Monday, March 17, 2014

வெள்ளைப் பூ


இந்தப் பூவின் பெயர் தெரியவில்லை. இது பூத்திருப்பது ஒரு சிறிய மரத்தில், இல்லையில்லை செடியில் என்றுதான் சொல்ல வேண்டும். இன்னும் சில வருடங்களானால் மரமாகப் பார்க்கலாம்..

குளிர் காலத்தில் இந்தச் செடி  இலைகளை உதிர்த்தவுடன் ஒரு சிறு ஆர்வம் எட்டிப் பார்க்கும். இன்னும் கொஞ்ச நாளில் வெண்பூக்கள் பூக்க ஆரம்பித்துவிடும் என்று.  ஏற்கனவே என் வலைப்பூவில் இந்தப் பூ உலா வந்திருந்தாலும் இந்த வருடமும் ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்டது.

வெண்ணிற மொட்டுகளை மூடியுள்ள நிறமற்ற மேலுறையுடன்.


மேலுறையை நீக்கிவிட்டு வெளியே எட்டிப் பார்க்கும் மொட்டுக்கள்.


சீக்கிரமே பூத்திடுவோமில்ல !குட்டிக்குட்டி டியூப்லைட் போட்ட மாதிரி என்ன ஒரு அழகு !  அதற்கு வானமும் ஒத்துழைக்க வேண்டும். நீல வானமில்லாமல், வெண் மேகங்கள் சூழ்ந்திருந்தால் ..... ?இலைகளே இல்லாத மரத்தில் பெரிய பெரிய வெள்ளை மொட்டுகளைப் பார்ப்பதே தனி அழகுதான்.


பூக்க ஆரம்பிச்சிட்டாங்க‌ !    ரெடி............ஒன் ..............டூ ...............


த்ரீ ........!


முழுவதும் பூத்த நிலையில்.......!    வானம் நீல நிற‌மாக இருந்திருந்தால் செடி பளிச்சென இருந்திருக்கும்.


இன்றைய(03/17/14)  நிலையைப் பார்க்க வேண்டாமா ?


 கொஞ்சம் அருகில்.......


நான் ஏற்கனவே 'வாக்' போன வழியும், இப்போது 'வாக்' போகும் பூங்காவூம் சந்திக்குமிடம் இதுதான்.

20 comments:

 1. யு.எஸ். வந்தபிறகுதான் இப்படி முதலில் பூத்து பின்னர் துளிர்க்கும் மரங்களைப் பார்க்கிறேன் சித்ராக்கா! :) நம்ம ஊர்ல இருக்கா என கவனிச்சதில்லை. இந்தப் பூ மொட்டுக்கள் எனர்ஜி சேவர் பல்ப்:) மாதிரியே அழகழகா இருக்கு. இலை வந்த பிறகு பார்த்தா அந்தச் செடிதானா இது மிக சாதாரணமான செடியா இருக்கு போங்க! ;)))

  ReplyDelete
  Replies
  1. "மிக சாதாரணமான செடியா இருக்கு போங்க" ________ எவ்ளோ அழகா இளம் பச்சைத் துளிர்களுடன் ................ பெரிய பெரிய இலைகளுடன் ....... கண்ணுக்கு பசுமையா ........ இதைப்போய் ...... ஹும்.....

   ஃபர்ஸ்ட் இங்க வந்தப்போ ஒரே ஆச்சரியம், இலையே இல்லாத மரத்துல இவ்வளவு பூக்களான்னு ! எல்லாமும் தலைகீழ்தான்.

   Delete
 2. ஆகா... ஆகா... என்ன அழகு...! என்ன அழகு...!

  ReplyDelete
  Replies
  1. வாங்க தனபாலன், பூக்களைப் பார்த்து ரசித்ததற்கும் நன்றிங்க.

   Delete
 3. தில்லியிலும் இப்பூக்கள் உண்டு. பெயர் தான் தெரியவில்லை.......

  நல்ல படங்கள். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. அப்படின்னா குளிர் பிரதேசங்களில் வளரும்போல் தெரிகிறது. இதன் பெயரை 'மக்னோலியா'ன்னு இமா சொல்லியிருக்காங்க.

