கடல் அலைகள் வந்து போன பிறகு நானும், பொண்ணும் சேர்ந்து, கண்டுபிடித்து, சேர்த்த பொக்கிஷங்கள் இவைதான் !!
"அம்ம்ம்மா, இதெல்லாம் எவ்ளோ அழகா இருக்கு பாரும்மா", __ மகள்.
பொறுக்கி எடுத்ததையெல்லாம் என்னிடம் ஒப்படைச்சாச்சு. இனி இவற்றை நான் பத்திரமா வீடு போய் சேர்க்கணும்.
கையில் பை எதுவும் இல்லாததால் உள்ளங் கையிலேயே வைத்துக் கொண்டிருந்தேன். திடீரென அவற்றுள் ஒன்று மட்டும் உருள்வதுபோல் உணரவும் ........ பார்த்தால் ........ ?
நல்லவேளை இவர்களிடமிருந்து தப்பித்தேன் !!
நீளமான ஒன்றன் உள்ளிருந்து கறுப்பான சதைப்பகுதி வெளியே வரவும் பயத்தில் எல்லாவற்றையும் தூக்கி வீசிவிட்டேன். பிறகு அதை மட்டும் விட்டுவிட்டு மற்ற கிளிஞ்சல்களைப் பொறுக்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அலைகள் ஓடி வரும்போது பார்டர் வைத்த மாதிரி முதலில் ஒரு மெல்லிய கோடாய் தெரியும் பாருங்க. அவற்றை ரசிக்கத்தான் எனக்கு நேரம் பத்தாது.
மேலும் சில அலை அடிக்கும் படங்கள் !
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வேறொரு நாளைக்கு எங்கள் ஊர் 'சில்வர் பீச்' பக்கம் போகலாம், வாங்க !!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
எங்கே பட்டாணி சுண்டல் ? பத்தை மாங்காய் :)
ReplyDeleteஅதெல்லாம் வாங்கி தராம மெரினாவுக்கு நான் வர மாட்டேன் :)))
இங்கே ஹாலிடேஸ்ல நாங்களும் ஸீ சைட் போனோம் நிறைய ஜெல்லி மீன்களும் ஒரு ஸ்டார் பிஷ் என கரையொதிங்கின என் பொண்ணு ஸ்டார் பிஷை கையில் பிடிச்சா :)
நல்லவேளை அந்த கருப்பு //உயிரி உடன் பைக்குள் போடல்லை ..
அஞ்சு,
Delete" ரெண்டு வருஷம் கழிச்சு போகும்போதுதான் வாங்கித் தருவேன். இப்போ நல்ல பிள்ளை இல்ல. சொன்னா கேக்கணும். மேற்கொண்டு அடம் பிடிச்சா ..... ? நான் பேச மாட்டேன், __________ " :)))
உண்மைய சொல்லணும்னா பட்டாணிசுண்டலைத் தேடித்தேடி நேரம் போனதுதான் மிச்சம். நாங்க போனது மதியம் 12 மணி இருக்கும். தூறல்வேறு. காரணம் இதுவா இருக்குமோ !
ஸ்டார் ஃபிஷ்ஷை நான் பார்க்கக்கூட மாட்டேன். எங்க பாப்பாவுக்கும் இதெல்லாம் இஷ்டம்.
அழகான புகைப்படங்கள். பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி தோழி.
ReplyDeleteவாங்க தமிழ்முகில் ! வருகைக்கும், படங்களை ரசித்துக் கருத்திட்டமைக்கும் நன்றிங்க.
Deleteமெரீனாவுக்கு நேரில் சென்று விட்டு வந்தது போல் இருக்கிறது மேடம். நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்போதுதான் வர முடிந்தது, நலம் தானே!
ReplyDeleteநலமே. நலன் விசாரிப்புக்கும், உங்கள் வருகையிலும் மகிழ்ச்சிங்க.
Deleteஅழகாக இருக்கு அலை போடர். கிளிஞ்சல்கள் இந்த பயத்தினாலேயே நான் எடுப்பதில்லை. ஒருமுறை அனுபவம்.போட்டோஸ் எல்லாமே அழாக இருக்கு சித்ரா.
ReplyDeleteஉயிருள்ள கிளிஞ்சல்களைப் பார்த்தால் உங்களுக்கும் பயமா !! படங்களை ரசித்துப் பார்த்துக் கருத்திட்டமைக்கு நன்றி ப்ரியசகி.
Deleteபடங்கள் அருமை
ReplyDeleteவாழ்த்துக்கள்
தொடர்க
மது,
Deleteஉங்களின் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி !!
அருமையான படங்கள். ...
ReplyDelete