வசந்த காலமாதலால் உழவர் சந்தையில் ஏகத்துக்கும் செடிகள் விற்பனைக்கு வருகின்றன. நான் பூண்டு எடுக்கும் கடையில் பெயர் தெரியாத செடிகள் எல்லாம் நிறைய வைத்திருந்தனர்.
அவற்றுள் இந்த குட்டி ரோஜா செடி என்னை மிகவும் கவர்ந்தது. வேறு நிறங்களிலும் இருந்தன. எனக்கென்னமோ அந்த நாளில் என் தோழிகள் தலையில் வைத்துக் கொண்டு வரும் பன்னீர் ரோஜா நினைவுக்கு வரவும் வாங்கிவிட்டேன்.
ஒரு பூத்த பூ, நான்கு மொட்டுக்கள் & மூன்றுநான்கு கண்ணுக்குத் தெரியாத சிறு மொட்டுக்களுடனும் வந்தது.
நாமே விதை போட்டு, தண்ணீர் தெளித்துவிட்டு, அது முளைத்து வரும் அழகோ அல்லது பதியம் போட்டுவைத்த குச்சிகள் காய்ந்து சிலபல நாட்களுக்குப் பிறகு முதல் துளிர் வரும்போது இருக்கும் மகிழ்ச்சியோ, உழைப்போ இதில் இல்லை. ஹும், இருந்தாலும் பரவாயில்லை .
முதலில் வழக்கம்போல் அரிசி, பருப்பு & உளுந்து கழுவிய தண்ணீரைத் தெளித்துவிட்டதால் செடி மட்டுமல்லாமல் பூவுமே அழுக்கான நிலையில் இருந்ததைப் பார்த்ததும் ஒரு முடிவெடுத்து அந்தத் தண்ணீரையே வேர் பகுதியில் விட்ட பிறகு என்ன ஒரு அழகான நிறத்தில் பூத்திருக்கிறது பாருங்கோ !!
முதலில் சாதாரணமான ரோஸ் நிறத்தில் பூத்த பூக்கள், தன்னை எந்நேரமும் ரசிக்க இந்த வீட்டில் ஒரு ஆள் இருப்பதைத் தெரிந்துகொண்டு மீதமிருந்த மொட்டுக்கள் அநியாயத்திற்கு அழகான நிறத்தில் பூத்தன.
ஒருவேளை டீ தூள் செய்த மாயமோ என்னவோ ! பள்ளியில் படித்தபோது தோழிகள் சொன்ன டிப்ஸ்தான் இது.
மொட்டு ஒரு அழகு என்றால் ...... பூத்த பூவும் ஒரு அழகுதான் !
படாத பாடுபடும் வரிசையில் அடுத்து இணைந்திருப்பது ஜாதிமல்லி ! நன்றாகப் பூக்க ஆரம்பித்த பிறகு அவரும் இங்கே உலா வருவார்.
ஆமாங்கோ !
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் நன்றி தனபாலன்.
வணக்கம்
ReplyDeleteகண்னைக்கட்டுது அழகு.....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
படங்களை ரசித்துக் கருத்திட்டமைக்கு நன்றி ரூபன் .
Deleteஆஆ..ஆ..ரோசாப்பூ...அழகோ அழகு சித்ரா. படங்கள் எல்லாமே சூப்ப்ப்ப்பர்.
ReplyDeleteஎன்னோடதில் 3 பேர் இல்லை. அதற்கு பதில் 2பேர் புதிதா களத்தில். எங்களுக்கு இப்ப வெதர் சரியில்லை 5நாளா. ஒன்னுமே செய்யமுடியாது. வெயிட்டிங்.
'மூன்று பேர் இல்லை'யென்றால் குளிர் தாங்காமல் பட்டுப்போச்சா :( புதிதாகக் களத்தில் குதித்திருக்கும் அந்த ரெண்டு பேரையும் பார்க்கும் ஆவல் எட்டிப் பார்க்கிறது. அந்த 'நல்லால்லாத வெதர்' சீக்கிரமே முடிஞ்சுபோய் உங்க ப்ளாக்கிலும் பூக்கள் பூக்கட்டும் !
Deleteஆமாம்ல, பூக்களின் படங்கள் அழகா வந்திருக்கு. வருகைக்கு நன்றி ப்ரியசகி.
முதலில் பாராட்டு, இந்த அழகான படங்களுக்காக. நேரில் பார்த்தமாதிரி இருக்கிறது, எத்தனை மலர்கள் இருந்தாலும், ரோஜா பூ ஒரு தனி அழகுதான் அதன் இதழ்களும், அழகான இலைகளும் ,ரோஜாவின் மனமும். முதல் படமும் இரண்டாவதும் அருமை, என்ன அழகு. மொட்டும் அழகு, மலரும் அழகுதான். உங்கள் அலைபேசியில் படாதபாடு படவில்லை, அழகாக பகிர்ந்ததற்க்கு நன்றி பாராட்டும் அத்தனை மலர்களும். இந்தமுறை 75 % மார்க் .
ReplyDeleteஜாதிமல்லி உலாவிர்க்காக வெய்ட்டிங் , சீக்கிரம் பகிருங்கள் .
ஹ்ம், கொஞ்சம்கொஞ்சமா மதிப்பெண் கூடிட்டே வருது. இப்போ எங்கு பார்த்தாலும் வண்ணமயமான ரோஜாக்கள்தான். எவ்வளவு நேரம் 'வாக்' போனாலும் கஷ்டம் தெரிவதில்லை.
