படம் உதவி_கூகுள்
ஒருவேளை நம்ம குடியிருப்பில் ஏதாவது பிரச்சினையாய் இருக்குமோ என நினைக்கும்போதே பின்னால் நின்ற போலீஸ் கார் எங்கள் காருக்குப் பக்கத்தில் வந்து நின்றது. காரின் கண்ணாடியை இறக்கினேன்.
"தண்ணி அடிச்சிட்டு ஓட்டுவது மாதிரி இருக்கே" என்றார்.
காரில் இருந்து இறங்கச் சொல்லி நேர்க்கோட்டில் நடக்கச் சொல்லுவாரோ!
1,2,3....... ஐ நேராக சொல்ல வேண்டுமா ? அல்லது தலைகீழாகவா ? இது பரவாயில்லை, என் நல்ல(!) நேரம் A B C D......... யை Z Y X W ........... என தலைகீழாகச் சொல்லச் சொன்னால்? இவ்வாறெல்லாம் மனது கணக்குப் போட்டது.
"மேம், லைசன்ஸ் இருக்கா" என்றார்.
எப்படியும் பின்னால் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கரைப் பார்த்திருப்பார். இருந்தாலும் கேட்டார்.
நான் "பெர்மிட் இருக்கு, ஸ்டூடண்ட ட்ரைவர்" என்றேன்.
ஓட்டுனர் உரிமம் இல்லாமலேயே 'Traffic ticket' வாங்கப் போகிறேனோ !! இருந்தாலும் உள்ளுக்குள் "அந்த டிக்கெட் எப்படி இருக்குன்னுதான் பார்ப்போமே" என்ற ஆவலும் இருந்தது.
ஆனால் அவரோ "நல்லா ஓட்டிப் பழகுங்க" என்று சொல்லிவிட்டு பறந்தார். போகும்போது மறக்காமல் "வாழ்த்துக்கள்" சொன்னார்.
உங்களை மாதிரிதான் எனக்கும் 'இப்படி உப்பு சப்பில்லாம முடிஞ்சு போச்சேன்னு' வருத்தம், இருந்தாலும் 'ஏதோ தப்பித்தோம்' என்று சந்தோஷப்பட்டேன். அப்போதைக்கு இது எனக்கு பெரிய விஷயமாக இருந்தது. அதன்பிறகு நினைத்துப் பார்த்தால் சிரிப்புதான் வரும்.
'எவ்வளவு ஷார்ப்பா இருக்காங்க' என்று வியப்பு வந்தது. ஆகமொத்தம் நல்லா, தெளிவா, பின்னால் வந்தவர்களை குழப்பி, தள்ளாட வைத்திருக்கிறேன் என்பது மட்டும் புரிந்தது.
'இதையெல்லாம் போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம், நீங்க நல்லாதான் ஓட்றீங்க. நாளைக் காலை ரெடியா இருங்க, Behind the wheel driving test க்கு போகணும்" என்று ட்ரெயினர் சொல்லிவிட்டு சென்றார்.
வீட்டுக்கு வந்து இப்போது நிஜமாகவே குழம்பினேன், "டெஸ்ட்டுக்கு போகணுமா அல்லது கேன்ஸல் பண்ணிடலாமா ? " என்று. எழுத்துத் தேர்வில் இருக்கும் தைரியம் நேர்முகத் தேர்வு எனும்போது அடிபட்டுப் போகிறது.
இவரை ஐடியா கேட்டால் "பாஸ் பண்ணா சந்தோஷம், இல்லையா? இதுவே ஒரு அனுபவமா இருக்கட்டுமே, கண்டிப்பா போய்ட்டு வா " என்றார்.
காலை 9:20 க்கு தேர்வு. அதற்கு முன்னதாக ஒருமணி நேரம் ஓட்டிப் பழகினேன். பிறகு DMV அலுவலகம் வந்தோம் .
என் மனதிற்குள் இரண்டு விருப்பங்கள் இருந்தன. ஒன்று பெண் கண்காணிப்பாளர் வரக்கூடாது, மற்றொன்று கண்காணிப்பாளர் 'பார்க்கிங்'கில் இடது பக்கமாக காரை 'பார்க்' செய்ய சொல்ல வேண்டும். இவை இரண்டும்தான்.
