படம்உதவி _ கூகுள்
இதுவரை வட கலிஃபோர்னியாவின் சிலிகான் வேலியில் (Silicon valley) அமைதியான ஒரு இடத்தில் இருந்துவிட்டு இப்போது தென் கலிஃபோர்னியாவில் டிஸ்னி லேண்ட் பக்கத்தில் வீடு.
அதனால் தெருக்களில் வாகனப் போக்குவரத்து அதிகமாக இருக்கும். அதற்கு போட்டிபோடும் விதமாக எந்நேரமும் மக்கள் நடமாட்டமும் இருக்கும்.
மேலும் கொஞ்சம் கரடுமுரடாக (Harsh) ஓட்டுவார்கள் என்பதும் கண்கூடு. இந்தக் காரணங்களால்தான் இவர் வேண்டாம் என்றார். எனக்குமே சரியெனப்பட்டது.
இது மட்டுமல்லாமல் எனக்கு மனதில் இன்னொரு முக்கியமான காரணமும் உண்டு. அது, தவறு செய்துவிட்டு வாகனத்தில் தப்பித்து செல்லும் நபரை போலீஸ் பல வாகனங்களிலும், ஹெலிகாப்டரிலும் துரத்தும் 'போலீஸ் சேஸிங்' நிகழ்ச்சியை அடிக்கடி இங்கே தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பாக பார்க்கலாம்.
இந்தக் காரணங்களால் நானும் ஏற்கனவே வசித்த பகுதிக்கு சென்ற பிறகு பார்த்துக்கொள்ளலாம் என விட்டுவிட்டேன்.
இப்படியே சில மாதங்கள் ஓடிவிட்டது. வாங்கிவைத்த பெர்மிட்டும் காலாவதி ( expire) ஆகிவிட்டது.
நல்லவேளையாக மீண்டும் வட கலிஃபோர்னியாவுக்கே, பழைய இடத்திற்கே வந்தாச்சு.
வந்து செட்டிலானதும் நான் ஏதும் கேட்காமலேயே, என் பொறுமையைப் பார்த்து வியந்து, இவராகவே எழுத்துத் தேர்வுக்கு அழைத்துச் சென்றார். ஏற்கனவே ஸ்ட்ராங் ஃபவுன்டேஷன் வேறு இருப்பதால் படிக்க வேண்டிய அவசியமில்லாமல், சதமடித்து, கார் ஓட்டிப் பழக தற்காலிக பெர்மிட்டும் வாங்கியாச்சு.
Driving School ல் இருந்து trainer வரவழைக்கப்பட்டார். சிவப்பு நிற Toyota கார் வந்து நின்றது. பின்னால் உள்ள கண்ணாடியில் Student Driver என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.
முதலில் அவர் எனக்கு காரை ஓட்டிக் காட்டுவார் என்று பார்த்தால் என்னை driver seat ல் உட்கார வைத்துவிட்டார். உதறல் எடுத்துக்கொண்டது.
காரில் உள்ள முக்கியமான சிலவற்றை அறிமுகப்படுத்தி, கேஸ் பெடல் & ப்ரேக் இரண்டையும் பலமுறை நினைவுபடுத்தி, முக்கியமாக அவர் சொல்வதைத்தான் நான் கேட்கவேண்டும் என்றும், ஏதாவது சந்தேகம் என்றால் நடுவில் விடப்படும் 5 நிமிட இடைவேளையின்போதோ அல்லது பயிற்சி முடிந்த பிறகோதான் கேட்க வேண்டும் என்றும் சில கண்டிஷன்களைப் போட்டார்.
ஆமாம், அவரது எதிர்காலத்தை என் கையில் அல்லவா ஒப்படைத்திருக்கிறார் !! ஒரு பாதுகாப்புக்காக அவரது காலடியிலும் ஒரு ப்ரேக் உண்டு.
சாவியைத் திருகச் சொல்லி காரை எடுக்கச் சொன்னார், எடுத்தேன் ! நடந்து போனால்கூட கொஞ்சம் வேகமாக போய்ச் சேருவோம், அதைவிட மிக மோசமாக நகர்த்தினேன். நான் ஓட்டிய அழகைப் பார்த்துவிட்டு எனக்கு 8 வகுப்புகள் தேவைப்படும் என்றார். ஒவ்வொரு வகுப்பும் இரண்டு மணி நேரம்.
