Thursday, February 13, 2014

ஆமையும்............ இயலாமையும்....................!!

நாங்கள் இருக்கும் ஊரில் நிறைய பூங்காக்கள் / Park உண்டு. அவற்றில் ஒரு 'பார்க்'குக்கு மட்டும் அடிக்கடி போவோம். அங்கு செயற்கை குளம் ஒன்று இருக்கும். முழுவதும் நீர் நிரம்பியும் இருக்கும். அதில் நிறைய‌ பறவைகள் தங்குயிருப்பது பார்க்க அழகாய் இருக்கும். எவ்வளவு நேரமானாலும் நேரம் போவதே தெரியாது.

சமீபத்தில் ஒருநாள் அங்கு போனபோது எடுத்தவைதான் கீழேயுள்ள படங்கள்.

'ரைமிங்'கா இருக்கட்டுமே என்று தலைப்பு வைத்ததால் இந்தப் பதிவில் ஆமையும் வந்து ஒட்டிக்கொண்டது. ஒருவர் தூங்குகிறார் !  ஒருவர் சோம்பல் முறிக்கிறார் !!

                                        ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

பகல் நேரமாக இருந்தாலும் நிறைய வாத்துகள் குடும்பம் குடும்பமாக‌ ஆங்காங்கே தூங்கி, ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன.

                                             தண்ணீரில் மிதந்துகொண்டே தூக்கம் !!

                                            மரத்தடியையும் விட்டு வைக்க‌வில்லை !!

                                       ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

அதில் ஒரு சிறிய குட்டியூண்டு வாத்து செடிகளுக்கிடையில் சுகமான தூக்கத்தில்.........

                                             ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

அதன் அழகான தூக்கத்தைக் 'க்ளிக்'கியபோது காமிராவின் Flash பட்டு விழித்துக் கொண்டது.  "இதுவே நான் சிங்கம், புலியா இருந்தா இப்படி எழுப்பி விடுவியா ?" என்று கேட்பதுபோல் ஒரு பார்வையை வீசியபோது............

"ஸாரி ஸாரி, தெரியாத்தனமா(!) உன் தூக்கத்த கலச்சிட்டேன், நீ தூங்குதூங்கு" என மனதளவில் கெஞ்சினாலும் .......................

                                     ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

"க்ர்ர்ர்ர்ர், எழுப்பிய உன்ன‌ ஒன்னும் செய்ய முடியல‌யே" என‌ தன் இயலாமையை நினைத்து நொந்துபோய் அங்கிருந்து வெளியேறி, வேறிடம் தேடிப்போனது மனதுக்கு கவலையாய் இருந்தது. இனியாவது நான் திருந்துவேனா பார்க்கலாம் !!
                                       
                                     ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

20 comments:

 1. Replies
  1. வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் நன்றிங்க.

   Delete
 2. என்ன ஒரு போட்டோகிராபி. உங்கள் கேமிரா கவிதை பாடுகிறதே. Flickr இல் போடுகிறீர்களா உங்கள் புகைப் படங்களை. மிக மிக அருமை உங்கள் ஆமை. ரசித்தேன் சித்ரா.

  ReplyDelete
  Replies
  1. எப்போதோ ஃப்ளிக்கரில் அக்கவுண்ட் ஓபன் செய்ததோடு சரி, அப்புறம் அந்தப் பக்கமே போகல. படங்களை ரசித்துப் பின்னூட்டமளித்தது சந்தோஷம்ங்க.

   Delete
 3. அழகான வாத்துக் கூட்டம்! :) குட்டி வாத்தின் தூக்கத்தைக் கலைச்சுட்டீங்கள்ல..கனவில சின்னவாத்து வந்து உங்க தூக்கத்தைக் கலைக்கும், ஜாக்கிரதை! ;) :)

  ReplyDelete
  Replies
  1. இப்படில்லாம் சாபம் கொடுத்தா .......... கனவப்பத்தி கவலப்படாம லயாக் குட்டியையும் கிள்ள்ள்ள்ள்ள்ள்ள்ளி விட்டு எழுப்பி விட்டுடுவேன், ம்ம்ம்........ஜாக்கிரதை !

