சித்ரா'ஸ் குக்கிங் ஸ்கூலுக்குக் கூவிக்கூவி அழைத்தும், கட்டணத்தைக் காரணம் காட்டி யாருமே எட்டிப் பார்க்காத சூழலில், இழுத்து மூடுவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும் ?
சோகத்துடன் மூடப்போகும் தருணத்தில் எலி ஒன்று, வந்து, வசமாக சிக்கியது மகள் வடிவத்தில்.
"அம்ம்ம்மா, ஈஸியா இருக்கணும், அதே நேரத்துல சுவையாவும் இருக்கணும், அது மாதிரி ஏதாவது ரெஸிபி இருந்தா லீவுல சொல்லிக்குடும்மா " என்றாள் லீவுக்கு வருமுன்னமே.
ஆறு மாதங்கள் வீட்டுப்பக்கம் தலை காட்டாததன் விளைவு இது.
எளிமையான சிலவற்றை வரிசையாக லிஸ்ட் போட்டோம்.
சாம்பார் _ வேண்டாம் ! பருப்பு வேகவச்சு, காய் கட் பண்ணி .... நானே வேண்டாம்னு சொல்லிட்டேன்.
ரிஜெக்ட் ஆன லிஸ்டில் புளிக்குழம்பு, குருமா, கீரை எல்லாம் இருந்தன.
லிஸ்டில் முதலாவதாக எலுமிச்சை சாதம், உருளைக்கிழங்கு பொரியல், முட்டை இவை மூன்றும் இடம் பிடித்தன.
மகள் சொன்னாள், " அம்மா, நீ ஒரு சூப் வப்பியே, சூப்பரா இருக்குமே, அத கத்துக்கிறேனே" என்றாள்.
நானாவது சூப் வைப்பதாவது ?
"முறுங்க கீரை தண்ணி சாறு வைப்பேனே ...... அத சொல்றியா, நீ இருக்கும் ஊர்ல அது கிடைக்காது. இன்னும் கொஞ்சம் நாள் போகட்டும், இப்போதானே லயா வீட்ல செடி வாங்கி வச்சிருக்காங்க, அது வளர்ந்ந்ந்து ...... கீர பறிக்க ......... எவ்ளோஓஓ நாளாகுமோ, அப்போ பார்த்துக்கலாம்" என்றேன்.
"அது இல்லம்மா, அதுல கீர எதுவுமே இருக்காது, கொஞ்சம் ப்ரௌன் கலர்ல இருக்குமே, சூப்பராவும் இருக்குமே, அது" என்றாள்.
நெஜமாவே எனக்கு என்னன்னு புரியல, விட்டுட்டேன்
விடுமுறையில் வீட்டுக்கு வந்து சாப்பிடும்போது சாம்பார் முடிந்து ரசம் ஊற்றியதும், "இதேதான், இததான் நான் சூப்னு சொன்னேன்" என்றாள்.
இப்போ லிஸ்ட்ல ரசமும் சேர்ந்துகொண்டது.
நல்ல நாள் பார்த்து kitchen boot campஐ ஆரம்பிச்சாச்சு.
முதல் இரண்டு நாட்கள் 'இதை எடு, அதை வை' என ஒரே மிரட்டல்தான் :)) சரியா செய்யாட்டி push ups, sit ups என பனீஷ்மெண்ட்டுடன் முடிந்தது .
எலுமிச்சை சாதம் எந்தவிதப் பிரச்சினையும் இல்லாமல் வந்துவிட்டது. முட்டையும் எளிதோ எளிதாகிவிட்டது.
உருளைக்கிழங்கு ? கைவிட்டாச்சு !
ரசம் கற்றுக்கொண்டு mid term testம் வைத்து, finalம் முடிந்துவிட்டது.
ஆனாலும் 'பூச்சி மாதிரி இருக்கு'னு புளியைக் கரைக்காமலும், தக்காளி பிடிக்காது என்பதால் அதைப் பிழியாமல் பொடியாக நறுக்கிப் போட்டதாலும் மதிப்பெண்கள் கொஞ்சம் குறைந்துதான் போனது.
இருந்தாலும் கொத்துமல்லி விதை, மிளகு & சீரகம் இவற்றை வறுத்துப் பொடிப்பதை "ஸோ இண்ட்ரஸ்டிங்", "ரசம் வைப்பதிலேயே இதுதான் ஃபன் பார்ட்" என சொன்னதால் A + கொடுத்தாச்சு.
விடுதிக்குப்போய் தக்காளியை நறுக்கியோ, புளியைக் கரைக்காமலோ ரசம் வைப்பதும் வைக்காததும் இனி அவள்பாடு, அதை ருசிக்கப் போகும் அவளின் தோழிகள் பாடு !!
கடைசியாகக் கிடைத்த தகவலின்படி சூப்பர் ரசம் வைத்து சாப்பிட்டதாக படத்துடன் வாட்ஸ் அப் சொன்னது.
பார்த்தீங்களா ? சக்தி, சக்தி இல்லாட்டி ஆச்சி, மெட்ராஸ், ஆனந்த் என போகாமல் தினமும் ரசத்துக்குப் பொடிப்பதை ஃபன் பார்ட்டா நெனச்சுக் கத்துப்பீங்க.
அடுத்த வகுப்புகள் ஆரம்பிக்க இன்னும் சில நாள்களே உள்ளன. Summer சலுகையும் உண்டு. உஷாராகி உடனே பதிஞ்சுக்கோங்க :))))