ஓட்டும்போதே சில சமயங்களில் கொஞ்சம் கோபமாக பேசுவார். பிறகு அவராகவே 'ஏதும் நினைத்துக்கொள்ள வேண்டாம், மறந்திடுங்க, உங்க நல்லதுக்குத்தானே சொல்கிறேன்" என்பார்.
"விடுமுறை நாட்களில் husband ன் காரை ஓட்டிப் பழகுங்கள்" என்று கூறினார். இவரைக் கேட்டால், "எத்தனை வகுப்புகள் என்றாலும் பரவாயில்லை, அவரிடமே கற்றுக்கொள்" என்றார். ஆனாலும் சில சமயங்களில் உதவுவார்.
எப்படியோ 6 வகுப்புகள் முடிந்துபோனது. 6 வது வகுப்பு முடியும்போது "நன்றாக ஓட்டுகிறீர்கள், Behind the wheel driving test க்கு அப்பாயின்மெண்ட் வாங்கிடலாம்" என்றார்.
ஒரு நல்ல நாளில் (புதன்கிழமை) அப்பாயின்மெண்ட் கிடைத்தது. சுந்தருக்கு அலுவலகம் என்பதால் Driving School காரையே தேர்வுக்கும் கேட்டிருந்தோம். எனக்கும் இதுவரை ஓட்டிப்பழகிய கார் என்பதால் கொஞ்சம் comfortable ஆக இருக்கும் எனத் தோன்றியது.
புதனுக்கு முந்தைய செவ்வாய்கிழமை, மாலை நேர பயிற்சியாக மாலை 7 to 9 மணிவரை கடைசி வகுப்பு.
ஓட்டி முடித்து கடைசியாக வீடு திரும்பும்போது எங்கள் தெருவிற்கு முந்தைய தெரு வரும்போது இடது பக்கம் திரும்ப சொன்னார். அதற்கும் அடுத்த தெருதான் எங்கள் தெரு. வீட்டுக்குப் போகப்போகிறேன் என்பது தெரியும். ஆனாலும் ஏற்கனவே, 'சொல்வதைத்தான் செய்ய வேண்டும்' என்ற பயிற்சி இருப்பதால் நான் எதுவும் சொல்லவில்லை. இடது பக்கம் திரும்புவதற்கான விளக்கைப் போட்டேன்.
பிறகு "வேண்டாம், அடுத்த இடது பக்கம் திரும்புங்க" என்றார்.
இப்போது விளக்கை நிறுத்திவிட்டு சிறிது தூரம் சென்ற பிறகு மீண்டும் லெஃப்ட் சிக்னல் போட்டு எங்கள் தெருவில் திரும்பினேன். பார்த்தால் பின்னாலேயே ஜிகுஜிகு பளபளவென பலவித வண்ண விளக்குகளுடன் போலீஸ் கார் வந்தது.
நானும் "ஆஹா, நாம் பயிற்சியில் இருக்கும்போதே அவசர போலீஸுக்கு வழிவிடப் போகிறோமே" என்று நினைத்து என் திறமையையெல்லாம் உபயோகித்து, பெருமையுடன் சாலையின் வலது பக்கமாக காரை நிறுத்தினேன்.
இந்த நேரத்தில் பக்கத்தில் இருந்த ட்ரெயினர் ஏதாவது சொன்னாரா அல்லது சொல்லவில்லையா என்பதைக்கூட நான் கவனிக்கவில்லை. என் கவனம் முழுவதும் அவசர போலீஸுக்கு வழிவிட வேண்டும், அவ்வளவுதான், என்பதிலேயே இருந்தது.
போலீஸ் காரும் எங்கள் காருக்குப் பின்னாலேயே வந்து நின்றது !.......(தொடரும்)
அடுத்து நடந்தது என்ன...?
ReplyDeleteஆவலுடன்...
// அவரது காலடியிலும் ஒரு ப்ரேக் உண்டு... // இது புதிதாக இருக்கிறது...!
படிக்க ஆவலுடன் காத்திருப்பதற்கு மகிழ்ச்சிங்க.
