Saturday, December 14, 2013

பேர் வைக்கலாம் வாங்க !!


                                                    ஹலோ, ஏன் சோகமா இருக்க ?


என்ன ஆச்சு ! கண்ணெல்லாம் கலங்குது ? தூசு ஏதும் பட்டுடுச்சோ ? என்னதிது ! அழவே ஆரம்பிச்சிட்ட !!


அதுவா, இன்னைக்கு வலைச்சரத்துல, சித்ராவோட பிரிவுபசார விழாவுக்கு போய்ட்டு வந்தேனா, அங்க அவங்க பேசினத கேட்டு அழுகாச்சி, அழுகாச்சியா வருது.

இதுக்கெல்லாமா அழுவாங்க, கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கலாம் வா !!! சரியாப்போயிடும் !!


இது என்ன பறவைன்னு தெரியலீங்க. ம்ம்..ம‌யில் ?....இல்லைன்னு நினைக்கிறேன் ....கொக்கு ? சான்ஸே இல்லை, ரெண்டு கால் இருக்கறதால கொக்கும் இல்லை....அன்னம் ?....இதுவரை நேரில் நான் பார்த்ததில்லை, ஒருவேளை அன்னமாக‌த்தான் இருக்குமோ !! யாராவது வந்து சொன்னால் நன்றாக இருக்கும் .

9 comments:

  1. ரசித்தேன்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றிங்க‌ தனபாலன்.

      Delete
  2. இது என்னவாக ,இருக்கும்? கூகுளிடம் விசாரிப்போம்.

    ReplyDelete
    Replies
    1. உங்க ஐடியா நல்லாருக்கு. ஆனால் என்ன பேர் சொல்லி விசாரிப்பது !!

      Delete
  3. பறவை அழகாயிருக்கு.......ஆனா என்ன பறவை என்று தெரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. பார்க்க கொள்ளை அழகாகத்தான் இருந்தன. பெயர்தான் தெரியவில்லை !

      Delete
  4. கொக்கு+அன்னம் = ?
    உங்கள் அண்டை அயலில் இருப்பவர்களைக் கேளுங்கள் இல்லையின்ன இமா வந்து சொல்ற வரைக்கும் காத்திருக்கலாம். அன்னம் முழுக்க வெள்ளையாக இருக்கும் னு நினைக்கிறேன். (சும்மா... தெரிஞ்சாப்ல காட்டிக்கலாம்னு...!)

    விசாரிச்சுட்டு இன்னொரு பதிவு போடுங்க : பேரு வைச்சாச்சுன்னு!

    ReplyDelete
    Replies
    1. அங்கு எங்களை மாதிரி வந்தவங்களைக் கேட்டால் தெரியவில்லை என்ற பதில்தான் வந்தது. தண்ணீரில் இறங்கினால் எப்படி இருக்கும்னு பார்க்கலாம்னா அவை நகரவே இல்லை.

      இமா வீடு பூட்டிக் கிடக்கிறது. பொங்கல் முடிஞ்சிதான் வருவாங்கலாம். அதுவரைக்கும் 'கொக்கன்னம்'னே வச்சிக்கலாம். ம் ம் ம் 'கருப்பன்னம்'கூட‌ இருக்குங்க.

      பேரு வைக்க அழைப்பிதழ் வரும், கண்டிப்பா வந்து கலந்துக்கணும்.

      Delete
  5. அழகா இருக்கு.... அய்யோ பாவம் பேர் தெரியாமல் இருக்கே....:(

    சீக்கிரம் பேர் கண்டுபிடிச்சு சொல்லுங்க..

    ReplyDelete