இடது பக்கம் அனாயாசமாக பார்க் செய்யும் என்னால் வலது பக்கம் செய்யும்போது கொஞ்சம் கூடுதல் கவனம் தேவைப்பட்டது. இதுக்குதான் எங்கள் காரை பயன்படுத்தினேன்.
உள்ளே போனதும் ஏதோ ஓர் எண் கொடுத்தனர். அதை வாங்கிக்கொண்டு காரை எடுத்துக்கொண்டு மிகமிக மெதுவாக(அப்படித்தான் வரவேண்டும்) அலுவலகத்தை வலதுபக்கமாக சுற்றி இடது பக்கமாக வந்து சேர்ந்தேன்.
அங்கே ஆண்பெண் என கண்காணிப்பாளர்கள் சிலர் வரிசையாக நின்றிருந்தனர். அவர்களில் எனக்கு வந்தவர் பெண் கண்காணிப்பாளர். இங்கேயே என் இரண்டு விருப்பங்களில் ஒன்று காணாமல் போய்விட்டது.
காரில் வந்து அமர்ந்து தன்னை அறிமுகம் செய்துகொண்டு சுமார் 20 நிமிடங்களுக்கும் மேலாக அவர் என்னை traffic கில் வண்டியை ஓட்டச்சொல்லி சோதனை செய்தார். கடைசியாக ஒரு இடத்தில் நிறுத்தச்சொல்லி ரிவர்ஸில் வரச்சொன்னார். அங்கு சிறிது சொதப்பினேன். அப்போதே நினைத்தேன் 'அவ்வளவுதான்' என்று.
ஏதோ என் நல்ல நேரம் "மீண்டும் முயற்சிக்கிறீர்களா" என்றார்.
"நிச்சயமாக" என்று பலமாகத் தலையையாட்டி, 'நன்றி'யையும் சொல்லிவிட்டு முயற்சித்தேன். இந்த முறை சூப்பரா பின்னாலேயே கொஞ்ச தூரம் சென்றேன்.
'நன்று' சொன்னார். பிறகு அலுவலகம் நோக்கி சென்றோம்.
அங்கே பார்க்கிங் ஏரியாவில் முதல் வரிசையில் நுழைந்தேன். எங்கு இடம் இருக்கிறதோ அங்கு நிறுத்தச் சொன்னார். 'பரவாயில்லையே' இடது பக்கமாக ஒரு இடத்தில் நிறுத்தலாம் என்று பார்த்தால்......எல்லா இடங்களிலும் கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன.
மனம் முழுவதும் இடது பக்க பார்க்கிங் இடம் காலியாக இருக்க வேண்டுமே என்று வேண்டிக்கொண்டது. கடைசியாக ஒரு இடம் இருந்தது. அதுவும் வலது பக்கமாக. இங்கே என்னுடைய இரண்டாவது விருப்பமும் நிறைவேறாமல் போனது.
எனக்கு காரை சரியாக பார்க் பண்ண வேண்டுமே என்ற எண்ணம்தான் அதிகமாக இருந்தது. வலது பக்கம் திரும்பும் விளக்கை போடவேண்டும் என்று நினைக்கிறேனே தவிர போடவில்லை. கவனம் முழுவதும் நன்றாக பார்க் பண்ணவேண்டுமே என்பதிலேயே இருந்தது.
காரை நிறுத்தியதும் கண்காணிப்பாளர் என்னிடம் "நன்றாக ஓட்டினீர்கள். சில இடங்களில் தவறு செய்தீர்கள். முக்கியமாக விளக்கை போடாமலே திரும்பியது" என்றார்.
இதுவரை 'லப்டப்' என தாறுமாறாக எகிறிக் கொண்டிருந்த இதயத்துடிப்பு இப்போது 'பக்பக், பக்பக்' என அடித்துக்கொண்டது.
'சீக்கிரம் விஷயத்துக்கு வாங்க' என சொல்ல வேண்டும்போல் இருந்தது.
