Monday, March 31, 2014

அவனா ? அவளா?



  அதாங்க , சூரியனா ?    சந்திரனா?

                       ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இன்று மதியம் 1:00 மணிக்கு மழை வருவதற்கு, காலை 10:30 மணிக்கே வானம் நடத்திய நாடகத்தில் சூரியன் ஏற்ற வேடம்தான் இது.

சந்திரன் மாதிரியே சூரியன் கருமேகங்களுக்கிடையே ஒளிந்து ஒளிந்து கண்ணாமூச்சி ஆடியதைப் பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது !

                    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

8 comments:

  1. எதுவென்றாலும் அழகு தான்...

    ReplyDelete
    Replies
    1. நல்லவேளை, கண்டுபிடிக்கல. 'சூரியன்'தாங்க அது.

      Delete
  2. நல்ல கேள்வி.... ஆனா பதில் தான் தெரியலை! :)

    ReplyDelete
    Replies
    1. சூரியனேதான். இன்று காலை படத்தை எடுத்த பிறகு எனக்கே சந்தேகம், சூரியனா அல்லது நிலாவான்னு . அதான், பதிந்துவைத்தேன். வருகைக்கு நன்றிங்க வெங்கட்.

      Delete
  3. அந்த மேகக் கூட்டம் எழுதியிருக்கும் ஓவியத்தைத் தான் " அவனா? அவளா? " என்று கேட்கிறீர்கள் என்று நினைத்தால் கடைசியில் சூரியன் என்று சொல்லி விட்டீர்களே! நீங்கள் எப்பவும் கையில் கேமிராவுடன் தான் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். படம் எடுப்பதில் ஆர்வமோ? Flickr என்கிற தளத்திலும் பகிர்ந்து கொள்ளுங்கள். இன்னும் நிறைய பேர் ரசிக்க வாய்ப்புண்டு. .
    அருமையாய் கற்பனையை தூண்டும் புகைப் படத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சித்ரா.

    ReplyDelete
    Replies
    1. கேமிரா எடுத்துப் போகலீங்க‌. இது அலைபேசியிலுள்ள கேமிராவின் மூலம் எடுத்தது. 'வாக்' போனபோது பகல் நேரம் இருட்டுவதும் பிறகு வெளிச்சமாவதுமாக இருந்ததால் ஒரே ஜாலிதான். விட்டால் அங்கேயே உட்கார்ந்திருப்பேன். சமைக்க வேண்டுமே என வந்துவிட்டேன்.

      உங்கள் கற்பனையைப் பார்த்து இப்படியும் யோசிக்காமல் போனோமே என்று நினைத்துக்கொண்டேன். வருகைக்கு நன்றிங்க.

      Delete
  4. ரொம்பவும் யோசிக்க வைச்சுட்டீங்க! கடைசியில் நீங்களே விடையும் சொல்லியது அப்பாடா என்று இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. விடையை சொல்லாமல் விட்டால் எனக்கே சந்தேகம் வந்தாலும் வந்துவிடும் என்று பயந்துதான் அடுத்த நாள் எழுதிட்டேங்க‌.

      Delete