Friday, November 21, 2014

நுனிக்கிச்சாம் பூ / உன்னிப் பூ & _____ காய்


நம்ம ஊர் 'பூ'தாங்க   'பூ'வு. என்ன ஒரு அழகு ! சகோதரி வீட்டுத் தோட்டத்தில் பூத்த நுனிக்கிச்சாம் பூ. இந்த‌ ஊர் பூக்கள் இங்கேயும் , இங்கேயும் உள்ளன.

                               வெள்ளையும், நடுவில் மஞ்சளுமாக பார்க்கவே பளிச்சென‌!

முழுவதும் பூத்து முடிக்கும்போது கொஞ்சம்கொஞ்சமாக வெண்மை மறைந்து இளம் வயலட் நிறத்திற்கு மாறுகிறது..

ஒரு காலத்தில் இப்பூவை கொத்தாகப் பறித்து வைத்துக்கொண்டு ஒவ்வொரு பூவாக எடுத்து தேனை உறிஞ்சுவோம். இப்போது அந்த வேலையை எறும்புகள் செய்துகொண்டிருந்தன.

                                          பூத்து முடித்த பிறகும் .... என்னே ஒரு நிறம் !!

                                                                காயாகிவிட்டது

இது பழமானால் கருப்பாக இருக்கும். அதையும் விடமாட்டோம், பறித்து சாப்பிட்டுவிடுவோம். நாங்கள் ஊரில் இருந்தவரை அந்தச் செடியில் பூக்களும், காய்களும் வந்தனவே தவிர பழங்கள் பழுக்கவில்லை.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
                                                                            _____  காய்                                                       


வலையுலகில் ஒரு பிரபல பதிவரின் ஊர் பெயரைக் கொண்ட காய் இது. "அப்படின்னா இது எந்தக் காய் ?" என்றெல்லாம் கேட்கப்போவதில்லை. உங்களில் பாதிப்பேர் என்னை மாதிரியே இக்காயை உடைத்து மண் சிலேட்டில் தேய்த்து பளிச்சினு எழுத முற்பட்டிருப்பீங்க‌. அதனால ஈஸியா சொல்லிடுவீங்க.

அதனால கேள்வி இதுதான் ...... "இந்த இரண்டு காய்களில் எது முதலில் பழுத்திருக்கும் ? " னு நீங்க‌ நினைக்கீறீங்க !

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உமையாள் கரெக்ட்டா கெஸ் பண்ணிட்டீங்க. கீதா உங்க முயற்சிக்கும் நன்றி.


கீழ உள்ள காய்தாங்க முதலில் பழுத்துச்சு. சின்ன வயசுல இந்த பழங்களைப் பறிச்சு சாப்பிட்டதுண்டு. ஆனால் இப்போது ஏனோ சாப்பிடவில்லை. ஒருவேளை சுத்தம், சுகாதாரம், அது இதுனு தேவையில்லாத பயமா இருக்குமோ !!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

18 comments:

 1. நாங்க ஸ்கூலில் போர்ட் துடைப்போம் இதை வச்சி

  ReplyDelete
  Replies
  1. ஏஞ்சலின்,

   ஆமாம், போர்டு துடைப்பாங்கதான். அந்த வேலையை பையன்கள் பார்த்ததால் மறந்துபோச்சு.

   Delete
 2. ஆவ் !! நுன்னிப்பூ ரொம்ப அழகு !! அதுவும் பிங்க் கலர் லவ்லி !
  எங்க ஸ்கூல் பெண்கள் ஸ்கூல் 12 த் வரைக்கும் ஆல் கேர்ள்ஸ்
  டியூட்டி போட்டு போர்ட் துடைக்கணும் கிளாஸ் கிளீன் பண்ணனும் நாங்க :)

  ReplyDelete
  Replies
  1. அதிலும் நம்ம வகுப்பறை எனும்போது ஓடிஓடி, விழுந்துவிழுந்து வேலை செய்வோம் இல்ல ! 5 வரைதான் பையன்களுடன். 6_க்கு மேல பெண்கள் பள்ளிதான். மஞ்சள், நீலம், பச்சை, சிவப்பு என குரூப் பிரிச்சு வேலை செய்வோம். போர்டை சும்மாதான் துடைப்போம். அடிக்கடி அவங்களாவே சும்மா கருகருன்னு பெயிண்ட் அடிச்சி விட்ருவாங்க.

   Delete
 3. உன்னிப்பூ சூப்பர் கலராக இருக்கிறது.

  கீழ் காய் தானே பழுத்தது....தெரியலையேப்பா...

  ReplyDelete
  Replies
  1. இது வேலியோரப் பூதான். ஆனா பார்க்க அழகா இருக்கும். உமையாள், இப்போதான் பழுக்க வச்சிருக்கேன். பார்க்கலாம் எது முதலில் பழுக்குதுன்னு :)

   Delete
 4. வணக்கம்
  இரசிக்கவைக்கும் மலர் பற்றி சொல்லியவிதம் சிறப்பாக உள்ளது.
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி ரூபன்.

