Tuesday, August 6, 2013

உன்னிப் பூ


இது ஒரு பூவின் மொட்டு. எங்கள் ஊர் கிராமங்களில் எங்கும் பூத்திருக்கும். இங்கு நாங்கள் இருக்கும் இடத்திலும் நிறைய பூத்திருக்கிறது. பூவின் பெயர் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். நான் சொல்லும் பெயர் பொருந்துமா எனத் தெரியவில்லை. இது எந்தப் பூவின் மொட்டு என‌ நீங்கள் சொன்னால் தலைப்பாக்கிவிடுகிறேன்.

பூ கொத்தாகப் பூக்கும். காய்களும் அப்படியே. அவை பழுத்ததும் பறித்துத் தின்றதாகக்கூட‌ ஞாபகம்.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இப்போதும்(05/30/14) இந்தப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன.

இவற்றைப் பார்க்கும்போதெல்லாம் சின்ன வயசுல ஒவ்வொரு பூவாக எடுத்து தேன் உறிஞ்சியதெல்லாம் நினைவுக்கு வரும் :)

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

26 comments:

  1. இதனை நாங்க "உன்னிப்பூ" என சொல்வோம் என நினைவு! ;) பழங்கள் கருப்பு நிறத்தில் மிளகு சைஸில் குட்டிக்குட்டியா இருக்கும்தானே சித்ராக்கா? இங்கும் சாலையோரங்களில் இந்தச் செடிகள் உண்டு.

    மினியேச்சர் பூக்கள் அழகாக இருக்கும், முன்பிருந்த கேமராவில் போட்டோ எடுக்க முயற்சித்து முடியாமல் விட்டுட்டேன். பெரிய கேமரா வந்தபிறகு இந்தப் பூக்களிருக்கும் சாலைக்கு வாக் போகவே இல்லை. நீங்க சூப்பரா ஜூம் செய்து எடுத்துட்டீங்க! :)

    இதெல்லாம் நைட் 11 மணிக்கு, தூக்க கலக்கத்தில எழுதறேன். நான் சொன்னதுக்கும் உங்க பூவுக்கும் சம்பந்தமே இல்லன்னா என்னையத் திட்டிப்புடாதீங்க..மீ பாவம்ம்ம்ம்ம்! :))))

    ReplyDelete
    Replies
    1. இந்தப் பூவுக்கு ஒரு தலைப்பையும் கொடுத்து, இதையும் ஒரு பதிவா நெனச்சு, இரவு 11 மணிக்கு பின்னூட்டம் வருதுன்னா,... எப்படி பின்னூட்டம் போடலாம், க்ர்ர்ர்ர்....

      "பழங்கள் கருப்பு நிறத்தில் மிளகு சைஸில் குட்டிக்குட்டியா இருக்கும்தானே"_____அதே, அதேதான் மகி. நாங்க 'நுனிக்கிச்சாம் பூ'னு சொல்லுவோம். எங்க அப்பார்ட்மென்டிலும் பூக்கிறது. நம்ம ஊர் செடியில குட்டிகுட்டியா முள் இருக்கும், அது இங்கே மிஸ்ஸிங்.

      "போட்டோ எடுக்க முயற்சித்து முடியாமல் விட்டுட்டேன்"____இந்தப் பிரச்சினை எனக்குத்தான்னு நெனச்சேன்,உங்களுக்குமா!! அதிலும் வயலட் நிறத்தில் உள்ள பூவை சுத்தமாக எடுக்க முடிவதில்லை. வேறு நல்ல காமிராதான் வாங்க வேண்டும்.

      Delete
    2. ..நாங்க இதை உன்னிப்பூ என்றழைப்போம் :)

      Delete
    3. நீங்க எல்லாருமே 'உன்னிப்பூ'ன்னுதான் சொல்றீங்க. ஆனா எங்க ஊர் பக்கம் மட்டும் வேற பேரா இருக்கே.

