முதல் சுற்று முடித்து இரண்டாவது சுற்றில் சுமார் இருபது பூக்களுக்கும் மேல் பூத்து மனதைக் கொள்ளையடித்தது இந்த ரோஜாச் செடி.
இரண்டாவது முறை பூத்து முடித்த பிறகு செடி முழுவதும் சாம்பல் பூத்த மாதிரி ஆகிவிட்டது. 'அவ்வளவுதான்'னு நெனச்சிட்டேன் :(
சரி எதற்கும் செடியை ட்ரிம் பண்ணி விடுவோம் என இலைகளை எல்லாம் அகற்றிவிட்டு செடியையும் நறுக்கிவிட்டேன். மீண்டும் துளிர்த்து மூன்றாவது சுற்றில் சுமார் ஐம்பது பூக்களாவது இருக்கும் பூத்துவிட்டது :)))))))
செடியின் தற்போதைய நிலை
இரண்டாவது முறை பூத்து முடித்த பிறகு செடி முழுவதும் சாம்பல் பூத்த மாதிரி ஆகிவிட்டது. 'அவ்வளவுதான்'னு நெனச்சிட்டேன் :(
சரி எதற்கும் செடியை ட்ரிம் பண்ணி விடுவோம் என இலைகளை எல்லாம் அகற்றிவிட்டு செடியையும் நறுக்கிவிட்டேன். மீண்டும் துளிர்த்து மூன்றாவது சுற்றில் சுமார் ஐம்பது பூக்களாவது இருக்கும் பூத்துவிட்டது :)))))))
செடியின் தற்போதைய நிலை
என்னே அழகு...!
ReplyDeleteநன்றி தனபாலன் !
Deleteஅற்புதமான அழகு........
ReplyDeleteநன்றி அனு !
Deleteபூக்களைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.....
ReplyDeleteபடங்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
வருகைக்கு நன்றி வெங்கட் !
Deleteசூப்பர்ப்!!!! எப்படி இருக்குது..மனச அப்படியே அள்ளுதுங்க...அங்கு மண் வளம் நன்றாக இருக்கிறது என்பதைக் காட்டுகின்றது...இங்கு ஒரு சில இடங்களில் மட்டுமே நன்றாகப் பராமரிக்கும் இடங்களில் மட்டுமே ரோஸ் நன்றாக வருகின்றது....
ReplyDeleteசகோ துளசி & கீதா,
Deleteதொட்டியில்தான் வச்சிருக்கேன், மண்ணில் நட்டிருந்தா இன்னும் சூப்பரோ சூப்பரா இருந்திருக்கும்.
நீங்க சொன்னதேதான், நானும் நம்ம ஊர்ல பலமுறை வச்சு பார்த்திருக்கேன், துளிர்த்ததே இல்லை. நன்றி கீதா.
மொட்டு முதல் பூத்து குலுங்கும் மலர்கள் வரை, அழகோ அழகு.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றிகள் தோழி.
வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி முகில்.
Deleteமொட்டு மலரும் வரை. அழகாய் எப்படி? வெளிர் நிற ரோஜாவா இதழ்கள் விரிந்த பிங்க் ரோஜா சிரிக்கிறது. அன்புடன்
ReplyDeleteகாமாஷிமா,
Deleteஅழகா இருக்கறதால எவ்வளவு எடுத்தாலும் சலிப்பாவதில்லை. லேசான தூறலால் ரோஜாவின் நிறம் கொஞ்சம் வெளுத்துவிட்டது. வருகைக்கு நன்றிமா.
மொட்டு மலராகும் அழகு... மனமும் விரிந்து மணக்கிறது. அருமை சித்ரா.
ReplyDeleteவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி கீதா.
Deleteவா..வ் சித்ரா. பார்க்கவே அழகா இருக்கு பிங்கி ரோஜா. இந்த நிறத்தில் மட்டும் என்னிடம் இல்லை. கொஞ்சம் டார்க் ல் இருக்கு. என் ஆரஞ்ச் ரோஜா மாதிரி நிறைய்ய்ய பூத்திருக்கு. அழகான படங்கள் சித்ரா.
ReplyDeleteஆமாம் ப்ரியா, சின்ன வயசுல எனக்கு இந்தக் கலர்லதான் ரோஜா அறிமுகமாச்சு. அதனாலயோ என்னவோ இந்த ரோஜாதான் பிடிக்குது. நிறைய பூத்தாச்சு. அடுத்த் சம்மர்ல வாங்கி வச்சிடுங்க.
Deleteநன்றி ப்ரியா.