இந்தக் கட்டிடத்தில் உயிருள்ள ஒன்று இருக்கிறது. முதலில் அது எங்கே, என்னன்னு கண்டுபிடியுங்களேன் !! ( பயந்துடாதீங்க, அடுத்த திகில் கதைக்கான ஒத்திகைதான் )
இரண்டு வாரங்களுக்குமுன் மகளின் flute recital க்காக ஒரு பள்ளிக்கு சென்றோம். அங்கு பல கட்டிடங்கள் இருந்தாலும் இந்த கட்டிடம் மட்டும் என்னைக் கவர்ந்தது.
செட்டிநாட்டு பங்களா மாதிரி இருக்கவும் 'க்ளிக்'கினேன். நான் 'க்ளிக்'கவும் 'இவர்' வந்து அமரவும் சரியாக இருந்திருக்கிறது. கட்டிடத்தின் நிறமும் அவருடைய நிறமும் ஒன்றுபோல் இருக்கவும் அவர் அமர்ந்திருப்பதே தெரியவில்லை.
படத்தைக் காமிராவில் பார்த்தபோது முதலில் நான்கூட அது சிலை என்றே நினைத்தேன். மீண்டும் ஒரு 'க்ளிக்'. இப்போது போஸ் கொஞ்சம் மாறியிருந்தது.எனக்கோ ஒரே குழப்பம்.
வந்து அமர்ந்த சில நொடிகளிலேயே பறக்கும்போதுதான் தெரிந்தது அது ஒரு அழகான புறா என்பது.
கண்டுபிடிக்க முடியாதவர்கள் கீழேயுள்ள படங்களைப் பார்த்துவிட்டு பிறகு மேலேயுள்ள படத்திற்கு போகவும்.
அட..! அழகு...!
ReplyDeleteஆமாங்க, பார்க்க கொள்ளை அழகாகத்தான் இருந்தது.வருகைக்கு நன்றிங்க.
Deleteஅழகான கட்டிடம்! புறா டைமிங்கா வந்து போஸ் குடுத்திருக்கு உங்களுக்கு! :)
ReplyDeleteஆமாம் மகி,சரியான நேரத்துலதான் வந்து அமர்ந்திருக்கு.
Deleteநீங்க காமிராவும் கையுமா அலையறத பாத்து, 'நான் இப்படி போஸ் கொடுக்கறேன். நீங்கள் புகைப்படங்கள் எடுத்து ஒரு பதிவு தேத்திடுங்க' பதிவுக்குள் பதிவு - (அடுத்த திகில் கதைக்கான ஒத்திகை தான்) போடுங்க என்று அந்தப் புறா சொல்வது போல இருக்கு!
ReplyDeleteஎன் நிலைமையைப் பார்த்து இரக்கம் கொண்டு புறாகூட உதவிக்கு வந்துவிட்டது, ஹா ஹா!
Delete" சிலையல்ல நான் தான் " என்ற தலைப்பைப் பார்த்து உங்கள் போட்டோவை எதிர்பார்த்து வந்தேன். புறாவைப்போட்டு விட்டீர்களே சித்ரா....
ReplyDeleteஆ,ஆ, புறா இருக்குமிடத்தில் நான், கட்டிடத்தை நெனச்சாதான் பாவமா இருக்கு!
Deleteஅழகான கட்டிடம்; அழகான படங்கள். அருமை.
ReplyDeleteகண்ணை உறுத்தாத நிறத்தில் வர்ணம் அடித்திருப்பது, கட்டிடத்திற்கு மேலும் அழகைக் கூட்டியிருந்தது. நன்றி இமா.
Delete