1999 _ ல் மெரினவுக்குப் போனதோடு சரி. அதன்பிறகு இப்போதுதான் ஜூலை கடைசியில் போகும் சந்தர்ப்பம் கிடைத்தது, இல்லையில்லை நானாக ஏற்படுத்திக்கொண்டேன். காரணம் தெரிய வேண்டுமா? ........ சொல்லட்டுமா ? ...... சொல்லப் போ றே ன் .... சொல்லிடுவேன் ...... !!
ஆமாங்க, முன்பொரு பதிவில் நம் நட்பாசிரியை , "ம்... எனக்காக காமராவோட ஒரு மெரீனா டூர் போய்ட்டு வாங்க சித்ரா" என்று தன் விருப்பத்தை வெளிப்படுத்தி இருந்தார். அதிலிருந்து இந்தியா என்றாலே 'மெரீனா'தான் நினைவுக்கு வந்துபோனது. இந்தியாவுக்குப் போறோமோ இல்லையோ 'மெரினா'வுக்குப் போயேத் தீர வேண்டும் என மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.
ஜூலை கடைசியில் சென்னையில் வந்த வேலையை முடித்துக்கொண்டு ஊருக்குத் திரும்பும் சமயம் நண்பகல், போதாததற்கு மழை வரப் போவதற்கான கருமேகங்கள் வேறு சூழ்ந்திருந்தன. இந்த நேரத்தில் நான் 'மெரினாவுக்குப் போகலாம்' என்றதும் 'வேறொரு நாள் பார்த்துக்கொள்ளலாமே" என்ற பதில்தான் வந்தது.
விட மாட்டோ மில்ல ! போய்ட்டு புகைப்படமும் எடுத்துக்கொண்டு, தூறல் மழையாக வலுக்குமுன் வாகனத்தில் ஏறியாச்சு. சரியான வெளிச்சம் இல்லாததால் படங்கள் 'பளிச்' என வரவில்லை.
எப்போதும் அண்ணா சமாதி & எம்.ஜி.ஆர் சமாதி பக்கமாகத்தான் போவோம். ஆனால் இந்த முறை நாங்கள் போன அன்று சட்டமன்றத்தில் அம்மாவின் உரை இருந்ததால் பாதுகாப்பு கருதி கெடுபிடிகள் அதிகமாக இருக்குமென்பதால் கொஞ்சம் முன்னாலேயே இறங்கிக்கொண்டோம்.
நண்பகல் என்பதால் மக்கள் கூட்டத்தைக் காணவில்லை. கடைகளும் இல்லை. அதற்கு பதிலாக எங்கும் பிளாஸ்டிக் குப்பைகள், கடல் மணலைவிட அவைதான் அதிகமாக ஆக்கிரமித்திருந்தன.ஆவலுடன் போன எனக்கு சப்பென்றிருந்தது.
'மெரீனா'வுக்குப் போவோமா ... !!
நடிப்பிலக்கணம் !
அண்ணல் காந்தி
அய்யன் திருவள்ளுவன்
பஞ்சு மிட்டாய் இல்லாமலா !!
இவ்ளோ தூரம் வந்துட்டு கடலைப் படம் புடிக்காட்டி எப்படிங்க ? அடுத்த பதிவில் பிடித்துவிடலாம் !
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அதி முக்கியமான குறிப்பு :
என்னைப் போன்றவர்கள் .... ஏன் உங்களில் ஒரு சிலரும்கூட கடல் பக்கம் போனாலே ஒன்றைத் தேடித்தேடி(க்/ ப்) ..................? 'அது என்ன?' ன்னு கொஞ்சம் யோசிச்சு வையுங்க, வரேன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மெரீனா என்றதும் எனக்கு," மெட்ராஸை சுத்திப்பார்க்க போறேன்.மெரீனாவில் வீடு கட்ட போறேன். அந்த பாடல்தான் ஞாபகம் வரும். மாங்காய், பஞ்சுமிட்டாய் படங்கள் எல்லாமே அழகா எடுத்திருக்கிறீங்க. டீச்சரின் ஆசையை நிறைவேற்றியாச்சு. கடற்கரைக்கு போனால் வித்தியாசமான சிப்பி,சோகி என தேடுவோம். சிலபேர் நண்டு வளை தேடுவார்கள். ம்.ம் என்ன பதிலா இருக்கும்???. நன்றி சித்ரா.
ReplyDeleteப்ரியசகி,
Delete'மெட்ராஸ்'னாலே எனக்கும் இந்தப் பாடல்தான் நினைவுக்கு வரும்.
சரியாத்தான் சொல்லியிருக்கீங்க. "சிப்பி,சோகி" ______ நாங்க இவற்றை 'கிளிஞ்சல்' என்போம். அலை வந்து போனதும் நண்டு ஓடி மறைவதைப் பார்க்க அழகாக இருக்கும். பிறகு அது வெளியே வருமா வராதா என தவம் இருப்போம். எல்லாமே இனிமையான நினைவுகள்தான்.
டீச்சரின் ஆசையை நிறைவேற்றியதைப் போய் சொல்லிவிட்டு வரேன். நன்றி ப்ரியசகி..
மெரீனா போயிருந்தீர்களா? எத்தனை நேரம் கடல் அலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் அலுக்காது.
Deleteகுப்பையும் பிளாஸ்டிக்கும் இல்லாத இடமே இல்லை எனலாம். இப்பொழுது குப்பை சற்று குறைந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். சுற்றுப்புறத் தூயமைப் பற்றிய விழிப்புணர்வு வேகமாக பரவி வருகிறது . அடுத்த முறை வரும் போது மீண்டும் மெரினாவைப் பார்க்கத் தவறாதீர்கள். மெரினா பீச்சின் . தரம் எவ்வளவு உயர்ந்திருக்கிறது என்பதைப் படம் பிடித்து பதிவிடுவீர்கள் என்பது உறுதி.
மெரீனாவுக்கு ஜூலை கடைசியில் வந்தேன். பலவருட கனவு நிறைவேறியதில் சந்தோஷம். சென்ற வாரம் நான்கூட நம்ம ஊர் செய்தித்தாளில் கடற்கரையை மாணவர்கள் தூய்மைப்படுத்துவதைப் படத்துடன் பார்த்தேன். சந்தோஷமாக இருந்தது.
Deleteஅடுத்தமுறை இந்தியா வரும்போது கண்டிப்பாக மெரீனாவுக்கு வருவேன். உங்கள் உறுதிக்கு நன்றிங்க.
மெரீனா பீச்சை படம் பிடித்துப்போட்டு பழைய நினைவுகளை கிளப்பி விட்டுவிட்டீங்களே! எனக்கு உடனே பீச் போகணும் போலிருக்கே!
ReplyDeleteஅப்படின்னா, அடுத்த வாரம் மெட்ராஸ் வரப் போறீங்க ! சரிதானே !!
Deleteகடல் - எததனை நேரம் பார்த்தாலும் அலுக்காத விஷயம்.....
ReplyDeleteஎந்த வித அலுப்பும் இல்லாமல் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் அலைகள் நமக்குச் சொல்லும் பாடம் எவ்வளவு அற்புதம்.
படங்கள் எல்லாமே அழகு!