      Delete
  2. //இந்தப் பூவுக்கு ஒரு தலைப்பையும் கொடுத்து, இதையும் ஒரு பதிவா நெனச்சு, இரவு 11 மணிக்கு பின்னூட்டம் வருதுன்னா,... எப்படி பின்னூட்டம் போடலாம், க்ர்ர்ர்ர்....// ??!???! இந்த கர்ர்ர்ர்ர்ர்ர்-யாருக்கு??! எனக்கா?? இல்ல, வேறு யாருக்குமா? ;) எதுவுமே புரிலையே! ஙேஏஏஏஏஏ!! :)

    மஞ்சள் பூ- ரோஸ் கலர் பூ - சிவப்புப் பூ எல்லாம் அழகா வந்திருக்கே! வயலட் மட்டும் அடம் பிடிக்குதா? என்னிடம் இருக்கும் கேமரால பெரிய லென்ஸ் மாட்டினால் கட்டாயம் பூவை சிறை பிடிக்கலாம். ஆனா எனக்கு இதுவரை இந்தப் பூவின் நினைவே வரலையே!

    //வேறு நல்ல காமிராதான் வாங்க வேண்டும்.// கரெக்ட், நல்லதா ஒரு டாப் க்ளாஸ் டி.எஸ்.எல்.ஆர். கேமராவா வாங்குங்க. ;)

    ReplyDelete
    Replies
    1. "மஞ்சள் பூ- ரோஸ் கலர் பூ - சிவப்புப் பூ எல்லாம் அழகா வந்திருக்கே!" ____ நீண்ட முயற்சிக்குப் பிறகு கிடைத்தவைதான் இவை. லைட் & டார்க் வயலட், இளம் மஞ்சள், அழகான ஒரு சிவப்பு நிறம் ____ இவையெல்லாம் முழு செடியாக எடுத்தால் ஓரளவு பரவாயில்லை. ஆனால் தனிப்பூவாக எடுத்தால்..ம்ஹூம். நீங்களாவது உங்க காமிரால பிடிச்சு போடுங்க. லேட்டஸ்ட் மாடல் பார்த்துதான் வாங்கணும். அது எப்போன்னுதான் தெரியல.

      Delete
  3. நீங்கள் போட்டிருக்கும் இந்தப்பூ அந்திமந்தாரை என்று நினைக்கிறேன். பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது. மாலையில் மலரும் பூ.
    என்ன பெயர் வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். மிக அழகாக படிப்படியாக படம் எடுத்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்லும் அந்திமந்தாரை பூவை கூகுள் இமேஜில் பார்த்தேன். நாங்கள் அவற்றை 'அந்திமல்லி'னு சொல்லுவோம். அதுவும் இங்கு நிறைய பூக்கிறது. பல நிறங்களில், நல்ல வாசனையாக இருக்கும். மாலையில்தான் பூக்கும். சீக்கிரமே வாடிவிடும். மிளகு மாதிரியே விதை இருக்கும்.

      மகி சொன்ன மாதிரியேதான், இந்தப் பூ மெதுவாக பூக்க ஆரம்பித்து வாரக்கணக்கில் அப்படியே இருக்கும். எங்க ஊர்ல பெரியபெரிய வேலி மாதிரி நிறைய பூத்துக்கிடக்கும்.

      Delete
  4. //நீங்கள் போட்டிருக்கும் இந்தப்பூ அந்திமந்தாரை என்று நினைக்கிறேன். பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது. மாலையில் மலரும் பூ.// இது அந்தி மந்தாரை இல்லை ராஜி மேடம்! இந்தப் பூ நாளெல்லாமே பூத்திருக்கும். :) அந்திமந்தாரை சற்றே பெரிய ஒற்றைப் பூக்களாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. உங்க ஊர் 'அந்திமந்தாரை', எங்க ஊரில் 'அந்திமல்லி'.

      Delete
    2. எங்கூரிலும் அது "அந்திமல்லி"தான் சித்ராக்கா! :) ராஜிமேடம் அந்திமந்தாரை என சொன்னதால் நானும் அப்படியே சொன்னேன். ஹிஹி...

      வெள்ளை, பிங்க், சிவப்பு, மஞ்சள் எனப் பலநிறங்களில் அநிதிமல்லி இருக்கும். மிளகு அளவுக்கு விதைகள் வரும். ஊர்ல ரொம்ப சாதாரணமாக பல இடங்களில் பார்க்கலாம். இங்கும் சிலபல இடங்களில் பார்த்திருக்கேன்.

      Delete
    3. இங்கும் நிறைய பூக்கிறது இநத அந்திமல்லி. இந்தப் பூவைக்கூட ஒன்னுவிடாம பறிச்சு கட்டி சாயந்திரத்துல வச்சிப்போம். வச்ச சீக்கிரமே வாடிவிடும். இருந்தாலும் விடுவதில்லை.