   Delete
  2. ;)) இந்த டயலாக் பார்த்து போட வந்த கமண்ட்டும் மறந்து போச்சு! ;)

   Delete
 4. படங்களனைத்தும் பளிச்சென்று இருக்கிறது சித்ரா. க்யூட் வாத்துக்குஞ்சு.

  ReplyDelete
  Replies
  1. குட்ட்ட்டி வாத்து உங்களையும் கவர்ந்துவிட்டதா!!

   Delete
 5. படங்களுக்கு பொருத்தமான கமெண்ட் கொடுத்திருந்தீங்க மேடம். வாத்துப்படங்கள் கொள்ளை அழகு!

  ReplyDelete
  Replies
  1. அவை ஏதோ பேச வருவது மாதிரி தெரிவதால் கமெண்டுகளுடன் போட்டுவிடுகிறேன். பாராட்டுகளுக்கு நன்றிங்க‌.

   Delete
 6. அழகான படங்கள். கனவுல வந்து மிரட்டிச்சா!

  ReplyDelete
  Replies
  1. 'ஃப(ர்)ஸ்ட் எய்ட் கிட்ஸ்'ஸுடன் ரெடியாதான் இருக்கேன். ஆனாலும் காணோம், ரொம்ப பயந்திடுவேன்னு வரலையோ என்னவோ தெரியலீங்க.

   Delete
 7. வாத்துகள் எவ்வளவு அழகாகப் படமெடுக்க ஒத்துழைக்கிறது? மிக்க அழகான குட்டி வாத்து கேட்டதே ஒரு கேள்வி. மனதைத் தொட்டு விட்டது. ஏகாந்தம் விட்டுக் கும்பலுடன் கோவிந்தா
  போடட்டுமே. அழகுப் படங்கள்.அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. காமாக்ஷிமா,

   இவங்க எல்லோருக்கும் பகல் தூக்கம் என்பதால் யாரையும் கண்டுகொள்ளவில்லை. குட்டி வாத்தின் நடை அழகைப் பார்த்ததும் பாவமாகிவிட்டது. இனி 'கும்பலுடன் கோவிந்தா போடுவதை' ரசிப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.

   நினைவு வைத்து வந்து பின்னூட்டமிட்டது மகிழ்ச்சிம்மா. அன்புடன் சித்ரா.

   Delete
 8. அழகான படங்கள்...... ஒவ்வொரு படமும் ஒரு கதை சொல்லும் போல! :)))

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றிங்க வெங்கட் நாகராஜ்.

   Delete
 9. நானும் அந்தக் குட்டி வாத்து போலத்தான். தூங்கும்போது கலைத்துவிட்டால், மூட் போய்விடும். ஆமை படம் ரொம்பவும் பிடித்திருந்தது. குளத்தின் நடுவில் உள்ள பாறைகளின் மேல் உட்கார்ந்திருக்கின்றனவா அவை இரண்டும்?

  ReplyDelete
  Replies
  1. தூக்கத்தைக் கலைத்தால் எனக்கும்கூட பிடிக்காது. அந்த பாதிப்புதான் கமெண்ட்டாகிவிட்டது.

   ஆமாங்க, குளத்தின் நடுவே ஆமைகளுக்கு பலகை, கற்கள் வைத்து ஏதோ செஞ்சு வச்சிருக்காங்க. எப்போ போனாலும் அவங்க ரெண்டு பேரும் அந்தப் பலகை மேலதான் இருக்காங்க. கொஞ்ச நேரம் நின்று பார்ப்பதில் ஒரு சந்தோஷம். வருகைக்கு நன்றிங்க.

   Delete