"வாழ்த்துக்கள், நீங்க பாஸ் பண்ணிட்டீங்க, இதோடு நிறுத்தக்கூடாது, மேலும் நன்றாக ஓட்டிப்பழக வேண்டும்" என்றார். நம்ப முடியவில்லை ..... வில்லை .... இல்லை ! சத்தம் போட்டு கத்த வேண்டும்போல் இருந்தது. இவரிடம் ஃபோன் பண்ணி 'ஃபெயில்' என சொல்ல வேண்டும் என நினைத்தேன், ஆனால் உற்சாகத்தில் சோக கீதம் பாடவராது என்பதால் விட்டுவிட்டேன்.
'நீங்க உள்ள போய்ட்டு லைசன்ஸ் வாங்கிக்கோங்க' என்று சொல்லி அவர் கையிலிருந்த மதிப்பெண் பேப்பரை என்னிடம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.
அவர் போனதும் முதலில் நான் செய்தது இறங்கி வந்து காரை சரியாக பார்க் பண்ணியிருக்கேனா என்றுதான். பர்ஃபெக்டா பண்ணியிருந்தேன். அதற்குள் ட்ரெயினர் வந்தார். அவரிடம் விஷயத்தை சொன்னதும் அவரும் 'வாழ்த்துக்கள்' சொன்னார்.
பிறகு உள்ளே போய் பேப்பரைக் கொடுத்ததும் அவர்களும் வாழ்த்துக்கள் சொல்லி "இன்னும் ஒரு மாதத்தில் லைசன்ஸ் வந்து சேரும், அதுவரை இதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்" என்று ஒரு லைசன்ஸை கொடுத்தனர்.
(ஆனால் ஒரு வாரத்திலேயே லைசன்ஸ் வந்து சேர்ந்துவிட்டது.)
காருக்கு வந்தேன். ட்ரைவர் ஸீட்டை நோக்கிப் போனேன். ட்ரெயினரோ "வேண்டாம், பேஸஞ்சர் ஸீட்ல உக்காருங்க, நான் ட்ராப் பண்ணுகிறேன்" என்றார். சந்தோஷமோ சந்தோஷம் !!
எனக்கோ அவர் வீட்டில் கொண்டுவந்து விட்டது ஏதோ ஜாலியாக ஊர்வலம் போவதுபோல் இருந்தது. இறங்கும்போது "லைசன்ஸ் வந்ததும் புது வாலட் வாங்கி அதுல வச்சிக்கோங்க, மறக்க வேண்டாம், இன்னும் நிறைய தடவை ஓட்டிப்பழக வேண்டும்" என்று சொல்லிவிட்டு சென்றார்.
First attempt லயே பாஸ் பண்ணிட்டோமில்ல !! வீட்டுக்கு வந்து இதை வைத்து ஆட்டம் போட்டதெல்லாம் தனிக்கதை !! அப்பாடி ! ID என்ற பெயரில் இனி எல்லாவற்றுக்கும் 'பாஸ்போர்ட்'டை தூக்கிக்கொண்டு ஓடவேண்டாம்.
லைசன்ஸ்தான் இருக்கே, காரை எடுத்துகிட்டு சித்ரா சுத்துசுத்துன்னு சுத்துறாங்களோன்னு நினைத்து யாராவது பொறாமைப்பட்டால் ......... ஹா ஹா ஹா !! என்னிடம் காரைக்கொடுக்க இவருக்கு பயம். முக்கியமாக மகளை உட்கார விடமாட்டார்.
விருப்பமிருந்தால் என்னைக்காவது ஒருநாள் ஓட்டுவேன், டச் விட்டுடக் கூடாதேன்னு, அவசரத்துக்கு உதவுமே !!
தொடர்ந்து இந்த மூன்று பதிவுகளையும் பொறுமையாகப் படித்த உங்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டுமே !! ஹும் ........ என்னைய நம்பி, தைரியமா வண்டில ஏறுங்க, இவர் வருவதற்குள், எங்க ஊரை ஒருசுத்து சுத்தி வந்திடலாம் !!
சில சிரமங்கள் இருந்தாலும் அதை நகைச்சுவையாக... ரசிக்கும் படி சொல்லி உள்ளீர்கள்... மன உறுதிக்கு வாழ்த்துக்கள்... விரைவில் ஆட்டம் போட்ட கதையையும் பகிர்ந்து கொள்ளவும்... காத்திருக்கிறோம்...
