நேற்று சமையல் ப்ளாகல இட்லி சுட்டுக்கொண்டிருக்கும்போதே கொஞ்சம் போரடித்ததால் இங்கே வந்து முதல்நாள் எடுத்து வைத்த பைனாப்பிள் படங்களை பதிவில் ஏற்றி, அதிலிருந்து மேலேயுள்ள இரண்டு படங்களைப் பதிவாக்க நினைத்துதான் ஆரம்பித்தேன். ஏதோ ஞாபகத்தில் சென்ற பதிவை பப்ளிஷ் பண்ணிவிட்டேன்.
மகியின் பின்னூட்டத்திற்கு பதில் போட்டபோதுகூட எனக்கு சந்தேகம் வரவில்லை. இட்லி பதிவை பப்ளிஷ் பண்ணிவிட்டு இங்கே வந்த பிறகுதான் நான் செய்த தவறு தெரிந்தது.
மகி மட்டுமே பார்த்திருக்கக்கூடும், படங்களை மாற்றி விடலாமா என்றுகூட நினைத்தேன். சரி போய்ட்டு போவுது விடுங்க, ஸ்டூடன்ஸுக்கு தேர்வு எளிமையாக இருந்து, முழு மதிப்பெண்களை பெற்றதில் சந்தோஷப்பட்டுக்கொண்டேன் !!
எல்லோருமே பாஸ் பண்ணிட்டதால அதைக் கொண்டாடும் விதமாக எல்லோரும் பழத்துண்டுகளை எடுத்துக்கோங்க. பயப்படாம எடுங்க, உப்பு போட்டு குலுக்கித்தான் வச்சிருக்கேன்.
அறுவடைக்கு உதவியவங்களுக்கெல்லாம் ஒரு டிப்ஸ்:
எல்லா பழங்களும் முழுசா பழுக்கும்போது பைனாப்பிள் மட்டும் அடியிலிருந்துதான் பழுக்குமாம். அதனால் பழத்தின் மேலேயுள்ள தோகையைத் திருகிப் போட்டுவிட்டு, பழுக்கும்வரை பழத்தை தலைகீழாக நிற்க வைத்து விடுங்கள். இப்போது கீழேயும்(மேல்பகுதியும்) பழுக்க ஆரம்பித்துவிடும்.
பிறகென்ன முகர்ந்து பார்த்து பழுத்த வாசனை வந்ததும் நறுக்கிட வேண்டியதுதான்.
டிப்ஸ் சூப்பர்....!
ReplyDeleteபழத்துண்டுகளை எடுத்துக் கொண்டேன்... ஹிஹி...
இவ்வளவு விரைவான பின்னூட்டமா !! வருகைக்கும், பழத்துண்டுகளை எடுத்துக்கொண்டதற்கும் நன்றிங்க தனபாலன்.
Delete// தலைகீழாக நிற்க வைத்து// சூப்பர் டிப். ;)
ReplyDeleteவெகு காலம் முன்பு எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் சொன்ன டிப் இது. இப்படி அன்னாசி ஒரு பக்கமிருந்து பழுத்து வருவதால் வெட்டும் போது வட்டமாக வெட்டினால் ஆள் ஆளுக்கு வேறு சுவையுள்ள துண்டுகள் கிடைக்குமென்று நீளவாட்டுக்கு துண்டு போடச் சொன்னார். எல்லோருக்கும் சம நீதி. :-)
"எல்லோருக்கும் சம நீதி" _______ நச்சுன்னு ரொம்பவே பிடிச்சுப் போச்சு.
Deleteஇங்கு ஒரு டிவி 'ஷோ'வில் சொன்னபோதுதான் எனக்கும் தெரிய வந்தது. பிறகு பைனாப்பிளை பார்க்கும் போதெல்லாம் இந்த ஞாபகம்தான் வரும்.
பழம் பழுக்க கொடுத்த டிப்ஸ் அருமை.நன்றி தோழி.
ReplyDeleteஉங்களுக்கும் இந்த டிப்ஸ் புதுசா !! வருகைக்கும், தோழியாக ஏற்றுக்கொண்டதற்கும் நன்றிங்க தமிழ்முகில்.
Delete:)
ReplyDeleteUseful tips..pineapple looks orangyyyy n yumm!! Is it from farmers market as well?? :)
Any tips to find the sweet pineapple akka? Few times it was sour n I stopped buying pineapple! :-/
இது எங்க தெருவிலுள்ள ஒரு பழக்கடையில் வாங்கியது மகி. நிறைய பலாப்பழங்கள் வந்திருந்தன. ஒரு எல்பி $1:39 தான். அடுத்த வாரம் வாங்கிக்கலாம்னு வந்திட்டோம். மாங்கா, தேங்கா, பலா, பைனாப்பிள், கொய்யா எல்லாமும் வீட்டுக்காரர் தேர்வு செய்வதுதான். காஸ்கோவுல எடுத்தாக்கூட நல்லாருக்கும்.
Deleteபிஞ்சா இருந்தாத்தானே புளிப்பு தெரியும். நல்லா முத்தினதா, அடிபடாம இருக்கறதா எடுக்கணும்னு நினைக்கிறேன். அந்த முத்தினது எப்படி இருக்கும்னுதான் தெரியலே. ஒருவேளை நல்லா வெளஞ்சிருந்தா அடி முதல் நுனி வரை ஒரே அளவா இருக்குமோ !
சீக்கிரமே மகி நல்ல இனிப்பான பைனாப்பிள் வாங்கி சுவைக்க வேண்டும் !
I will come to idli post later..saw that yesterday itself! :)
ReplyDeleteவாங்க, வாங்க !
Deleteபழ டிப்சிற்கு நன்றி சித்ரா. இதுவரை நான் அறியாத செய்தி பகிர்ந்தமைக்கு நன்றி. இதோ இட்லி சாப்பிட சென்று கொண்டிருக்கிறேன்.
ReplyDeleteஇந்த டிப்ஸ் எல்லோருக்கும் தெரியும் என்றுதான் நினைத்தேன். வாங்க வாங்க, எங்க வீட்ல தினமும் இட்லி & தோசைதான். சாம்பார் & தேங்காய் சட்னியுடன் சூப்பரா சாப்பிடலாம்.
Deleteபழம் எடுத்துக்கொண்டேன்.... நன்றி.
ReplyDeleteவருகைக்கும், பழம் எடுத்துக்கொண்டதற்கும் நன்றிங்க.
Deleteபைனாப்பிள் சாப்பிட்டாச்சு! நாளைக் காலைல ப்ரேக்பாஸ்ட் இட்லி! பதிவைப்படித்துவிட்டேன். பின்னூட்டம் போட்டவுடன் மின்சாரம் போயே போச்சு!
ReplyDeleteமறுபடி படித்துவிட்டு எழுதுகிறேன், சரியா?
உங்க ஊரிலும் கரண்ட கட் ஆகுமா? கண்ணாலேயே சாப்பிட்டு முடிச்சாச்சா ! நீங்க மெதுவாவே வந்து எழுதுங்க.
Delete