வெயிலுக்குப் பயந்து சனிக்கிழமை காலையிலேயே 'வாக்' போய் வந்தாச்சு. மாலை வெளியில் போகக் கிளம்பியபோது car remote key ஐக் காணோம். சாவிக் கொத்திலிருந்து அது மட்டும் தனியாகக் கழண்டுவிட்டிருந்தது.
அங்கும், இங்கும், எங்கும் தேடியதில் கிடைக்கவேயில்லை. பிறகு 'ஒருவேளை 'வாக்' போனபோது தொலைந்து போயிருக்கலாம்' என்ற முடிவுக்கு வந்தாச்சு.
பதினைந்து வருடங்களுக்கும் மேலாகக் கூடவே இருந்தது, திடீரெனத் தொலைந்து போனால்?
மாற்று remote key இருக்கிறது. இருந்தாலும் வேண்டாதவர் கையில் கிடைத்து, அவர் இந்தப் பக்கமாக வந்து அழுத்தப்போய், "இதோ, நான் இங்கே இருக்கிறேன்" என காட்டிக் கொடுக்கப்போய் ...... வேடிக்கைதான். ஸ்டியரிங் லாக் இருப்பதால் பயமில்லை ...... இருந்தாலும் ?
வெளியில் போகும்போது பார்த்திருக்கிறேன், நம்மை மாதிரி நல்ல மனசு உள்ளவங்க:) தொலைத்தவர்களின் சாவியை எடுத்து மரத்தில் கட்டி வைத்திருப்பதை.
அப்போதெல்லாம், 'இது நல்ல ஐடியாவா இருக்கே' என சொல்லிக்கொண்டே போவோம்.
அதுபோல் 'நம்முடைய சாவியும் எங்காவது கட்டப்பட்டிருந்தால் நல்லாருக்குமே' என ஞாயிறன்று வாக் போகும்போது பேசிக்கொண்டே போனோம். ம்ம்ஹூம், அதைப்பற்றி பேசியதுதான் மிச்சம்.
'சூட்கேஸிலிருந்து மாற்று 'ரிமோட் கீ'யை நாளை கண்டிப்பாக தேடி எடுத்து வைக்கவேண்டும்' ___ நான் மனதினுள்.
திங்கள் காலை இவர் அலுவலகம் செல்ல ஷூவைப் போடும்போது காலில் ஏதோ தட்டுப்படவும் ..... பார்த்தால் ? ....... தொலைந்ததாக நினைத்த 'ரிமோட் கீ'யேதான் :))))) 'ஷூ'வினுள்ளேயே விழுந்திருக்கிறது ! அதுவும் வெள்ளிக்கிழமை மாலையே !!
எங்கள் வீட்டில் 'ஆட்டைத் தோலின் மேலேயே போட்டுக்கொண்டு தேடிய கதை'யில் இது பத்தோடு பதினொன்றானது !! ஹா ஹா ஹா :))))))
பதினைந்து வருடங்களுக்கும் மேலான பந்தமாயிற்றே, அவ்வளவு எளிதில் நம்மை விட்டுப் போய்விடுமா என்ன !!
நல்ல வேளை கிடைத்ததே....
ReplyDeleteஎங்களுக்கும் அதே உணர்வுதான் !
Deleteவருகைக்கு நன்றி வெங்கட் !
அப்பாடா..!
ReplyDeleteவருகைக்கு நன்றி தனபாலன் !
Deleteநீங்கள் ஆட்டைத் தோளில் போட்டுக்கொண்டு தேடிய கதை என்கிறீர்கள் சித்ரா!..
ReplyDeleteஎங்கள் வீட்டில் இவர்(முன்னர்) மூக்குக் கண்ணாடியை முன் மண்டையிலே செருகிக் கொண்டு எங்கே வைத்தேன் காணலியே என்று வீட்டை இரண்டுபடுத்துவது நினைவிற்கு வந்தது..:))
நல்ல வேளை சாவி கிடைத்துவிட்டது மகிழ்வே!
ஓ, உங்க வீட்டிலும் தேடுதல் வேட்டை உண்டோ :))))
Deleteநானும் சின்ன வயசுல நிறையத் தேடியது 'சீப்பு'தான். தலையில் சொருகிக்கொண்டு எல்லா இடங்களிலும் தேடுவேன்.
ஆமாம் இளமதி, சாவி கிடைத்த பிறகுதான் நிம்மதியானது. வருகைக்கும் நன்றி இளமதி.
ஆகா..... என்ன இது....
ReplyDeleteஹா ஹா ஹா :)))
Deleteவருகைக்கு நன்றி அனு.
கிடைத்ததால் செலவு மிச்சம் டென்ஷன் குறைவு[[[
ReplyDeleteநிச்சயமா, அதுவும் தொலைந்த பொருள் மீண்டும் கைக்கு வரும்போது டென்ஷன் பறந்து ஓடும்பாருங்க, அது தனி அனுபவம்தான்.
Deleteவருகைக்கு நன்றி தனிமரம்.
தொலைந்தது என்றால் உன்னாலா,என்னாலா என்ற டென்ஷன் வேறு. கிடைத்தால் எல்லோருக்கும் ஸந்தோஷத்தில் பங்குதான். கிடைத்தது மஹாப் பெரிய விஷயம். அன்புடன்
ReplyDeleteகாமாஷிமா,
Deleteபுது ப்ளாக் புகைப்படம் கண்ணைப் பறிக்குது :)
"உன்னாலா,என்னாலா என்ற டென்ஷன் வேறு" ____ எனக்கும் ஆசைதான். ஆனால் விவாதம் ஏதும் வரமாட்டேன்கிறதேம்மா :))))
பரவாயில்லை என விட்டுவிட்டோம். ஆனாலும் அது எங்களை விட்டு போக மனமில்லாமல் ஒட்டிக்கொண்டது. கிடைத்த வரை இலாபம்தான். அன்புடன் சித்ரா.
கிடைத்தையிட்டு எனக்கும் மகிழ்ச்சி சித்ரா. என் கணவருக்கு திருமணத்திற்கு முன் நடந்தது என சம்பவம் சொல்வார். அவரின் அப்பா கொடுத்த பேனா. இளம்பிராயத்தில் கொடுத்தது. இங்கும் கொண்டு வந்துவிட்டார். இங்கு காணாமல் போய் ,2வருடம் கழித்து கிடைத்தது.(பெரியகதை) இன்னமும் பத்திரமா வைத்திருக்கார்.
ReplyDeleteஆமாம் ப்ரியா, தொலைந்தது கிடைக்கும்போது வரும் மகிழ்ச்சியே தனிதான்.
Deleteஉங்க வீட்டு சாவி கதையும் சூப்பரா இருக்கே. அந்தப் பெரிய கதையைத் தொடர்கதையா ஆக்கிடுங்க. வருகைக்கு நன்றி ப்ரியா.
ஹப்பா கிடைச்சுருச்சே! பரவால்ல..மொபைல் தொலைஞ்சா அது எங்கருக்குனு இன்னுரு ஃபோன் அடிச்சுப் பார்க்கறாது போல ரிமோட்டுக்கே ஒரு ரிமோட் இருந்தா நல்லாருக்கும் இல்ல....
ReplyDelete'ஒன்னும் லேட்டாகல, இப்போகூட (நீ) கண்டு பிடிச்சிடலாம்'னு பதில் வந்தாலும் வரும் :) நமக்கேன் வம்பு.
Deleteஇன்னொரு கீ இருக்கு. இருந்தாலும் ....... தொலைஞ்சுதுன்னா கஷ்டமாத்தானே இருக்கு. நன்றி கீதா.