ReplyDeleteபதிவை ரசித்துப் படித்ததற்கு நன்றிங்க. கண்டிப்பா, ஒரு நாளைக்கு ஆட்டம் போட்ட கதையையும் எழுதுகிறேன் ! வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிங்க.
Delete:) So, u got the license in the first attempt? Congrats Chitra Akka!! :)
ReplyDeleteEvn Arun is not letting me drive with the kid..so I leave both of them at home n do the shopping! ;)
எட்டு க்ளாஸ் போயிருக்கேனே மகி ! இப்படிகூட பாஸ் பண்ணாட்டி எப்படி? ஆமாம், நீங்க எத்தனையாவது அட்டெம்டுனு வந்து கொஞ்சம் சொல்லிட்டு போங்க.
Deleteஉங்க வீட்டிலும் இப்படித்தானா ! பாத்துபாத்து வளக்கட்டும், நமக்கும் நல்லதுதானே.
அப்பாடி ... நீங்கள் லைசன்ஸ் வாங்கி விட்டீர்களே! நான் கற்றுக் கொண்ட கதை இருக்கிறதே>...
ReplyDeleteஅதை ஒரு பதிவு போட வேண்டுமென்று தோன்றுகிறது. அப்படி ஒரு கலாட்டா...... இப்ப கார் ஓட்டுவீர்களா என்று கேட்டால்.?......உஷ்.......பதிவில் எழுதகிறேன் பிறகொரு சமயம் . காரை எடுத்துக் கொண்டு சுத்து சுத்து என்று சுத்த வாழ்த்துக்கள் சித்ரா.....
.
லைசன்ஸ் வாங்கி எட்டு வருஷமாச்சுங்க. எனக்கு உயரப் பிரச்சினை. குஷன் போட்டு, ஸீட்டை கொஞ்சம் முன்னே நகர்த்தி, கண்ணாடியை திருப்பிவிட்டு......மீண்டும் அவற்றை சரிசெய்ய இவருக்கு கடுப்பு.
Delete"இப்ப கார் ஓட்டுவீர்களா என்று கேட்டால்.?."_______ நீங்க கார் ஓட்ட கற்றுக்கொண்ட கதையில் சுவாரஸியம் அதிகமாய் இருக்கும்போல் தெரிகிறதே. பதிவை சீக்கிரம் வெளியிடுங்க.
சுத்தச்சொல்லி வாழ்த்து சொன்னதற்கு நன்றிங்க.
லைசன்ஸ் வாங்கியாச்சா? அதுவும் முதல் முறையே! சூப்பர்! நாங்கள் எல்லோரும் வருகிறோம். 'லேடீஸ் டே அவுட்' செய்து பார்த்துவிடலாம்.
ReplyDelete'லேடீஸ் டே அவுட்' செய்துதான் பார்ப்போமே ! பயப்படாம என்ன நம்பி வர்றேன்னு சொன்ன ஒரே ஆள் நீங்கதாங்க. நாம மட்டும் முன்னால உக்காந்துட்டு அவங்களல்லாம் பின்னால உக்கார வச்சிடலாம்.
Deleteநீங்க கற்றுக்கொண்ட கதையும் இருக்கும், அதையும் போடுங்க, படிக்க காத்திட்டிருக்கோம்.
எப்படியோ ஒரு வழியாக டிரைவிங் லைசென்ஸ் வாங்கி விட்டீர்கள் மேடம்! மகிழ்ச்சி. சம்பவங்களை விவரித்த விதம் அருமை!
ReplyDeleteவிட்டிருந்தாலும் அந்த வருடத்திற்குள்ளேயே இன்னும் இரண்டு அட்டெம்ண்ட் உண்டு. ஆனாலும் எனக்கு முதல் தடவையிலேயே வாங்கியதில் இரட்டிப்பு மகிழ்ச்சிங்க. வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றிங்க.
Deleteவாழ்த்துகள்.... நீங்கள் ஓட்டுனர் உரிமம் வாங்கியதை ரசித்துப் படித்தேன்.....
ReplyDeleteபதிவுகளை ரசித்துப் படித்ததற்கும், வாழ்த்துகளுக்கும் நன்றிங்க.
Delete