திங்கள், 24 மார்ச், 2014

விலைமதிப்பில்லா (அன்)பூ !!


இவ்வலைப் பூவில் பல பூக்கள் உலா வந்திருந்தாலும் இன்றைய பூ உலா கொஞ்சம் வித்தியாசமானது.


வியாழன் நண்பகல் விடுப்பில் வீட்டுக்கு வந்த மகள்  உள்ளே நுழைந்ததும் நுழையாததுமாக‌ சூட்கேஸைத் திறந்துகொண்டே 'அம்மா, உனக்கு நான் ஒன்னு வாங்கிட்டு வந்திருக்கேன், என்னன்னு கெஸ் பண்ணு பார்க்கலாம்'  என்றாள். 

'ம்....ம்....ம்.... யோசித்துப் பார்த்தேன் ............  யோசித்துப் பார்த்தேன், ..... ம்ஹூம் ...... எதுவுமே நினைவுக்கு வரவில்லை.


"உனக்காக நான் வாங்கிக்கொண்டு வந்தது இதுதான், எவ்ளோ சூப்பரா இருக்கு பாரு "  என்று சொல்லிக்கொண்டே படத்திலுள்ள இந்த குட்டியூண்டு Solar Dancing Flower பொம்மையை எடுத்துக் கொடுத்தாள். 

எனக்கு சந்தோஷத்தில் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

பொம்மையை சூரிய ஒளியில் வைத்தாள், பூவுடன், இலைகளும் சேர்ந்து ஆட்டம் போட்டதைப் பார்த்து ரசித்தோம்.


இரண்டு வருடங்களுக்குமுன் 'சான்ஃப்ரான்சிஸ்கோ'வில் china town வழியாக பேருந்தில் போய்க்கொண்டிருந்தபோது ஒரு கடையில் படத்திலுள்ளதுபோல் கண்ணைப் பறிக்கும் பல நிறங்களில் குட்டிக்குட்டி பொம்மைகள் ஆடிக்கொண்டிருந்தது மனதைக் கவர்ந்தது.

நான் இவர்களிடம் 'காரில் வந்திருந்தால் பொம்மையை வாங்கியிருக்கலாம்' என்றேன். அதன்பிறகு அதை மறந்தே போனேன்.

பக்கத்து ஊர் mall க்கு போன சமயம் அங்கிருந்த ஒரு கடையில் இதைப் பார்த்ததும் அதை நினைவு வைத்து வாங்கி வந்திருக்கிறாள்.


உண்மையிலேயே கொள்ளை அழகாகத்தான் தெரிகிறது !

8 கருத்துகள்:

 1. அழகு... தங்களின் மகளுக்கும் வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றிங்க தனபாலன்.

   நீக்கு
 2. இது தில்லியில் சில வருடங்களாகவே இருக்கிறது. இங்கேயும் சீனாவிலிருந்து இறக்குமதி!

  இப்போது அதன் மோகம் குறைந்துவிட்டது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதன் நிறம் பலரையும் ஈர்ப்பதில் வியப்பில்லை. வருகைக்கும், கருத்துப் பகிர்விற்கும் நன்றிங்க.

   நீக்கு
 3. 2011ல் சென்னையில் கார்களில் தலையாட்டிய பூக்களைப் பார்த்து ஆசைப்பட்டு எங்கள் குட்டி ஃப்ரென்ட் பீட்டரைக் கொண்டு 3 பூக்கள் வாங்கி வந்தோம். ஒவ்வொரு காரிலும் ஒவ்வொன்றும் சமையலறை ஜன்னலில் ஒன்றுமாக இன்னமும் எங்களோடு சந்தோஷத் தலையசைப்போடு பேசுகின்றன. இவற்றின் அழகால் கவரப்படாதவர் இருக்க முடியாது.

  மகள் நினைவாக வாங்கி வந்திருக்கிறாரே! உங்களிருவருக்கும் என் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இங்கும்கூட நிறைய கார்களில் பார்த்திருக்கிறேன். குட்டியூண்டு, க்யூட்டா ஆடுவது எல்லோருக்குமே பிடிச்சுபோச்சு போல.

   மகள் வாங்கி வந்திருக்கிறாள் எனும்போது அது இன்னும் ஸ்பெஷலாகிவிட்டது. இமா, உங்களின் மனம் நிறைந்த வாழ்த்துக்களில் மகிழ்ச்சி :))

   நீக்கு
 4. இங்கே ஒரு வீட்டில் இந்தப் பூக்களை பேடியோ-ல அழகா வைச்சிருப்பாங்க. கண்ணில் பட்டால் வாங்கலாம்னு பார்த்துட்டே இருக்கேன், கிடைக்கலை. புனிதா மறக்காம வாங்கி வந்ததால் இந்தப் பூவுக்கு விலைமதிப்பே இல்லதான்! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பக்கத்துல சைனீஸ் கடை இருக்கான்னு தேடிப்பாருங்க. குட்டிகுட்டியா, நல்லா அடிக்கிற கலர்ல, ஆடிட்டே இருக்கறதால சூப்பரா இருக்கு மகி.

   நீக்கு