 |
வீட்டுக்காரர் 'க்ளிக்'கியது. |
சின்ன வயசுல கொல்லிக்குப் போனால் கரண்ட் இருந்து தண்ணீர் இறைக்கும்வரை கண்டுகொள்ளமாட்டோம். ஆனால் கரண்ட் நின்றதும் 'பைப்'பில் வரும் தண்ணீர் அளவு குறைந்து விட்டுவிட்டு வந்து கடைசியில் நின்றுவிடும். அந்நேரம் ஓடிப்போய் அத்தண்ணீரை போட்டி போட்டுக்கொண்டு இஷ்டத்திற்கும் குடிப்பது.
இப்போது அந்த நினைவுகளுடன், ரசித்துக்கொண்டிருந்தபோது 'பைப்'பில் இருந்து வந்த கடைசி சொட்டுத் தண்ணீரைக் காத்திருந்து இவர் 'க்ளிக்'கியது.
அட...! சூப்பர்...!
ReplyDeleteபின்னூட்டமும் 'நச்'சுன்னு சூப்பர் ! வருகைக்கு நன்றி தனபாலன்.
Deleteஅழகு...
ReplyDeleteவருகைக்கும், ரசித்துக் கருத்திட்டமைக்கும் நன்றி அனுராதா.
Deleteதண்ணீர் விழும் போது ஏற்படும் சுழற்சிகள் மெகா மிகத் தெளிவாக, பார்க்க மிகவும் அழகாக அமைந்திருக்கின்றன சித்ரா.
ReplyDeleteஆமாங்க, நல்லா அலையலையா அழகா, சூப்பரா வந்திருக்கில்ல ! வருகைக்கும் நன்றிங்க.
Deleteசூப்பர் க்ளிக்!!!
ReplyDeleteஆமாம் ப்ரியசகி, சரியான நேரத்தில் 'க்ளிக்'கப்பட்டுவிட்டது. வருகைக்கும் நன்றி ப்ரியசகி.
Deleteசூப்பர்! மனம் எங்கள் கிராமத்து நிநைவுகளை அசை போட்டது...
ReplyDeleteகீதா,
Deleteஉங்களின் கிராமத்து நினைவுகளை மீட்டதில் மகிழ்ச்சி.
அருமையான க்ளிக்.... பாராட்டுகள் உங்களவருக்கு!
ReplyDeleteஹ்ம், வாங்கி வெளியிட்டவங்களுக்கு பாராட்டு இல்லையா !
Deleteபாராட்டுக்கு நன்றி வெங்கட்.