Thursday, December 5, 2013

நேரம்.....நல்ல நேரம் !!

புதுமனை புகுவிழாவிற்கு முதல் நாள் மாலையே வந்திருந்த வெளியூர், உள்ளூர் உறவுகள் எல்லாம் இரவு சாப்பாடு முடிந்ததும், அங்கேயே புது வீட்டில் தங்கி ஓய்வெடுத்துக்கொண்டு, அதிகாலை கிரஹப்பிரவேச‌ம் முடிந்ததும், காலை சாப்பாடு முடிந்ததும் முடியாததுமாக அவரவர் ஊருக்கு செல்ல ஓவ்வொருவராக கிளம்பிக்கொண்டிருந்தனர்.

ஆமாம், வேலைக்கு செல்ல வேண்டிய பெரிய‌வர்கள், பள்ளிக்குத் திரும்ப வேண்டிய பிள்ளைகள் என ஆளுக்கொரு திசையில் வாகனத்தைப் பிடிக்க பறந்துகொண்டிருந்தனர்.

மிக நெருங்கிய உறவுகள் மட்டுமே, மேற்கொண்டு அங்கு தங்கியிருந்து, மீதமுள்ள வேலைகளைப் பார்த்துக்கொண்டும், அந்த சாக்கில் தங்கள் உறவுகளோடு அள‌வளாவியும் நேரத்தைப் போக்கினர்.

அந்த நெருங்கிய உறவுகளில் பாலாவும் ஒருத்தி. உறவுப் பிள்ளைகளுடன் த‌ன்னுடைய‌ இரண்டு வயது மகளும் ஆர்வமாக விளையாடியதால் அவளால் மகளை அங்கிருந்து பிரித்து கூட்டிக்கொண்டு செல்ல மனமில்லாமல், தான் வேலை செய்யும் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு அன்றைக்கு விடுப்பு எடுத்துக்கொள்வதாகக் கூறிவிட்டு, வேலைக்குப் போகாமல் மட்டம் போட்டுவிட்டாள்.

கிரஹப்பிரவேச நிகழ்ச்சியை நல்லவிதமாக‌ முடித்த சந்தோஷத்திலும், களைப்பிலும்  த‌ன் சகோதரி அவள் அருகில் வந்து உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறாரே தவிர அவரது பார்வை முழுவதும் பாலாவின் மகளைவிட்டு துளியளவும் நகரவில்லை.

சகோதரி பாலாவைப் பார்த்து,  "ஏய், நான் ஒன்னு சொல்லுவேன், கேட்பியா?" என்றார்.

சகோதரி எதையோ சொல்ல வருகிறார் என்ற ஆவலில் 'சொல்லு' என்றாள் பாலா.

'உன் மகள் பிறந்த நேரம் சரியில்லைன்னு நினைக்கிறேன், அதனால...".

அதற்குள் பாலா இடைமறித்து "அதனால?" என்றாள் சந்தேகத்துடன்.

"அவள் ஜாதகம் சரியில்லைன்னு நினைக்கிறேன். நல்ல ஜோஸியராப் பார்த்து அவள் ஜாதகத்தைக்காட்டு" என்றார் சகோதரி.

"அப்படியா? அவள் ஜாதகம் சரியில்லைன்னு எத வச்சி சொல்ற" என்றாள் பாலா.

"ஒரு வீட்ல ஒரு குழந்தை பிறந்துச்சுன்னா, நல்ல வேலை கிடைப்பது, மனை வாங்குவது, வீடு கட்டுவதுன்னு நிறைய வசதி வாய்ப்புகள் பெருகணும். இதில் எதுவுமே உனக்கு அமையலயே", என்றார்.

மேலும் "இப்போ எங்களையே எடுத்துக்கோ, என் பையன் பிறந்ததும் இந்த மனையை வாங்கினோம், அதற்குள் வீடும் கட்டிவிட்டோம், அவனின் நல்ல நேரம் இன்னும் சில மனைகளும் வாங்கும் பாக்கியம் அமைந்தது, நம் அப்பாகூட சொன்னார், என் பையனின் ஜாதகம் மாதிரி எல்லோருக்கும் அமையாதாம்" என்று பெருமையுடன் சொன்னார், பாலாவின் மகளுடன் விளையாடிக்கொண்டிருந்த தன‌து மூன்று வயது மகனைப் பார்த்து .

"அதுதான் அப்பாவே சொல்லிட்டாரே, பிறகென்ன?" என மனதிற்குள் நினைத்துக்கொண்டாள் பாலா.

வசதி வாய்ப்புகள் பெருகினால் மட்டும்தான் மகிழ்ச்சியா என்ன ? பண வசதி மட்டும்தான் வாழ்க்கையா? இல்லை அதுதான் அதிர்ஷ்டமா?

பாலாவுக்கு எந்தக் குறையும் இல்லாமல் நன்றாகத்தானே இருக்கிறாள். அப்படியே குறைகள் இருந்தாலும் அதற்கும் த‌ன் குட்டிப் பாப்பாவுக்கும் என்ன சம்ப‌ந்தம்? புரியவில்லை அவளுக்கு.

