல்லைனா கஷ்டம்தான், லென்ஸை சரி பண்ணிட்டு சீக்கிரம் வாங்க.

      Delete
    2. ஆமாம் சித்ரா 17 மைல்ஸ் தான் அடிக்கும் போது டைப்போ....அழகான இடம் போய்ட்டு வாங்க அப்படியே அங்க சீ வாட்டர் ம்யூசியம் இருக்கும் அதுவும் பாருங்க ஆட்டர் செம ஆட்டம் போடும் ரொம்ப அழ்கா இருக்கும்.

      கீதா

      Delete
    3. கீதா,

      இன்னும் நினைவு வச்சு சொல்றீங்கன்னா, அப்போ எவ்ளோ அழகா இருக்கும்னு தோணுது, போக முடிஞ்சா அப்போ உங்களையும் நெனச்சுக்கிறேன் :)

      Delete
  6. வாவ்.. சூப்பர் பீச்.. அழகா படங்கள் எடுத்திருக்கீங்க..
    பேசாம நீங்களும் அவங்களை போல கட்டு சோறு கொண்டு போயிருக்கலாம்ல அக்கா? ரசித்து ருசித்து சாப்பிட்டு இருக்கலாம்..

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நாள் ஆச்சு அபியைப் பார்த்து :) நலம்தானே !

      ஹி ஹி வெளியில சாப்பிடலாம்னுதான் கொண்டுட்டு போகல !

      Delete
    2. நலம் அக்கா.. கொஞ்சம் பிசி ஆகியாச்சு.. இனிமேல்தான் ரொம்ப பிசி :)

      Delete
    3. ஓ சரி சரி, வேலைக்கிடையே அப்பப்போ வந்து எட்டிப் பாருங்கோ அபி !

      Delete
  7. அன்புள்ளசித்ரா உன்னைப் பார்க்க முடியவில்லை. ஜிமெயிலிலும் தொடர்பு கொள்ளமுடியவில்லை. உங்கள் யாவருக்கும் மனமார்ந்த தீபாவளி நல் வாழ்த்துகளும் ஆசிகளும். அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. காமாக்ஷிமா,

      வந்துட்டேஏஏஏன் ! உங்களுக்கும் வாழ்த்துக்கள் ! வாழ்த்துக்களுக்கும் நன்றிமா ! அன்புடன் சித்ரா.

      Delete
  8. என் தளத்திற்கு வந்து தீபாவளி வாழ்த்துக்களைச் சொல்லிவிட்டுப் போனதற்கு ஒரு ஸ்பெஷல் நன்றி, மகிழ்ச்சி.

    உங்களுக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் ! வாழ்த்துக்களுக்கும் நன்றிங்க :)

      Delete
  9. கடற்கரை படங்கள் எல்லாம் அருமை. பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

    ReplyDelete
  10. ஆமாம், அழகா இருக்கு இமா, ஆனா தண்ணிதான் ஜில்ல்ல்லுனு இருந்து பயமுறுத்துச்சி :)

    ReplyDelete