Friday, December 20, 2013

அது போன மாசம்...... !! ......இது இந்த மாசம்.......!!


நாங்கள் குடியிருக்கும் வளாகம் இது. கலர்ஃபுல்லாக இருப்பது நவம்பர் மாதம். இலைகளை உதிர்த்துவிட்டு குச்சிகளாக‌ நிற்பது டிசம்பர் மாதம்.


அதே வளாகம்தான்...

வேறொரு கோணத்தில்....

மஞ்சள் சாமந்தி செடிகள் அகற்றப்பட்டு, அந்த இடத்தில் மீண்டும் Pansy மலர் செடிகள் நடப்பட்டுள்ளன.


சுந்தர் வேலை செய்யும் இடம். .......நவம்பரில்....
 
                                 
                                    டிசம்பரில்....
          

14 comments:

  1. அருமையான புகைப்படங்கள்......

    இயற்கை எழில் கொஞ்சுகிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க, இலைகளே பூக்கள் மாதிரி பல நிறங்களில் மாறுவது ஒரு அழகுதாங்க.

      Delete
  2. அடடா...! அடடா...! அழகோ அழகு....!!!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், ரசனைக்கும் நன்றிங்க.

      Delete
  3. பசுமையான இனிமையான சூழ்நிலை. மஞ்சள் பூக்கள், கட்டடங்கள் என எல்லாமே அழகோ அழகு தான். பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றிங்க ஐயா .

      Delete
  4. மீண்டும் எல்லா மரங்களும் மார்ச்சில் , பச்சை புடைவையில், மிக அழகான இளம்பெண்கள் போல்
    காட்சியளிப்பதையும் ஒரு போட்டோ போட்டு விடுங்கள் .இல்லையெனில் மரங்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

    ReplyDelete
    Replies
    1. ஏற்கனவே பயந்துபோய் இருக்கேன், நீங்களும் இப்படி மிரட்டினா....!!

      சாதாரண பச்சை நிறத்தில் இருக்குபோது 'நம்ம ஊரிலும் இப்படித்தானே இருக்கு'ன்னு எடுக்காமல் விட்டுவிடுகிறேன். கண்டிப்பா 'மார்ச்'ல எடுத்து மரங்களின்(முக்கியமா உங்களின்) கோபத்தைத் தணிக்க முயற்சிக்கிறேன்.

      Delete
  5. கண்ணுக்கு விருந்து!

    ஒரு காலத்தில் பெங்களூரு இப்படித்தான் இருந்தது. காலையில் வாக்கிங் போனால் தெருவின் இருமருங்கிலும் நீலம், மஞ்சள் எனப் பூக்கள் மரத்திலிருந்து கொட்டி பாய் விரித்தாற்போல இருக்கும்.
    இப்போது மெட்ரோ, மேம்பாலம் என்று எல்லா மரங்களும் கட்!

    ReplyDelete
    Replies
    1. 94,95 ல் அழகான பெங்களூரை நானும்கூட பார்த்திருக்கேன். நீங்க சொல்வதை கேட்கும்போது கஷ்டமாதான் இருக்கு.

      ஒரு தடவ இந்த மஞ்சள் சாமந்தி வளர்ந்த பிற‌கு படம் எடுத்து போடச் சொல்லியிருந்தீங்க. விருப்பத்தை நிறைவேத்தியாச்சு !!

      Delete
    2. நேயர் விருப்பத்தை உடனே உடனே நிறைவேற்றும் தலைவர் (தலைவி!) வாழ்க!

      Delete
    3. இப்படி தலைவி பட்டமெல்லாம் கொடுத்து பெருமைக்கு பெருமை சேர்த்த தானைத் தலைவி வாழ்க ! வாழ்க !!!

      Delete
  6. அழகான படங்கள்... கண்களுக்கு விருந்தாக அமைந்தன...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், படங்களை ரசித்து கருத்திட்டமைக்கும் நன்றிங்க.

      Delete