Delete"ஜாதிமல்லி உலாவிர்க்காக வெய்ட்டிங் , சீக்கிரம் பகிருங்கள்" ____ எங்க?, வச்சது வச்சபடியே இருக்கு. நல்லா வளரணும்னு வேண்டிக்கோங்க. நன்றி ராஜேஷ்.
தினமும் பேசி வாழ்த்துங்கள் செடிகளை, நம் அன்பு மனிதர்களை விட செடிகளுக்கு(பஞ்ச பூதங்கள்) நன்றாக புரியும். நல்ல மனது உள்ளவர்கள் வாழ்த்து மிகவும் பயன் தரும். நாங்களும் வாழ்த்துகிறோம் உங்களுக்காக, இந்த வீடியோ லிங்கை பாருங்கள்.
DeleteCalifornia Gardening " https://www.youtube.com/user/CaliforniaGardening "
வீடியோ நன்றாக உள்ளது. வாழ்த்திட்டாப் போச்சு :) வாழ்த்துக்களுக்கும் நன்றி இராஜேஷ் !
Deleteஆஹா...சூப்பர் சித்ரா...அந்தப்பூக்கள் உங்களின் பிளாகர் புகைப்படமாகவும் மாறிவிட்டது...என்ன ஒரு அழகு....அடுத்து ஜாதிமல்லிக்கு வெயிட்டிங்....
ReplyDeleteஆமாம் உமையாள், படத்தை நேத்துதான் மாத்தினேன். நல்லா ஞாபகம் வச்சிருக்கீங்க. வருகைக்கும், பாராட்டுக்கும், காத்திருப்புக்கும் நன்றி உமையாள்.
Deleteஆகா அழகு....
ReplyDeleteவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி அனு.
Deleteஇன்னமும் நிறைய பூக்கள் உங்கள் பூங்காவில் பூத்துக் குலுங்கட்டும்.....
ReplyDeleteவருகைக்கும், பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்றி வெங்கட்.
Deleteகண்களை கட்டிப் போட்டு விட்டது ரோஜா. அதை அருமையாய் படமெடுத்துப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சித்ரா. படங்களைப் பார்த்ததும் கை என்னையறியாமல் அந்த ரோஜாவைத் தொட்டுப் பார்க்கக் கிளம்பின.
ReplyDeleteஅருமை! அருமை!
ஓ, அப்படியா ! எனக்குமே கண்களாலும், கையாலும் தொட்டுப் பார்த்தும் இன்னும் ஆசை தீரவில்லை.
Deleteவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றிங்க.
ரோசப்பூ சின்ன ரோசாப்பூ....அழகோ அழகு! மனதைப் பறிக்கின்றது! படங்கள் மிக அருமை! மிக்க நன்றி!
ReplyDeleteபாடலுடன் பாராட்டும் ! மகிழ்ச்சி.
Deleteவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி கீதா.
அழகான ரோஜா பூக்கள். கண்ணை கவர்கின்றன. இன்னும் எங்களுக்கு ஸ்நோவே தீர்ந்தபாடில்லை. இனிமேல் தான் தோட்டம் போட வேண்டும்.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி தோழி.
ஸ்நோ போனபிறகு உங்க தோட்டத்தையும் போட்டுவிடுங்க. இங்கு சிலபல வருடங்களாக விண்டர் என்றால் என்னவென்றே தெரியாத அளவிற்கு வெயில் பிச்சு உதறுகிறது. அதனால் பூக்கள் எல்லாம் குளிர் காலத்திலேயே பூத்துவிடுகின்றன.
Deleteவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி முகில்.
அழகான ரோஜாப் பூக்கள்.... பன்னீர் ரோஜா இல்லையென்று நினைக்கிறேன்... ஆனால் அதே நிறம். வாழ்த்துக்கள்....
ReplyDeleteமுதலில் அதே நிறத்தில்தான் பூத்தது. பிறகுதான் மாறிப்போச்சு.
Deleteஅப்போ பன்னீர் ரோஜா இல்லையா !! :( ரொம்ப நாள் ஆச்சா, அதான், இப்போ எப்படி இருக்கும்னு மறந்துட்டேன். வாழ்த்துக்களுக்கு நன்றி எழில்.
சித்ராக்கா...இது பன்னீர் ரோஜா இல்லை!! பன்னீர் ரோஜா வாசனை ஊரையே தூக்குமே..பூக்களும் இன்னும் சிறியதாக இருக்கும். இணையத்தில் கூட படம் கிடைக்கமாட்டேன்னுது..ஊரிலும் பார்க்க முடியவில்லை!
Deleteஇது யு.எஸ். ரோஜாங்கோ! :) :)
நம்ம ஊர் ரோஜா http://chitrasundars.blogspot.com/2014/10/blog-post_44.html இங்கேயிருக்கு மகி. சரி, ஏதோ ஒரு 'ரோஜா'ன்னு மனச தேத்திக்க வேண்டியதுதான் !
Deleteஅழகான படங்கள்.
ReplyDeleteராமலஷ்மி,
Deleteவாங்க, உங்களின் முதல் வருகையில் மகிழ்ச்சி !
அழகான ரோஜாக்கள்! ஒரு செடி பல செடிகளாகப் பல்கிப் பெருக வாழ்த்துக்கள்! ;) :)
ReplyDeleteமகி,
Deleteபல பூக்கள் பூத்தால் பரவாயில்லை, பல செடிகளாகப் பெருகினால் தொட்டிகளுக்கு எங்கே போவது :)
வாழ்த்துக்களுக்கு நன்றி மகி.
அழகோ அழகு!
ReplyDeleteவருகைக்கு நன்றி ஆதி !
Delete