இந்த தடவை ஃபார்மர்ஸ் மார்க்கெட்டில் french purslane என்ற வகை பருப்பு கீரை $ 2:00 க்குக் கிடைத்தது. இதன் இலைகள் கொஞ்சம் சிறியதாகவும், லேசாக சிவந்த தண்டுடனும் இருந்தது.
சென்ற முறை போலல்லாமல் இந்த தடவை பருப்புக் கீரையை ஆய்ந்துகொண்டு, நுனிப்பகுதியை நறுக்கிவிட்டு, தண்டு அத்தனையையும் இரண்டு தொட்டிகளில் நட்டு வைத்தேன்.
துளிர் வருதா பாருங்கோ ......
என்ன அழகு, எத்தனை அழகு ....... !
ஒரு கிண்ண்ணம் கீரை !!
குறைச்சலான விளைச்சல்னு யாரும் நெனச்சிடக்கூடாது பாருங்க, அதனாலதான் கட்டிங் போர்டில் பரப்பி விட்டுள்ளேன்.
மீண்டும் துளிர்விடும் என்ற நம்பிக்கையில் ....
பருப்புக் கீரை சாம்பார் வச்சாச்சுங்கோ !! சிக்கன் & பலாக்கொட்டைப் பொரியலுடனும், வாழைக்காயுடனும்(படத்துக்காக பாதி வேகும்போதே எடுத்து வச்சது) சூப்பராவே இருந்துச்சு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சென்ற முறை போலல்லாமல் இந்த தடவை புளிச்ச கீரையிலும் கீரையை ஆய்ந்துவிட்டு, குச்சி முழுவதையும் நட்டு வைத்தேன். இரண்டு வாரம் கழித்து மேலும் ஒரு தொட்டியில் .....
ஒரு பெரிய கிண்ணம் நிறைய கீரை கிடைத்தது.
இதுவும் மீண்டும் துளிர்க்கும் என்ற நம்பிக்கையில் ....
சாப்பிடப் போ றே ன் .... துணைக்கு நீங்களும் வாங்கோ ! பிசைந்து, உருட்டி உருட்டி, உள்ளங்கையில் வைக்கிறேன்.
வீட்டில் பறித்த கீரை, சூப்பர் சுவையில் ......
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இந்த இரண்டு கீரைத் தொட்டிகளையும் அடுத்த ஒரு மாதத்துக்கு யார் பார்த்துக்கொள்வது ? பேசாம லண்டனுக்கு ........ முக்கியமா புளிச்ச கீரையை பார்சல் பண்ணிடலாமா !!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~