"சரி, என் மகளோட‌ பிறந்த நேரம் & ஜாதகம் சரியில்லைன்னே வச்சிப்போம், அதுக்கு என்ன செய்வதாம்?" என்றாள் பாலா.

"ஜாதகத்தை நல்ல ஜோசியரிடம் காட்டினால் அவரே என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை சொல்லுவார், அதை நீ செய்துவிட்டால் தோஷம் ஏதும் இருந்தால் நீங்கிவிடும்" என்றார் சகோதரி.

'இதுதான்' என்று சகோதரி முடிவே பண்ணிவிட்டார்போல் தெரிந்தது பாலாவுக்கு.

"என்னதான் சகோதரி உறவு என்றாலும் இவர் யார் த‌ன் மகளைக் குறை சொல்ல ? எந்த சரியில்லாத ஜாதகமா இருந்தா என்ன? எங்கள் வீட்டு பொக்கிஷம் அல்லவா எங்கள் மகள் !" என பாலா தனக்குத்தானே  சொல்லிக்கொண்டு, தன் சகோதரியைப் பார்த்து, "நீங்கவே முடியாத தோஷம்னு ஜோஸியர் சொல்றாருன்னு வச்சுப்போம், அப்போ என்ன செய்வதாம்?" என்றாள்.

இதை சற்றும் எதிர்பாராத சகோதரி "ஏய், நீ இதுமாதிரி ஏதாவது ஏடாகூடமா சொல்லுவேன்னு எனக்கு முன்னமே தெரியும், இருந்தாலும் நீ நல்லா இருக்கணுமேன்னு சொன்னேன், இதைக் கேட்பதும் கேட்காததும் உன் விருப்பம்" என்றார்.

ஏன்தான் இன்றைக்கு விடுப்பு எடுத்தோமோ என்றிருந்தது பாலாவுக்கு.

இதையெல்லாம் யோசித்து சொன்ன தன் சகோதரியால், அந்தக் குட்டிப் பாப்பா பின்னாளில் நல்ல நிலைக்கு வராமலா போய்விடப்போகிறது என்பதை முன்கூட்டியே தெரிந்திருக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டதே !!

12 comments:

  1. சித்ரா,
    பாலாவின் சகோதரி போல் நிறைய பேர் உள்ளார்கள். அவர்கள் பேச்சுக்களை கண்டுகொள்ளாமல் விடுவதே புத்திசாலித்தனம் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மறந்துவிட்டாலும் என்றைக்காவது வந்து எட்டிப் பார்க்கிறதே !

      Delete
  2. இதைபோல நிறையப் பேர் பேசுவார்கள். இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுவிட வேண்டும். இப்போது நாம் இருக்கும் நல்ல நிலைபற்றி நினைத்து சந்தோஷப்படலாம். வரப்போகும் புதிய ஆண்டில் இந்த மாதிரி கசப்பான நினைவுகளை நினைப்பதில்லை என்று முடிவெடுப்போம்.
    என் பாட்டி சொல்லுவார்: திட்ட திட்ட திண்டுக்கல்; குட்ட குட்ட குண்டுகள்; வைய வைய வைரக்கல் என்று. நம்மை தாழ்த்தி பேசுபவர்களின் பேச்செல்லாம் நமக்கு ஆசீர்வாதங்களாக மாறி நம்மை நல்ல நிலையில் வைக்கும்.

    ReplyDelete
  3. ஒரு கருத்துரை போட்டேன் வந்ததா?

    ReplyDelete
  4. panathirku adimaiyavathin vilaivu apadiyellam pesa vaikirathu..enaku avargalai paarkum pothu parithapa padave mudikindrathu...ungal kathaiyil varum thayin pen nalvalangaludan vaalvaal aval thayin ullam pondre :)

    ReplyDelete
    Replies
    1. ஞானகுரு, இது கதைதான், கதைல ரொம்ப மோசமான ஒரு கேரக்டர் இருந்தாத்தானே, சுமாரான கேரக்ட‌ரும் ரொம்பஅஅஅ நல்லவங்களாத் தெரிவாங்க, அதுக்குதான்.

      கேக்கணும்னு நெனச்சேன், கிழேயுள்ள இரண்டு பின்னூட்டங்களும் உங்களதுதானே !!

      Delete
    2. enathu illai..vachurukura oru blog ku varave time kedaikama iruken..time kedachalum system kedaikala..serinu mobile net vachiruntha atha use pani comments elutha mudiurathu illa...ipdi poguthu..:)

      pin kuripu: en blog ku varathe unga posts padika than :)

      Delete
  5. madam dosham jadhagham ellam onnum illa .kai kalu ellam kadaval koduthurukhare .athuvaey periya varam than athu illam intha ulaghula evalavu peru irukhangha .ithu ellam irundhall panam automatic ca varum....

    ReplyDelete
  6. muda nambikai adigham irukhu innum endha ulaghathula appadinghardha azuthama sollirukingha nadir

    ReplyDelete