   வருகைக்கு நன்றிங்க வெங்கட்.

   Delete
 4. அழகான பூக்கள். படங்களை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி தோழி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க‌ தமிழ்முகில்.

   Delete
 5. cherry blossom திருவிழா பார்த்திருக்கிறேன். இந்தப் பூக்கள் தானோ?

  ReplyDelete
  Replies

  1. செர்ரி ப்ளாஸம் குட்டிகுட்டியா இருக்கும். http://chitrasundars.blogspot.com/2013/03/cherry-blossom.html இங்க இருக்கு பாருங்க.

   Delete
 6. இது மக்னோலியா. மக்னோலியாவில் வேறு வகைகளும் (நிறங்கள்) இருக்கிறது. பூக்கள் பெரியவை. இதழ்களும் தடிமனாக இருக்கும். இலைகள் பெரிதாக இருக்கும். சிலர் இவற்றை 'ட்ரீ ட்யூலிப்' என்பார்கள்.

  செரி ப்ளொசம் குட்டிக் குட்டிப் பூக்கள். இறகு போல் மென்மையான இதழ்கள். கிளைகள் தெரியாமல் மரம் நிறைந்து பூக்கும். காற்று வீசினால்... பூ மாரி தான். அந்த அழகு சொல்ல வார்த்தை இல்லை.

  ReplyDelete
  Replies
  1. 'மக்னோலியா' என்பது இப்போதுதான் தெரிய வந்தது. சாலையோரங்களில் பெரியபெரிய‌ பிங்க், சிவப்பு, வெள்ளைத் தாமரைப் பூக்கள் மாதிரியும் நிறைய இருக்கின்றன.

   செர்ரி ப்ளாஸம் __ அது ஒரு தனியழகு. இதை போன வருஷ‌மே பதிவாக்கியிருக்கிறேன். எங்க வீட்டு வாசலிலேயே இருக்கு. இதைப் பார்க்க http://chitrasundars.blogspot.com/2013/03/cherry-blossom.html இங்கே வாங்கோ. இவை உதிரும்போது எனக்கு புளியம் பூ ஞாபகம்தான் வரும்.

   Delete
 7. இமா http://chitrasundar5.wordpress.com/2012/03/14/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/ இங்குகூட இருக்கு பாருங்க !!

  ReplyDelete
 8. https://www.google.co.nz/search?q=magnolia+tree&espv=210&es_sm=93&source=lnms&tbm=isch&sa=X&ei=iMEpU4DkBoSnlAXN3ICwAg&ved=0CAkQ_AUoAQ&biw=1517&bih=741&dpr=0.9

  இதுதானே!

  ReplyDelete
 9. http://www.magnoliagrove.co.nz/index.php/component/k2/tag/white

  ReplyDelete
  Replies
  1. இமா,

   இந்த வகைப் பூக்கள்தான். சிவப்பு நிற பூவைக்கூட படங்கள் எடுத்து வச்சிருக்கேன். தேடி எடுத்து போட்டுவிட்டு சொல்கிறேனே.

   Delete
 10. நீல நிறப் பின்னணியில் வெள்ளைப் பூக்கள் பார்க்கப் பார்க்க அழகு!
  ஏனென்று தெரியவில்லை. உங்கள் பதிவுகள் எனக்கு இப்போது மின்னஞ்சலில் வருவதே இல்லை. நீங்கள் மகளைப் பார்க்க போயிருக்கிறீர்களோ, என்னவோ, அதுதான் ஒன்றும் எழுதவில்லை போல என்று நினைத்துக் கொண்டிருந்தேன், இவ்வளவு நாளும். இங்கு வந்து பார்த்தால், நிறைய இருக்கிறதே! எப்படிப் படிக்க போகிறேன்?

  விரைவில் முடித்துவிடுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. மகள்தான் 'ஸ்பிரிங் ப்ரேக்'குக்கு வீட்டுக்கு வந்திருந்து ஞாயிறு ஸ்கூலுக்கு போனாள்.

   இப்படித்தான் ஆகிறது. சில சமயங்களில் என்னுடைய பதிவுகளுமே டேஷ்போர்டில் வரமாட்டிங்குது. வருகைக்கும் நன்றிங்க.

   Delete