வியாழன், 16 ஏப்ரல், 2015

ரோஜாப் பூந்தோட்டம் !


எங்கள் ஊருக்குப் பக்கத்து ஊரில் உள்ள ரோஜா தோட்டத்துக்குப் போவோமா? நுழைவுக் கட்டணம் ஏதுமில்லை, அதனால பர்ஸைப் பற்றி கவலைப்படாம வாங்கோ!!

இதுதான் நுழைவாயில். நாங்கள் போன‌போது இரண்டு ஜோடிகள் தங்களின் ஃபோட்டோ ஷூட்டை முடித்துவிட்டு வெளியேறிக்கொண்டிருந்தனர். ஒரு ஜோடி வாசலில் நின்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்ததால் வாயிலை முழுமையாக எடுக்கவில்லை.

நேரே water fountain ஐப் போய் பார்த்துவிட்டு பிறகு நாலாபுறமும் சிதறி ஓடிப்போய் பூக்களை ரசித்து முடித்து, அல்லது நடந்துநடந்து கால்வலி வந்ததும் தொலைந்து போய் விடாமல் நேரே வாயிலை நோக்கி வந்திடுங்க. ஐந்தரை ஏக்கர்தான் என்பதால் தொலைய வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்.

பூக்களைவிட சுத்தமான இட‌மும், செடிகளை கவனமாக ட்ரிம் செய்யப்பட்ட அழகும் கவர்ந்தன.

ஒரு பூ பூத்தாலே கொள்ளை இன்பம், அவ்வளவு பூக்களையும் ஒருசேரப் பார்த்தபோது ..... தோட்டத்தை விட்டு வெளியே வரவே மனசில்லை.

செவ்வக வடிவிலான படங்கள் நான் எடுத்தவை, சதுரமானவை எல்லாம் (காசா ? பணமா ?) ஆத்துக்காரரிடமிருந்து வாங்கிக் கொண் டேன்.

18 கருத்துகள்:

 1. வணக்கம்
  சென்று பார்த்தமைக்கு நன்றி அழகிய புகைப்படங்கள் பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. ப்ரீயா எதுகொடுத்தாலும் வாங்குவதுதானே வழக்கம். இதுல கூட்டிட்டு வேறபோறீங்க. வராமல் விடுவோமா. சுற்றி பார்த்தாச்சு.ஆனா வர மனமில்லையே.!. அவ்வளவு அழகோ அழகு..!!.ஆரஞ்சு கலர் ரோஜா அசத்தல். அழகழகான படங்கள் சித்ரா. சூப்பர். சதுரம்தான் அதிகம் போல.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரோஜாவும் மொட்டுக்களின் கூட்டமுமாக பார்க்கவே அழகா இருந்துச்சு. கூட்டிட்டுப் போன எனக்கும்தான் வர மனசில்லே. நேரமிருக்கும்போது போட்டுவிடுகிறேன். உடன் வந்ததற்கும், தோட்டத்தை விட்டு 'வரமாட்டேன்' என அடம் பிடிப்பதற்கும் நன்றி ப்ரியா!

   "சதுரம்தான் அதிகம் போல" ___ நோட் பண்ணியாச்சோ ! சதுரம்தானே பிடிக்குது, ஹா ஹா ஹா !

   நீக்கு
 3. அழகோ அழகு... இன்னமும் க்ளோசப் ஷாட்ஸா இருந்தா இன்னும் அழகு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எழில்,

   படங்களில் மக்கள் இருப்பதுதான் பிரச்சினை. தனித்தனி ரோஜாவாகவும் எடுத்து வச்சிருக்கேன், தேடி எடுத்து போட்டுவிடுகிறேன். வருகையில் மகிழ்ச்சி எழில்.

   நீக்கு
 4. அழகிய படங்கள்......

  பார்த்துக் கொண்டே இருக்கலாம் எனத் தோன்றுகிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி வெங்கட்.

   நீக்கு
 5. நான் முன்பே பார்த்திருந்தால் ஆச்சாமரக் கதைக்கு உன்னிடம் பூந்தோட்டம் இரவல் வாங்கியிருப்பேன். என்ன அழகு. கொள்ளை அழகு என்று சொல்வார்களே. அது இதுதான் போலுள்ளது. பார்க்கப் பார்க்க அழகு கூடுகிறது. அன்புடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ அப்படியா ! தேவைப்படும்போது எடுத்துக்கோங்க.

   ஆமாம் அம்மா, ரோஜாத் தோட்டத்தை விட்டு வரவே மனமில்லை. வருகைக்கு நன்றிம்மா. அன்புடன் சித்ரா.

   நீக்கு
 6. அழகோ அழகு !ரோஜா மலர்கள் ..இங்கே அப்படி தனி தோட்டமில்லை..வெயில் வேணுமே :)
  ஆரஞ்சு மற்றும் சிவப்பு ரொம்ப அழகான கலர்ஸ்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெயில் இல்லையென்றால் கஷ்டம்தான்.

   அழகழகான நிறங்களில் பார்க்கவே சூப்பரா இருந்துச்சு ஏஞ்சல்.

   நீக்கு
 7. ரொம்ப அழகா இருக்கு சித்ராக்கா! உண்மையைச் சொல்லணும்னா...சதுரப்படங்கள் ரொம்ம்ம்ம்ம்ம்ப அழகு...ஹிஹிஹி! :) ;)

  பூந்தோட்டத்தோடு சேர்த்து வானமும் வருகையில் படத்தில் பூந்தோட்டத்தின் வண்ணமும், வானின் நீலமும் கலந்து கவிதை படிக்கிறது! சூப்பரா எடுத்திருக்கீங்க இரண்டு பேரும்! ஆளுக்கொரு பூங்கொத்து...அதே ரோஜாக்கள்ல!! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவ்வ்வ் ... சொல்லாமலே இருந்திருக்கலாமோ ! ரெண்டு பேருக்கும்தானே பூங்கொத்து, அதனால பரவாயில்ல :)

   பூங்கொத்து குடுங்க மகி, வாங்கிக்கிறேன், ஆனா அந்த ரோஜாவுல‌ வேணாம், அதுல‌ கை வைக்கக் கூடாதாம்.

   நீக்கு
 8. மனசெல்லாம் ரோசாப்பூ!!! கால் எல்லாம் வலிக்கலைங்க! இவ்வளவு அழகு ரோஜாக்கள் இருக்கும் போது, இயற்கையின் வரத்தையும், இயற்கையின் வினோதத்தையும் நமக்குத் தரும் இன்பத்தையும் நினைக்கும் போது வலியா.....அதெல்லாம் அப்புறம்....

  அந்த ஆரஞ்சு கலர், ஒரு வித பிங்க் ரோஜாக்கள் அழகு! எம்மாம் பெரிசு அமெரிக்கானாலே அங்க எல்லாமெ பெரிசு பெரிசாத்தானே இருக்கும்....இதுவும் அப்படித்தான் போல....

  வாட்டர் ஃபௌன்டன் அந்த நீர்பரப்பு ஆஹா!!!

  மிகவும் ரசித்தோம் அழகிய புகைப்படங்களை....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. "அமெரிக்கானாலே அங்க எல்லாமெ பெரிசு பெரிசாத்தானே இருக்கும்" ____ வந்த புதுசுல என் மனதிலும் இப்படித்தான் ஓடும். வீட்டுக்கு வர மனசில்லாமத்தான் வந்தேன். வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி கீதா.

   நீக்கு