Monday, April 20, 2015

எங்கள் வீட்டுத் தோட்டத்தில் _ ஜாதிமல்லி !


நீண்ட நாட்களாக ஜாதிமல்லி செடி வாங்க வேண்டுமென ஆசை. அடிக்கடி வீடு மாற வேண்டுமென்பதால் வாங்காமலேயே இருந்தேன். ஆனால் மார்ச் 20ந் தேதி சரியாக ஒரு மாதம் முன்பு உழவர் சந்தையில் இதைப் பார்த்ததும் வாங்காமல் வர மனசில்லை.

கடைக்காரர் இப்படித்தான் ஒரு காகிதப் பையில் போட்டுக் கொடுத்தார்.

வாங்கியபோது இருந்த மொட்டுக்கள் எல்லாம் கருகிப்போய் கொஞ்சம் கொஞ்சமாக புது மொட்டுக்கள் வைத்து அழகாக பூக்க ஆரம்பித்துவிட்டது.

                              நிழலில் தும்பி மாதிரி அழகா இருக்கு இல்லீங்களா !!

நிழல் உலகில் உலவும் இப்பூக்களை அடுத்த பதிவிலேயே வெளிச்சத்துக்கு அழைத்துக்கொண்டு வருகிறேனே !!

24 comments:

  1. அமெரிக்க உழவர் சந்தையில் வாங்கினதா ! வாவ் அழகு .மொட்டுக்களை சரமாய் தொடுக்க அழகோ அழகு !

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஏஞ்சல், உழவர் சந்தையில் வாங்கியதுதான். சரம் தொடுக்க வேண்டுமானால் பறிக்க வேண்டுமே :( மனசு வரமாட்டிங்கிது !

      Delete
    2. நோ :) பறிக்க வேண்டாம் ..எனக்கும் செடியில் வைத்து ரொம்ப நாள் பார்க்க ஆசை

      Delete
    3. ஏஞ்சலின்,

      இதுவே அந்த நாள் சித்ராவா இருந்திருந்தா முதல் நாள் மாலையே ஒரு மொக்கையும் விடாம பறிச்சிருப்பேன். மாறியாச்சு இல்ல !

      Delete
  2. ஆஹா ! அழகு ! வாசனை அபாரமாக இருக்குமே !

    ReplyDelete
    Replies
    1. ம் ம் ம் நல்ல்ல்ல வாசனை வருது தமிழ்முகில்.

      Delete
  3. ஆகா அழகு....வாசமான பூ .........

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அனு, அழகும், வாசமும் சேர்ந்து சூப்பர்.

      Delete
  4. வணக்கம்
    அழகு... அழகு...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. நான் கேட்காமலே வந்த மல்லி,சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டது.நினைத்தால் கவலை. அதை ஞாபகப்படுத்திவிட்டது உங்க மல்லி. படத்திலும் சஸ்பென்ஸாஆஆ..
    சரி தொடர்ச்சியை பார்ப்போம்.

    ReplyDelete
    Replies
    1. எப்படித்தான் பார்த்துக்கொண்டாலும் வெயில் இல்லாட்டி என்ன பண்ணும் ? வாங்க வாங்க அடுத்த பதிவுக்கு ! நான்தான் தெரியாம அங்கிருந்து இங்கு வந்துவிட்டேன் :)

      Delete
  6. நிழல் ஃபோட்டோக்கள் அருமை!!! நல்ல ஃபோட்டோக்ராஃபி சகோதரி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி கீதா !

      Delete
  7. மல்லி..... ரொம்பவே அழகு.... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி வெங்கட் !

      Delete
  8. அழகும் வாசனையும் கொண்ட பூ

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் எழில், வாசனைக்காகவே அடிக்கடி அங்கே போய் நிற்பேன்.

      Delete