Wednesday, May 15, 2013

பூக்களில் இத்தனை (மனித)முகங்களா!! / Pansy flowers


இங்குள்ள அப்பார்ட்மெண்டுகள்,வீடுகளில் அழகுக்காக வைக்கும் செடிகளை ஒவ்வொரு பருவத்துக்கும் மாற்றிக்கொண்டே இருப்பார்கள்.

வசந்த காலத்திற்காக வைக்கப் பட்டவைதான் படத்திலுள்ள இந்த Pansy மலர் செடிகள். பார்ப்பதற்கு (கற்பனையில்) மனித முகங்கள் போலவே இருக்கும். கற்பனை ஒவ்வொருவருக்கும் வேறுபடும்தானே.


கடந்த வெள்ளிக்கிழமை காலை 'வாக்' போகலாம் என கிளம்பி வெளியே வந்தால் இந்த மலர்கள் எல்லாம் ஸ்ப்ரிங்க்ளரில் / Sprinklerல்  ஏதோ குட்டிக்குட்டி மனிதர்கள் ஜாலியாக குளிப்பது போலவே இருந்தது.எல்லாப் பூக்களிலும் முத்துமுத்தாக நீர்த் திவலைகள்.

தண்ணீரில் ஆட்டம் போடும் இவர்களை க்ளிக் பண்ணினால்,"உங்களுக்கு மட்டும்தான் கோடை தாக்கம் இருக்குமா?எங்களுக்கெல்லாம் கிடையாதா? என கேட்பது போலவே இருந்தது. உண்மைதானே.


சில படங்கள் எடுத்துவிட்டு போய்விட்டேன்.'வாக்' முடிந்து திரும்பி வரும்போது பார்த்தால் அப்பார்ட்மெண்ட் ஆட்கள் வந்து இந்த செடிகளைப் பிடுங்கிவிட்டு கோடைக்காக‌ மஞ்சள் நிற சாமந்தி செடிகளை வைத்துக் கொண்டிருந்தார்கள்.

மனசே சரியில்லை,அதற்குள் காணாமல் போய்விட்டார்களே என்று!.


புதிதாக ந‌டப்பட்டுள்ள சாமந்தி செடிகள்தான் கீழே படத்திலுள்ளவை.


எனக்கு நினைவு தெரிந்து நான் முதன்முதலில் விதை போட்டு செடி முளைத்தது என்றால் அது இந்த மாதிரியான கலர்கலரான சாமந்தி செடிகள்தான்.அதனால் இதனுடன் கொஞ்சம் அதிகமான பாசம் உண்டு.

12 comments:

 1. வருகைக்கு நன்றிங்க தனபாலன்.

  ReplyDelete
 2. அழகான பூக்கள்! எனக்கும் இந்த பேன்ஸி பூக்கள் ரொம்ப பிடிக்கும் சித்ராக்கா! இந்த வருஷம் நாங்க கடைக்கு போனப்ப இந்தப் பூச்செடிகளைப் பார்க்கவே முடியல. போன சீஸன் பூக்களில் இருந்து எடுத்து வச்ச விதைகளை நட்டிருக்கேன், எவ்வளவு தூரம் வொர்க்-அவுட் ஆகப் போகுதுன்னு தெரிலை.

  இந்தப் பூக்களைப் பார்த்தா உங்களுக்கு மனிதமுகமாத் தெரியுதா?//Sprinklerல் ஏதோ குட்டிக்குட்டி மனிதர்கள் ஜாலியாக குளிப்பது போலவே இருந்தது.// உங்க வர்ணனையும் நல்லா இருக்கு. :)
  எனக்கு இந்தப் பூக்களைப் பார்க்கையில் PUG வகை நாய்க்குட்டிகளின் முகம் போலத் தெரியும். ஹட்ச் விளம்பரங்களில் வருமே அதே வகைதான் நான் சொல்வது. இந்தப் படங்களைப் பாருங்க..
  https://www.google.com/search?q=pug+dogs&client=safari&rls=en&source=lnms&tbm=isch&sa=X&ei=P6KVUcPWK5Ta9ASKkoHICA&ved=0CAoQ_AUoAQ&biw=1278&bih=604#client=safari&rls=en&tbm=isch&sa=1&q=pug+dogs&oq=pug+dogs&gs_l=img.12...0.0.8.651.0.0.0.0.0.0.0.0..0.0...0.0...1c..12.img.ci7jQjDuESE&bav=on.2,or.r_qf.&bvm=bv.46471029,d.eWU&fp=bdaf2b0d9ed420be&biw=1278&bih=604

  :) :)

  ReplyDelete
  Replies
  1. இந்தப் பூ செடியை தேடினீங்களா!இவிங்க (கோவை பாஷை ஒட்டிக்கிச்சு) நொடியில காலி பண்ணிட்டாங்க.நீங்க தேடியதற்காகவாவது விதை முளைத்து செழிப்பாக வளர வேண்டும்.