   Delete
 5. நீங்கள் சொல்லும் பூவிற்குவேறு பெயரும் இருக்கும் என்று எண்ணுகிறேன். முன்பே ஒருபதிவில் இதேப பெயரில் படம் போட்டிருந்தீர்கள். இது என்ன பூ என்று தெரியவில்லை. ஆனால் பார்க்கக் கொள்ளை அழகு.
  போர்டு தேயக்க உப்யோகப்படுத்தியக் காய் இப்பொழுது சர்க்கரை நோயாளிகளுக்கு ஆரோக்கிய உணவு.

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க, ஒவ்வொரு ஊரிலும் ஒரு பெயரா இருக்கு.

   இங்கு வந்த பிறகுதான் இந்தக் காயை நம்மூர் கடைகளில் பார்த்தேன். இது சர்க்கரை நோய்க்கான காயா ! ஆனால் சின்ன வயசுல இதன் பழத்தை சாப்பிட்டிருக்கிறேன். சூப்பரா இருக்கும்.

   Delete
 6. நுன்னிப்பூ அழகாக இருக்கின்றது! ம்ம்ம் பரவாயில்லை இதைப் பார்த்த்தும் நம்ம ஊரில் உள்ளது போல இருக்கின்றதோ....!!

  இந்தக் காயால துடைச்சுருக்கோம்தான்....அந்த முதல் காய்?

  ReplyDelete
  Replies
  1. பல பளிச் நிறங்களில் இந்தப் பூ இங்கே அழகுக்காக வச்சிருக்காங்க. நீங்க முதல்காய்னு சொல்லியிருக்கீங்க. பழுத்ததும் படத்துடன் இங்கே வந்துவிடுகிறேன்.

   Delete
 7. கோவைக்காய் செடி லோக்கல்ல இருக்கா சித்ராக்கா? அவ்வ்வ்வ்....அந்தக் கீரையைப் பறிச்சு துவரம்பருப்பு சேர்த்து சமைச்சுப் பாருங்க, சூஊஊஊப்பரா இருக்கும்! :) கோவைக்கீரை அப்போல்லாம் கிடைக்கவே கிடைக்காது ஊரில..அரிதாகத்தான் வேலிகளில் எங்காவது படர்ந்து கிடக்கும்.

  இதே குடும்பத்தில் "அப்பக் கோவை" என்று இன்னொரு கொடி உண்டு, அதன் இலை பறித்தால் ஒரு மாதிரி நாற்றம்:) அடிக்கும்..ஐ மீன், வாசனை நல்லா இருக்காது ஆனால் மருத்துவ குணங்கள் நிறைந்தது அக்கீரை. அதனைப் பறித்து, அதனுடன் இன்னும் சில இலைகள் (திருநீர்ப் பத்தினி, துளசி எக்சட்ரா) சேர்த்து அரைத்து(அரைத்த கலவைக்குப் பெயர் "தெவளை/ துவளை") பிறந்த குழந்தைகளுக்குப் பூசி (தெவளை பூசுவது என்று பெயர்) குளிப்பாட்டுவாங்க. அக்கா பசங்களுக்கெல்லாம் செய்திருக்காங்க..என்ன ஒரு மணமா இருக்கும் தெரியுமா இந்த தெவளை?? ஹ்ம்ம்ம்ம்...அது ஒரு கனாக்காலம்!! இப்பல்லாம் தெவளை பவுடர் என்றே விக்கறாங்களாம்!! ;)

  உன்னிப்பூ சூப்பரப்பூ! அழகான வண்ண மாற்றம்..

  சொல்ல மறந்தேனே..எங்க ஸ்கூல்ல கோவையிலையால்தான் போர்டைத் துடைப்பாங்க பசங்க..நாங்கள்ளாம் தள்ளி நின்னு வேடிக்கை பார்ப்பதோடு சரி! ஹிஹி...

  ReplyDelete
  Replies
  1. மகி,

   இது இங்க இல்ல. ஊர்ல எடுத்தது. எங்க ஊர்ல இதன் இலை, காய் என ஆடுகளுக்குத்தான் கொடுப்பாங்க. உன்னிப்பூவும் அழகா இருக்கில்ல !

   அப்பக்கோவை, தெவளை என இதையெல்லாம் இப்போதான் கேள்விப்படுறேன். இப்போ ஊருக்குப் போனபோது ஆசைக்கு ஒருசில நாட்களுக்கு பாப்பாவை குளிக்க வச்சிருக்கலாமே.

   எங்க ஸ்கூலிலும் கோவை இலைகளைப் பூசுவது, போர்டை கழுவுவது, சிலர் கரியத் தேச்சுட்டு உதை வாங்கியது என எல்லாமும் பசங்கதான். ஹா ஹா !!

   Delete
 8. ஏற்கனவே நிறையப்பேர் பதில் சொல்லிட்டாதால, எனக்கு வேலை இல்லாமப்போச்சுங்க மேடம்

  ReplyDelete
 9. எந்தக் கேள்விக்கும் பதில் தெரியலை ):
  ஆனால் அழகழகான பூக்களின் படங்களை ரசித்தேன். நிறைய புதிய தகவல்கள் தெரிந்து கொண்டேன்.

  ReplyDelete