DeleteAaha..ore suspense-a irukke!! Appuram enna aachu? :)
ReplyDeleteஅந்த நேரம் எனக்கும் உங்கள மாதிரிதான் மகி. அடுத்த பதிவுல வந்து சஸ்பென்ஸ ஒடச்சிடறேன்.
Deleteஅடுத்தது என்ன? எனக்கும் இதே கேள்வி மனதில்....
ReplyDeleteதொடர்கிறேன்.
உங்க கேள்விக்கான பதில் அடுத்த பதிவுல வந்திடுங்க. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றிங்க.
Deleteஅட..... உங்கள் ஊர் போலீசைப் பார்த்தாலே நடுக்கம் வந்து விடுமே! எப்படி சமாளித்தீர்கள் நிலைமையை!
ReplyDeleteஊர்ல இருந்தவரைதான் போலீஸ்னாலே பயம். இங்கு அவங்களப் பார்த்தால் ஏதோ ஓர் உதவிக்கு வந்திருப்பதாகத்தான் தோன்றும். அதனால இப்போதைக்கு ......ஹி ஹி ..... பயமா ! எனக்கா !!
Deleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-5.html) சென்று பார்க்கவும்... நன்றி...
உங்க பின்னூட்டத்தை பாத்துட்டு அங்கே போய் வந்திட்டேங்க. அறிமுகப்படுத்தியதை தெரிவித்தமைக்கு நன்றிங்க.
Deleteஅருமையாகத்தான் கற்றுக்கொண்டிருக்கிறீகள்..பாராட்ட்டுக்கள்..!
ReplyDeleteவருகைக்கும், பாராட்டுகளுக்கும் நன்றிங்க.
Deleteமேடம், திடீர்னு சஸ்பென்ஸ் வெச்சு நிறுத்தீட்டிங்க! லைசென்ஸ் கொடுத்தாங்களா, இல்லையா!
ReplyDeleteடெஸ்ட்ல பாஸ் பண்ணி லைசன்ஸ் கிடைத்ததா என்பதை இன்றைய மூன்றாவது பதிவைப் படிச்சிட்டு வந்து சொல்லுங்க.
Deleteகார் ஓட்டுவதை பற்றி எழுதுவதிலும் கூட சஸ்பென்ஸ் ஆ? ஆனால் நன்றாகத்தான் இருக்கிறது. உங்கள் அனுபவம் படித்ததும் எனக்கு பயங்கர மலரும் நினைவுகள்! நானும் ஒரு பதிவு போடுகிறேன்.
ReplyDeleteஎனக்கு ஒரு சந்தேகம்: ஏன் எல்லா கணவர்மார்களும் மனைவிக்கு கார் கொடுக்க மறுக்கிறார்கள்?
'அம்மா வீட்டிற்கு காரில் போகட்டுமா' என்று கேட்டால் (கார் ஓட்டும் பயிற்சிக்காக) டிரைவிங் ஸ்கூல் வண்டியிலேயே போயிட்டு வந்துடேன் என்பார் என் கணவர்!
சஸ்பென் ஸா வா ! அன்னைக்கு 'டிக்கெட்' வாங்கிடுவேனோன்னு உள்ளுக்குள் கொஞ்சம் பயம்தான். அடுத்த நாள் டெஸ்டுக்கு போவதா வேண்டாமான்னு ஏகத்துக்கும் போராட்டம். அதை இப்போ நெனச்சா ஜாலியாதான் இருக்கு.
Delete"டிரைவிங் ஸ்கூல் வண்டியிலேயே போயிட்டு வந்துடேன்" ______ இது இன்னும் நல்லாருக்கே. உங்க மலரும் நினைவையும் பதிவாக்குங்க, படிக்கும் ஆவல் அதிகமாகிவிட்டது.
தினமும்தான் 'வாக்' போறேன். சனி & ஞாயிறு மட்டும் இவர் வருவார். ஓவ்வொரு 'க்ராஸ்'லயும் 'கார்காரங்கள நம்பி ரோட்ல எறங்கிடாத' என வீட்டுக்கு வரும்வரை சொல்லிக்கொண்டே வருவார். ஒருவேளை........ ஹி ஹி பாசத்தினாலோ !