நம்ம ஊர் 'பூ'தாங்க 'பூ'வு. என்ன ஒரு அழகு ! சகோதரி வீட்டுத் தோட்டத்தில் பூத்த நுனிக்கிச்சாம் பூ. இந்த ஊர் பூக்கள் இங்கேயும் , இங்கேயும் உள்ளன.
வெள்ளையும், நடுவில் மஞ்சளுமாக பார்க்கவே பளிச்சென!
முழுவதும் பூத்து முடிக்கும்போது கொஞ்சம்கொஞ்சமாக வெண்மை மறைந்து இளம் வயலட் நிறத்திற்கு மாறுகிறது..
ஒரு காலத்தில் இப்பூவை கொத்தாகப் பறித்து வைத்துக்கொண்டு ஒவ்வொரு பூவாக எடுத்து தேனை உறிஞ்சுவோம். இப்போது அந்த வேலையை எறும்புகள் செய்துகொண்டிருந்தன.
பூத்து முடித்த பிறகும் .... என்னே ஒரு நிறம் !!
காயாகிவிட்டது
இது பழமானால் கருப்பாக இருக்கும். அதையும் விடமாட்டோம், பறித்து சாப்பிட்டுவிடுவோம். நாங்கள் ஊரில் இருந்தவரை அந்தச் செடியில் பூக்களும், காய்களும் வந்தனவே தவிர பழங்கள் பழுக்கவில்லை.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
_____ காய்
வலையுலகில் ஒரு பிரபல பதிவரின் ஊர் பெயரைக் கொண்ட காய் இது. "அப்படின்னா இது எந்தக் காய் ?" என்றெல்லாம் கேட்கப்போவதில்லை. உங்களில் பாதிப்பேர் என்னை மாதிரியே இக்காயை உடைத்து மண் சிலேட்டில் தேய்த்து பளிச்சினு எழுத முற்பட்டிருப்பீங்க. அதனால ஈஸியா சொல்லிடுவீங்க.
அதனால கேள்வி இதுதான் ...... "இந்த இரண்டு காய்களில் எது முதலில் பழுத்திருக்கும் ? " னு நீங்க நினைக்கீறீங்க !
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உமையாள் கரெக்ட்டா கெஸ் பண்ணிட்டீங்க. கீதா உங்க முயற்சிக்கும் நன்றி.
கீழ உள்ள காய்தாங்க முதலில் பழுத்துச்சு. சின்ன வயசுல இந்த பழங்களைப் பறிச்சு சாப்பிட்டதுண்டு. ஆனால் இப்போது ஏனோ சாப்பிடவில்லை. ஒருவேளை சுத்தம், சுகாதாரம், அது இதுனு தேவையில்லாத பயமா இருக்குமோ !!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~