காய்ந்த மிளகாயின் விதைகளைத் தூவியதில் நிறைய நாற்றுகள் முளைத்தன. அவற்றைப் பிடுங்கி இங்கொன்றும் அங்கொன்றுமாக நட்டு வைத்தேன். இடம் பற்றாக்குறை இருந்தும் நன்றாகவே வளர்ந்தன.
பூக்க ஆரம்பித்து .....
கீழேபோட மனமில்லாமல் ஜாதிமல்லி தொட்டியில் நடப்பட்ட செடியிலிருந்து ....
புதினா செடிகளுக்கிடையே போட்டிபோட்டு வளர்ந்து காய்க்க ஆரம்பித்துள்ள செடி.
இன்று முதன்முதலாக பறித்த மூன்று மிளகாய்கள்
பழங்கள் பழுக்க ஆரம்பிச்சாச்சு !!
வாசனை இங்கே வருதுங்க....
ReplyDeleteநீங்க சொன்னதை நானும் நம்புறேன் :)
Deleteவருகைக்கு நன்றி எழில்.
அருமையா இருக்குங்க...
ReplyDeleteசுவையிலும்கூட அருமைதான் :)
Deleteவருகைக்கு நன்றி தனபாலன்.
அச்சச்சோ.. கண்ணில பட்டிடும் போல இல்லை இல்லை
ReplyDeleteகண்ணே பட்டிடும் போல இருக்கே..:)
நல்ல கார மிளகாயோ! அருமை!
செடி வாடிப் போகுமா ?
Deleteஇளமதியின் கண் பட்டால்
இனிய கவிதைதான் வரும்
நல்ல்ல்ல கார மிளகாய்தான். இங்கே பார்த்ததில் மகிழ்ச்சியும், நன்றியும் இளமதி :)
மிளகா காய்ச்சாச்சா? அறுவடை ஆனதும் அரைப்படி மிளகா இங்கே அனுப்பிருங்கோ! ;) :)
ReplyDeleteமகி, இப்போ வெல ஏறிப்போச்சுன்னு யாரோ சொன்னாங்க, அதனால 'புது வெல' ஓகே'ன்னு சொன்னா அனுப்பி வைக்கிறேன் :))
Deleteமிளகாயின் நெடி நல்லாவே இருக்குது சித்ரா...
ReplyDeleteஉமையாள்,
Deleteபுது மிளகாய், அதான் நெடி அங்கு வரைக்கும் வந்திருக்கு :)
மிளகாய் அறுவடை அசத்தல்.....
ReplyDeleteபகிர்வுக்கு நன்றிகள் தோழி.
சமையலுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு புது மிளகாய் என சந்தோஷமா இருக்கு.
Deleteவருகைக்கு நன்றி முகில்.
ஆகா...ஆசையாய் இருக்கு ....எங்க வீட்ல் இப்போதான் விதை போட்டிருக்கேன்...
ReplyDeleteஅப்படின்னா இன்னும் கொஞ்ச நாளில் உங்க ப்ளாக்கிலும் மிளகாய் வலம் வரும்னு நினைக்கிறேன். வருகைக்கு நன்றி அனு.
Deleteபார்க்கவே அழகாக இருக்கும் உடனே பறித்து சமைக்கனும் போல் இருக்கு
ReplyDeleteஆமாம் ஜலீலா, சட்னி முதல் சாம்பார் என எல்லாவற்றிலும் பச்சைமிளகாய் இல்லாமல் இல்லை. வீட்டில் இருந்து பறிக்கிறோம் எனும்போது இரட்டிப்பு மகிழ்ச்சி.
Deleteவருகைக்கு நன்றி.