   உங்க கற்பனையும் (PUG வகை நாய்)சூப்பரா இருக்கு.எனக்கு இதன் வகையெல்லாம் தெரியாது.இமேஜை எடுத்துக் கொடுத்ததற்கு நன்றி மகி.

   Delete
 3. நீங்கள் சொல்வதுபோல மனித முகங்கள் போலவே இருக்கின்றன. நல்ல அழகு அழகுக் கலர்கள்!
  கோடை என்றால் மஞ்சள் பூக்கள் வைக்கணுமா? ஏன் நன்றாகப் பூத்துக் கொண்டிருந்த செடிகளைப் பிடுங்கணும்? வேற வைக்கணும்? (வழக்கம்போல கேள்வி கேட்டு உங்களை துளைத்தாயிற்று!)

  உங்கள் கைராசி சாமந்திப் பூக்கள் நன்றாகப் பூத்துக் குலுங்கட்டும்!

  எனக்கு இந்தப் பதிவு வரவேயில்லையே!

  ReplyDelete
  Replies
  1. நான்தான் வருவதற்கு தாமதமாகிவிட்டது.மகி அழகா பதில் சொல்லிட்டாங்க.

   பார்வையாக உள்ள‌ இடத்தில் முக்கியமாக முன்பகுதியில் இதுமாதிரி செய்வாங்க.மற்ற பகுதிகளில் உள்ள‌வற்றை அடிக்கடி ட்ரிம் பண்ணி விடுவாங்க.இப்போது அப்பார்ட்மென்ட் முழுவதும் ரோஜா பூத்துக் குலுங்குவது கொள்ளை அழகாக உள்ளது.

   இன்னும் கொஞ்ச நாட்கள் போனதும் கைராசி சாமந்திப் பூக்கள் பூத்துக் குலுங்குவதை படம் எடுத்து போடுகிறேன்.

   பதிவு ஏன் வரலைன்னு தெரியலயே.வருகைக்கும்,கேள்விகளுக்கும் நன்றிங்க.

   Delete
 4. //கோடை என்றால் மஞ்சள் பூக்கள் வைக்கணுமா? ஏன் நன்றாகப் பூத்துக் கொண்டிருந்த செடிகளைப் பிடுங்கணும்? வேற வைக்கணும்? //:)
  1. கோடை என்றால் "மஞ்சள்" பூக்கள் என்றில்லை, இங்கே மோஸ்ட்லி எல்லா அபார்ட்மெண்ட்ஸ், அலுவலகங்களில் எல்லாம் ஒவ்வொரு சீஸனுக்கும் புதுச் செடிகள் வைப்பாங்க ரஞ்சனி மேடம்! வசந்தம் முடிந்து கோடை தொடங்குவதால் இப்படி செய்திருக்காங்க.
  2 & 3. செடிகள் நன்றாகவே பூத்துக் கொண்டிருந்தாலும், லேண்ட்ஸ்கேப் கம்பெனிகளுக்கு குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட சீஸன் பூக்களை மாற்றி நடவேண்டும் என்று இருக்கும், அதனால் (ஈவு இரக்கமில்லாமல்....அவ்வ்வ்) பூத்துக்குலுங்கும் செடிகளையும் பறிச்சுப் போட்டு புதுச் செடிகள் நட்டுவிடுவாங்க. எங்க அபார்ட்மெண்டிலும் இப்படித்தான்! ஹூம்...!

  :)))

  ReplyDelete
  Replies
  1. உங்க பதில் வழக்கம்போல உங்க ஸ்பெஷல் நடையுடன் சூப்பரா இருக்கு. நன்றி மகி.

   Delete
 5. அழகான பூக்கள் இங்கு நானும் வைத்திருந்தேன். இப்ப இல்லை. நானும் நினைத்த கேள்விதான் ரஞ்சனிஅம்மா கேட்டிருக்க்காங்க. சாமந்தியை நாங்க செவ்வந்தி எனச்சொல்வோம். உங்களை மாதிரியேதான் நானும் விதை போட்டு நடுவேன் இச்செடியை.

  ReplyDelete
  Replies
  1. ஓ, நீங்களும் 'செவ்வந்தி பூ'ன்னு சொல்லுவீங்களோ ! ஆக மொத்தம் நாமெல்லாம் ஆங்காங்கே இருந்து ஒரே வேலையத்தான் செஞ்சிருக்கோம்.

   நன்றி பரியா.

   Delete
 6. mikka nandri tharcheyalaaga vandhen enadhu sandhegam theernthadhu en veetil pootha poovin peyar theriyavillai oruvar SEVVANDHI endraar sevvandhi endru thediyabo.thu googLe il saamandhi thaan kaaNapattathu. indha pakkathhai paartha po.thu enadhu sandhegam theernthadhu MIKKA NANDRI.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் நன்றி ஐயா !

   Delete