      Delete
  5. 'நாய் உண்ணி' - பழம் பார்க்க நாய்களில் பிடிக்கும் உண்ணி போல் இருப்பதால் அந்தப் பெயர்.
    'குரங்கு தின்னிப் பழம்' என்றும் சொல்வார்கள்.

    என்னிடம் வெள்ளை, மஞ்சள், ஊதா நிறங்கள் உள்ளன. இந்த பெரிய செடிகளுக்கு நிறைய பட்டாம்பூச்சிகள் வருமே!

    ReplyDelete
    Replies
    1. 'குரங்கு தின்னிப் பழம்'_______குரங்கை விட்டால்தானே சாப்பிட! குட்டிக் குரங்குகளாகிய நாங்கள் சாப்பிட்டதாகத்தான் ஞாபகம்.

      பட்டாம்பூச்சி வருதான்னு தெரியல, ஆனால் தேன்சிட்டு வருகிறது.லாண்டரி போடும்போது கொஞ்சம் பொழுதுபோகாமல் இவற்றை பார்ப்பேன்.

      எங்களால் படங்கள் எடுக்க முடியாதவை எல்லாம் உங்களிடம் இருக்கின்றன போலும்.

      Delete
    2. இமா,

      இதில் தேன் இருக்கும் என்பதால் ஒவ்வொரு பூவாக எடுத்து உறிஞ்சுவோம். பழத்தையும் விட்டுவைக்க மாட்டோம்.

      Delete
  6. Found some time today to fetch the lable of my plant. ;) It is 'lantana'

    http://en.wikipedia.org/wiki/Wikipedia:Featured_picture_candidates/Lantana_flower_and_leaves

    https://www.google.co.nz/search?q=lantana+flower+images&client=firefox-a&hs=6Lg&rls=org.mozilla:en-GB:official&channel=fflb&tbm=isch&tbo=u&source=univ&sa=X&ei=guQGUqKlJ6b7iQfP4oDwBg&ved=0CCsQsAQ&biw=1280&bih=630

    ReplyDelete
    Replies
    1. lantana வை கூகுள் இமேஜில் போட்டுப் பார்த்து ரசித்தேன். சிரமம் பாராது லிங்க் தந்து உதவியதற்கு நன்றிங்க.

      Delete
  7. இது நிச்சயம் அந்தி மந்தரை இல்லை. மகி சொல்லியிருப்பது போல தனித்தனியாக இருக்கும் அந்தி மந்தாரை.எங்க ஊர்ல கூட வெளி ஓரமாக இந்த பூக்கள் நிறைய முளைத்திருக்கும்.

    வண்ண வண்ண பூக்கள் ரொம்ப அழகு!

    ReplyDelete
    Replies
    1. சில வீடுகளில் மஞ்சள் & சிவப்பு மலர்கள் உள்ள உன்னிப்பூ செடிகளைப் பார்க்கவே மங்கலகரமாக உள்ளது.

      இங்கு, நீங்கள் சொல்லும் அந்திமந்தாரையும் நிறைய பூக்கிறது.

      Delete
  8. நாய் உண்ணி மரம்

    ReplyDelete
    Replies
    1. வாங்க சாரதா,

      ஒருவேளை நாய் உண்ணி செடியாய் இருக்கலாம். இது மரத்தில் பூக்கும் பூ இல்லை. சிறு செடிகளில் பூக்கும் பூ. தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்விற்கும் நன்றிங்க.

      Delete
  9. இங்கேயும் அழகாகத்தான் இருக்கு. வயலட் ரெம்ப அழகு.

    ReplyDelete
  10. ப்ரியசகி,

    இங்கேயும் வருகை தந்ததில் மகிழ்ச்சி. இந்த வயலட் நிறப் பூச்செடி ஒரு பெரிய பந்து மாதிரி வச்சிருந்தாங்க. முழு செடியா எடுத்தா நல்லா வந்தது. தனிப் பூவாதான் எடுக்க முடியல.

    ReplyDelete
  11. Yeah...Lantena உன்னிப்பூ தான்


    ReplyDelete
  12. அந்திமந்தாரை call as Mirabilis Jalapa பத்ராக்ஷி endrum alaikapadum

    ReplyDelete
  13. உன்னிப் பூ..

    காட்டுல மாடு/மான்கள் மேல இருக்கும் உன்னி இதுல மாட்டி உன்னி பூச்சி ஊர்ந்துட்டு இருக்கும்.

    இதொட பழம் சூப்பரா இருக்கும்..

    ReplyDelete