பிஞ்சு மிளகாய். கமகம வாஸனை. காாரம் தெரியாது. நிறைய காய்க்கும்போது தொக்கு செய்து வைத்துவிடு. இன்னும் டேஸ்ட்டாக இருக்கும். பூவெல்லாம் அப்படியே காய்கள்தான். மிக்க நன்றியுள்ள செடி. எல்லாம் காய்க்கத் துவங்கிவிட்டது. உன்னுடைய பராமரிப்பும் நல்லது. அன்புடன்
ReplyDeleteகாமாஷிமா,
Deleteநன்றியுள்ள செடிகள்தான். வளரும்போதும், காய்கள் வரும்போதும் சந்தோஷமாத்தான் இருக்கு. உங்க ப்ளாக்ல தேடிப் பார்த்தேன் பச்சைமிளகாய் தோக்கு காணோம். உங்களுக்கு எப்போதாவது நேரம் கிடைத்து பதிவாக்கினால் செய்கிறேன்.
முதலில் பறிக்க மனமில்லை, இப்போ பறிக்காமல் அந்த நாள் முடிவதில்லை, ஹா ஹா ஹா :))) வருகைக்கு நன்றிம்மா, அன்புடன் சித்ரா.
பச்சை மிளகாய் அவியும் போது வரும் வாசனையே தனி தான்.நமக்கு வாசமும் இல்லாமல் காரமும் இல்லாமல் பேருக்கு போடத் தான் கிடைக்கிறது இங்கெல்லாம். ம்..ம் என் தோழி சொல்வது போல கண்ணு பாடத் தான் போகிறது. மிளகாய் சுத்திப் போடுங்கள் ஹா ஹா ...
ReplyDeleteஆமாம், எத்தனை நாட்கள் அதை ஐஸ்ல வச்சு வச்சு .... பாவம் அது என்னதான் செய்யும் :) பழுக்கட்டும், கட்டாயம் சுத்திப் போடுறேன் !
Deleteவருகைக்கு நன்றி இனியா.
நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து நல்ல கார சாரமாக மிளகாய்கள் வந்துருக்கு போல....! ரொம்ப அழகா இருக்கு..நார்மலா மிளகாயை வைச்சுத்தான் சுத்திப் போடுவாங்க...அந்த மிளகாய்க்கே ஒரு சுத்துப் போடல்....திருனெல்வேலிக்கே அல்வா கொடுக்கறா போல..இது எப்புடி???!!!!!!!!!!
ReplyDeleteசகோ துளசி & கீதா,
Deleteஎத்தன நாளைக்குத்தான் நாங்களும் சுவையில்லாத மிளகாயே சாப்பிடுவது ? அதான் துணிஞ்சு எறங்கியாச்சு. 'சரி பொழச்சு போவட்டும்'னு விடாம எல்லாருமே கண்ணு வச்சிட்டு போறீங்க !
'அந்த மிளகாய்க்கே ஒரு சுத்துப் போடல்' ....... ம் ம் செய்யிறேன் செய்யிறேன், ஒரு மிளகாயையாவது பழுக்க & காய விட்டு சுத்திப் போடாம விடப் போறதில்ல :)))))
நன்றி துளசி & கீதா.
நானும் இம்முறை மிளகாய் தான் போட்டுவிட்டு சென்றேன். நன்றாக வளர்ந்திருக்கு. இன்னும் பூக்கல. பார்ப்போம். எனக்கு சர்ப்ரைஸா 2 வேறு மரமும் வந்திருக்கு. எல்லாம் பதிவிடனும்.இப்போதான் ஜெட்லாக் நார்மாலாகியிருக்கு. உங்க மிளகாயை பார்க்கவே ஆசையா இருக்கு. சூப்பர்.
ReplyDeleteஓ, உங்க வீட்டிலும் மிளகாய் செடியா ? இப்போதான் நல்லாருக்கு ப்ரியா, வேணும் எனும்போது வீட்டிலிருந்து பறித்து எடுக்க ரொம்பவே சந்தோஷமா இருக்கு. நிறைய காய்ச்சிருக்கு.
Deleteஉங்க வீட்டு மிளகாய் செடி, அந்த ரெண்டு சர்ப்ரைஸ் மரங்கள்(ஹ்ம்ம்ம், என்ன மரங்களாய் இருக்கும் !! ) எல்லாவற்றையும் சீக்கிரம் போடுங்க ப்ரியா.