Thursday, December 26, 2013

அது போன மாசம்...... !! ......இது இந்த மாசம்.......!!.(தொடர்ச்சி)

மரங்கள் பசுமையாக இருக்கும்போது ஒன்றும் தெரிவதில்லை, அதுவே இலையுதிர் காலத்தில் நிறம் மாறத் தொடங்கும்போது மனதில் ஒரு சந்தோஷம் வந்துவிடும்.

அவை வித்தியாசமான நிறங்களில் இருப்பதைப் படம் எடுத்து வைத்துக் கொள்வேன்.  அவ்வாறு எடுத்தவைகளில் ஒருசில படங்கள் இங்கே....


இரண்டும் ஒரே மரம்தான். இலைகளுடனும், இலைகள் உதிர்ந்த நிலையிலும் ...

"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""


"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

மேலேயுள்ளதுபோல் இருந்த இந்தத் தெரு, இப்போது கீழே இருப்பது மாதிரி பார்க்க, கொஞ்சம் பாவமாத்தான் இருக்கு...

"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

மேலே படத்தின் வலது பக்கத்தில் இருப்பது சென்ற ஜுன் மாதம் 6_ஆம் தேதிவரை எங்கள் மகள் படித்த பள்ளி. ஒரு நினைவுக்காக இங்கே பதிந்துகொண்டேன்.

""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""


""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

                           இவையிரண்டும் எங்கள் குடியிருப்பில் உள்ளவை.

""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

17 comments:

  1. கொஞ்சம் பாவமாத்தான்.. இல்லை இல்லை... ரொம்பவே பாவமாத்தான் இருக்கு...!

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க, இன்னும் ஒரு மாதத்திற்கு இப்படித்தான் இருப்பாங்க, பிப்ரவரியில துளிர்விட ஆரம்பிச்சிடுவாங்க.

      Delete
  2. இன்னும் இரண்டு மாதத்தில் துளிர் விடுமில்லையா ! அப்பொழுது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் , நமக்கு மட்டுமில்லை, செடிகளுக்கும் தான்.(நான் துளிர் விட்டுட்டேனே என்கிற பெருமையில்)

    ReplyDelete
    Replies
    1. இப்பவே சில மரங்களில் மொட்டுகள் வந்துவிட்டன. இன்னும் ஒரு பத்து நாட்க‌ளில் பூக்க ஆரம்பித்துவிடும். அதன்பிறகு துளிர் வந்து சூப்பராத்தான் இருக்கும்.

      Delete
  3. அழகு இலை உதிர்த்தபின் அவலமாய்த்தான் உள்ளது...

    ReplyDelete
    Replies
    1. கலர்கலரா பாத்துட்டு வெறும் குச்சிகளாய் பார்ப்பது கொஞ்சம் கஷ்டம்தான். இன்னும் சில நாட்களில் சரியாகிடும். உங்கள் வருகைக்கும் நன்றிங்க.

      Delete
  4. Beautiful fall colors! We didn't get much colors this year here. Lucky you! :)

    ReplyDelete
    Replies
    1. அதுக்குதான், இன்னும் கொஞ்ஞ்ஞ்சம் தள்ளி வீட்டை மாத்தி இருந்திங்கன்னா நீங்களும் பார்த்து ரசித்திருக்கலாமே ! இதை எத்தனை வருடங்கள் பார்த்தாலும் சலிப்பதில்லை.

      Delete
    2. /இன்னும் கொஞ்ஞ்ஞ்சம் தள்ளி வீட்டை மாத்தி இருந்திங்கன்னா// ஹஹ்ஹா!! குளிரும் வெயிலும் கொஞ்ஞ்ஞ்சம் அதிகமா இருந்தாத்தானே இப்படி கலர் பார்க்கலாம்! எங்களுக்கு எல்லாமே பர்ஃபெக்ட்டா இருக்கு, அதான் இந்த வருஷம் கலர் வரலை. :)

      இலையுதிர்கால வண்ணங்கள் பார்க்க போட்டோஸ் அல்லது ஒரு சின்ன ட்ரிப் போதுமே, வீடு மாத்தணுமா சித்ராக்கா! ;)))

      Delete
  5. படங்கள் அருமையாக இருக்கின்றன மேடம். இயற்கையின் அழகுக்கு நிகர் எதுவுமில்லை என்பதை ஊருக்கு உரத்துச்சொல்கின்றன, உங்கள் படங்களும், அவற்றில் போஸ் கொடுக்கும் மரங்களும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஆறுமுகம்,

      நீங்கள் சொல்வதும் உண்மைதான். இயற்கைக்கு நிகர் இயற்கைதான். உங்கள் முதல் வருகைக்கும், கருத்திப் பகிர்விற்கும் நன்றிங்க.

      Delete
  6. பல வண்ணங்களை காட்டி அசத்துகிறதே.... குச்சி குச்சியாய் இருக்கும் போது பாவமாத் தான் இருக்கு...

    ReplyDelete
    Replies
    1. இன்னும் ஒரு மாதம்தாங்க இப்படியிருக்கும், பிறகு களைகட்டிவிடும்.

      Delete
  7. அழகான மரங்கள்... இலையில்லாது இருக்கும் போது மனதின் ஓரத்தில் ஒரு வருத்தம் - மீண்டும் துளிர்த்து விடும் என நினைக்கும்போது மகிழ்ச்சி!

    ReplyDelete
    Replies
    1. துளிர் வரும்போது அதனுடன் சேர்ந்து நமக்கும் ஒரு சந்தோஷம் வரத்தான் செய்யும். வந்த புதுசுல 'இனிமே அவ்ளோதான், பட்டுப்போச்சி'னு தான் நினைத்தேன். பிறகு அதுவே பழகிப்போச்சு.

      Delete
  8. kannirkul a.c. vaitharpol kulukuluvendru irukirathu parpatharke..nandri :))

    ReplyDelete