Thursday, May 16, 2013

வசந்தத்தில் ஓர்நாள்...

 

என்ன வச்சி காமெடியா பண்றீங்க?ஒருத்தர் புறாக்கலி செய்யப் போறேன்றீங்க.ஒருத்தர் அந்த ரெஸிப்பி எப்போ வருன்ன்ன்றாங்க.க்ர்ர்ர்ர்...

ஒருசில வாரங்களுக்குப் பிறகு இன்று காலை முதல் வானம் மூடியே இருக்கிற‌து.ஜில் காற்று வேறு.காலையில் லேஸான தூறலும் இருந்தது.

இதற்கான அறிகுறிகள் நேற்று மாலையே ஆரம்பித்துவிட்டது.மாலை நான்கு மணிக்கெல்லாம் திடீரென குளிர்ந்த காற்று + வெளிச்சமில்லாத வானம் இவற்றுடன் சூப்பராக இருந்தது.

அப்பாவும் மகளும் வீட்டுக்கு வந்து மதிய உணவு சாப்பிட்டு போன பிறகு ஒரு குட்டித்தூக்கம் போடலாம் என நினைத்து blinds ஐ இழுத்து மூடலாம் என கண்ணாடிக்கதவின் அருகே போனால் பேடியோவின் மர வேலியின்மேல் ஒரு ஜோடி புறா வந்து அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தன‌.



அடிக்கடி இது மாதிரி நிறைய பறவைகள் பேடியோவுக்கு வருவார்கள். அங்குள்ள செடிகளைக் கொத்திகொத்தி எதையோ தேடிக்கொண்டிருப்பார்கள்.

ஆனால் வீட்டினுள்ளே ஒரு சிறு அசைவு என்றாலும் திடீரென காணாமல் போய்விடுவார்கள்.



ஆனால் இந்த முறை வந்தவர்கள் பயமில்லாமல் ஜாலியாக விளையாடிக் கொண்டிருந்தனர்..

பிறகு விளையாடிக் களைத்து இருவருமே ஆளுக்கொரு பக்கமாக உட்கார்ந்து தூங்கோ தூங்கென்று தூங்கி வழிந்தனர்.



கொஞ்ச நேரம் தூங்கி முடித்து இருவரும் ஒருவருக்கொருவர் மாறிமாறி தங்களைத் தாங்களே இறகுகளை சரிபடுத்தி,அழகு படுத்திக்கொண்டு பறந்துவிட்டனர்.

பறவைகள்,விலங்குகளின் நிறங்கள்கூட அங்குள்ள மனிதர்கள்,சூழ்நிலை இவற்றை ஒத்திருக்கும்போல.


என்னதான் இருந்தாலும் நம்ம ஊர் புறாவின் அழகே தனிதான். நாங்களெல்லாம் இங்கு வந்து விட்டதாலோ என்னவோ (ஹி ஹி) அழகான‌ நம்ம ஊர் புறாக்கள் மாதிரியும் ஆங்காங்கே நிறைய தென்படுகின்றன.

8 comments:

  1. குண்டு குண்டு புறாக்கள் அழகு... அருமை...

    ReplyDelete
    Replies
    1. 'குண்டு புறா'ன்னு பேர் வச்சிட்டீங்களா!இதுவும் பொருத்தமாத்தான் இருக்கு. வருகைக்கு நன்றிங்க.

      Delete
  2. ஜோடிப் புறாக்கள் அழகு!
    அவைகள் தூங்கி, உங்கள் தூக்கத்தை கெடுத்து விட்டனவா?
    (அடுத்த முறையாவது கேள்வி கேட்காமல் கருத்துரை சொல்லணும், ஆண்டவா!)

    ReplyDelete
    Replies
    1. "அவைகள் தூங்கி, உங்கள் தூக்கத்தை கெடுத்து விட்டனவா?"____அவங்க தூங்கி என்னை வெயிட் போடாம பாத்துக்கிட்டாங்க.

      வருகைக்கு நன்றிங்க.

      Delete
  3. குண்டு love birds நன்றாக இருக்கிறார்கள்.
    அதை அழகாக படம் பிடித்துவிட்டீர்களே!
    ஆனால் தூக்கம் தான் போச்சோ!

    ReplyDelete
    Replies
    1. வரும்போது இறகெல்லாம் சிலுப்பிக்கொண்டு குண்டா இருக்கற மாதிரிதான் இருந்தது. ஆனால் போவதற்குமுன் இறகையெல்லாம் ஒழுங்குபடுத்தி, அழகாக்கிக் கொண்டு ஸ்லிம்மாகிட்ட மாதிரி தெரிந்தது.

      வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிங்க.

      Delete
  4. எங்க கண்ணுக்கு எங்க ஊர் புறா,மரம்,செடி எல்லாமே அழகுதான். இங்கு அதிகம் இயற்கையை ரசித்துவிட்டு அங்கு போனால் பட்டமரம் கூட எனக்கு அழகா தெரியுது சித்ரா. அழகா இருக்கு படங்கள்.

    ReplyDelete
    Replies
    1. எங்கெங்கு சுற்றி வந்தாலும் நம்ம ஊர் நமக்கு ஸ்பெஷல்தானே !

      நன்றி ப்ரியா.

      Delete