Tuesday, March 25, 2014

செடியின் உயரத்தை அளப்போமா !!!

காலையில் 'வாக்' போனபோது பளிச்சென இருந்த வானம் இப்போது மூடிக்கொண்டு லேஸான தூறலுடன் ஒன்றும் செய்ய விடாமல் வேடிக்கை பார்க்க வைத்துக் கொண்டிருக்கிற‌து.


நமக்குத்தான் சோம்பலாக இருந்தால் பிடிக்காதே !! ஏதாவது வேலை செஞ்சே ஆகணுமில்ல ! அதான், ஒரு சேஞ்சுக்கு இன்று இப்பதிவிலுள்ள செடிகளின் உயரத்தை அளந்து பார்க்கப் போகிறேன் !!

விருப்பமிருந்தால் நீங்களும்கூட‌ அளந்து சொல்லலாம் !



கூரையை எட்டிப் பிடிக்கும் இவ்ளோ உயர செடிகளை எப்படி அளப்பது என முழிக்காம, சீக்கிரமா போய் மி.மீ, கி.மீ, இன்ச், சாண், முழம், அடி, உதை என எதெல்லாம் இருக்கோ அதையெல்லாம் கொண்டு வாங்க, அளந்து பார்த்திடலாம் !!


நீங்க சொல்ற அளவையெல்லாம் வச்சு, கணக்கு பண்ணி, முடிச்சு போட்டு, ஒரு குத்துமதிப்பா, எவ்ளோ உயரம்னு நாளை வந்து சொல்கிறேனே !!

6 comments:

  1. Beautiful! I got some of these snapdragon plants last week akka!

    These are very strong, got a few in 2012, those yellow color flowering plants r still coming in all the pots, wherever the seeds went! :)

    ReplyDelete
    Replies
    1. ஹும், எல்லா செடியும் வாங்கி வச்சிருக்கீங்க. செடியின் முக்கால்வாசி, பூவா இருக்கற‌து பார்க்க அழகா இருக்கில்ல. ஓ, இதுக்கு விதையும் உண்டா !

      அதுசரி, உயரத்த அளக்கச் சொன்னா ஏதோ கதை சொல்லிட்டுப் போயிட்டீங்க. ம் ... அது தெரியாம நானும் கதை அடிச்சிட்டிருக்கேன்.

      Delete
  2. snapdragon plants.... இந்த செடி தமிழ்நாட்டில் இருக்கா?

    தில்லியின் சில இடங்களில் பார்த்த நினைவு. குத்து மதிப்பா சொல்லிடலாம்! :)

    ReplyDelete
    Replies
    1. தமிழ் நாட்ல இருக்கான்னு தெரியலயே. பண்ணையில் கேட்டுப் பார்க்கலாம்.

      இதோ, இன்னும் கொஞ்ச நேரத்துல குத்துமதிப்பா சொல்லிவிடுகிறேன்.

      Delete
  3. ஆகா... வண்ண வண்ணமாக என்னே அழகு...!

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க, பசுமையான குட்டிகுட்டிச் செடிகளில் அதன் உயரத்தில் பாதிக்கும்மேல் பூவாக இருக்கும்போது ஒரு தனி அழகுதான்.

      வருகைக்கும் நன்றிங்க.

      Delete